இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது..!

மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்த கொள்வதற்கான அரசு நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு.சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது..!
Published on

இலங்கையின் முன்னாள் அதிபரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே-வை, நாட்டின் நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டில், சிஐடி தலைமையகத்தில் விசாரணைக்காக ஆஜராகியபோது, போலீசார் கைது செய்துள்ளனர். ரணில் விக்ரமசிங்கேவுக்கு 76 வயதாகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள நிதியை பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது.

முன்னதாக சிஐடி போலீசாரல் பயணச் செலவு குறித்து அவருடைய ஸ்டாஃப்களிடம் விசாரணை நடத்தியிருந்தது.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோதபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகியபோது, ரணில் விக்ரமசிங்கே, அதிபராக பதவி ஏற்றார். 2022 முதல் செப்டம்பர் 2024 வரை அதிபராக இருந்தார். 6 முறை இலங்கை பிரதமராக இருந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com