என் மலர்
உலகம்

வாக்குவாதம் எதிரொலி: இத்தாலியில் விமான நிலைய கவுண்ட்டருக்கு தீ வைத்த பயணி
- பயணிக்கும், விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
- ஆத்திரம் அடைந்த பயணி சுத்தியலை எடுத்து கண்ணாடியை உடைத்தார்.
ரோம்:
இத்தாலியின் மிலன் நகரில் மால்பென்சா விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு உடைமைகளை சோதனை செய்வதற்காக பயணிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது 1-வது முனையம் வழியாகச் சென்ற ஒரு பயணிக்கும், விமான நிலைய ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணி தான் மறைத்து வைத்திருந்த சுத்தியலை எடுத்து அங்கிருந்த கண்ணாடியை உடைத்தார். அதன்பின் அங்கிருந்த கவுண்ட்டருக்கு தீ வைத்தார். இதனைப் பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story






