என் மலர்
தலைப்புச்செய்திகள்
- நயினார் நாகேந்திரன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டியை தொடங்கி வைக்க பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார்.
அங்கு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு சென்றார்.
அவருடன் தமிழக பா.ஜ.க. மேலிட பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் ஆகியோரும் வந்தனர்.
பின்னர் 3 பேரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர், மரியாதை நிமித்தமாகவே எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததாக நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இந்நிலையில், சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்," பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேர்தல் சுற்றுப் பயணம் தொடங்க உள்ளது குறித்து மட்டுமே என்னுடன் ஆலோசித்தார்.
2026 தேர்தலில் திமுகவுக்கும் - தவெகவுக்கும் இடையேதான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர மக்கள் கருத்து கிடையாது" என்றார்.
- பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
- இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அமெரிக்காவின் தென் கரோலினா பகுதியில், இந்திய வம்சாவளி பெண்ணான கிரண் பட்டேல் (49) என்பவர் பெட்ரோல் பங்கை நிர்வகித்து வந்தார். இவர் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர்.
இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பெட்ரோல் பங்கிற்குள் வாலிபர் கொள்ளையடிக்கும் நோக்கில் துப்பாக்கியுடன் நுழைந்தார்.
அந்த வாலிபர் மீது ஒரு பாட்டிலை எறிந்து விட்டு கிரண் படேல் தப்பி ஓடினார். அப்போது வாலிபர் துப்பாக்கியால் சுட்டதில் கிரண் பட்டேல் உயிரிழந்தார்.
உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் இந்திய பெண்ணை சுட்டு கொன்றது ஜேடன் மேக் ஹில்(வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஷென்சென் நகரில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, கொரிய ஜோடியுடன் மோதியது.
பீஜிங்:
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடைபெற்றது.
இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஜோடி, தென் கொரியாவின் கிம் வொன் ஹோ - சியோ ஷெங் ஜே ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய தென் கொரிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த போட்டி 45 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
ஏற்கனவே, ஹாங்காங் ஓபன் தொடரிலும் இந்தியாவின் சாத்விக் சிராக் ஜோடி 2-வது இடம் பிடிததது என்பது குறிப்பிடத்தக்கது.
- சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது.
- நவராத்திரி முதல் நாளில் இந்தியர்களுக்கு கிடைத்த இனிப்பே ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடியை அறிவித்தது.
அதேபோல் இப்போது ஜிஎஸ்டியிலும் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா.
இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது.
சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது.
இரண்டாம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும்.
பல்வேறு பெயர்களில் ஆன மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன.
உங்களுக்குப் பிடித்தமான பொருள்களை குறைக்கப்பட்ட விலையில் நாளை காலை முதல் வாங்க முடியும்.
இந்தியர்கள் அன்றாட வாழ்வில் வெளிநாட்டு பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனா்.
உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும்.
சிறு, குறு, தொழில்கள் மக்களுக்கு தேவையான பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.
- சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
- லோகா திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது. இப்படத்தை துல்கர் சல்மான் தயாரித்துள்ளார்.
வசூலில் முதல் இடத்தை பிடித்த மோகன்லால் நடித்த எம்புரான் படத்தை வெளியாகி 24 நாட்களில் லோகா திரைப்படம் தாண்டி மலையாள சினிமா துறையில் அதிகம் வசூலித்த திரைப்பட அந்தஸ்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், லோகா திரைப்படம் விரையில் OTT-ல் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தயாரிப்பாளர் துல்கர் சல்மான் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர்," போலிச் செய்திகளை புறக்கணித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருங்கள்" என்றார்.
- புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா ஆகும்.
- ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள், இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று மாலை உரையாற்றி வருகிறர். அப்போது அவர் கூறியதாவது:
நவராத்திரி முதல் நாளில் இந்தியர்களுக்கு கிடைத்த இனிப்பு ஜிஎஸ்டி சீர்திருத்தம்.
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கையால் நடுத்தர மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் என நம்புகிறேன்.
வரிகுறைப்பு நடவடிக்கை முதலீடுகளை ஊக்குவித்து வளர்ச்சியை ஊக்கப்படுத்தும்.
நாளை முதல் மக்களின் சேமிப்பு அதிகரிக்கும்,
புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா.
தீபாவளி பண்டிகைக்கான இனிப்புகளாக ஜிஎஸ்டி சீர்திருத்தம் அமையும் என தெரிவித்தார்.
- சிறியவர்கள், பெரியவர்கள் என்று கூட பார்க்காமல் தாறு மாறாக பேசுகிறார்கள்.
- பத்து பேர் சேர்ந்து சினிமாவையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையில் இன்று நடைபெற்ற நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர் வடிவேலு பேசியதாவது:-
நமக்குள் கொஞ்சம் ஒற்றுமை குறைவாக உள்ளது. அனைவரிடமும் ஒற்றுமை வரவேண்டும்.
சமூக வலைதளங்களில் திரை உலகினரை பற்றி சிறியவர்கள், பெரியவர்கள் என்று கூட பார்க்காமல் தாறு மாறாக பேசுகிறார்கள்.
நம்ம ஆட்களிலேயே சில பேர் அவர்களுக்கு துணை போகிறார்கள். பத்து பேர் சேர்ந்து சினிமாவையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து தவறாக பேசுபவர்களுக்கு 'ஆப்பு' வைக்க வேண்டும். நம்மை தூங்க விடாமல் ஆக்கும் அவர்களை தூங்கவிடாமல் செய்து நாம் நிம்மதியாக தூங்க வேண்டும். அவதூறு கருத்துக்களை பரபரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
- கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.
- இதில் போலந்து வீராங்கனை ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றார்.
சியோல்:
பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்றது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அலெக்சாண்ட்ரோவா முதல் செட்டை 6- 1 என எளிதில் வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட இகா ஸ்வியாடெக் அதிரடியாக ஆடி 7-6 (7-3) என 2வது செட்டை கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை இகா ஸ்வியாடெக் 7-5 என வென்று சாம்பியன் பட்டம் கைப்பற்றி அசத்தினார்.
- துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
- ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
எல்லை பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது. ஜம்மு-காஷ்மீரின் குப்வாராவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு பதிலடியாக உடனே இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் இது போர் நிறுத்த மீறலாகாது என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது.
இதையடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கியால் சுட்டும், குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதற்கு தக்க பதிலடியை இந்திய ராணுவம் கொடுத்தது. பின்னர் இரு நாட்டு ராணுவங்கள் இடையே சண்டை மூண்டது.
4 நாள் மோதலுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்கு பிறகு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.
- நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் நிதிநிலை குறித்து பொருளாளர் கார்த்தி பேசினார்.
- 5 உறுப்பினர்களுக்கு சங்கர தாஸ் சுவாமிகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
தென்னிந்திய நடிகர் சங்க 69-வது பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் சங்க தலைவர் நாசர் தலைமையில் இன்று நடந்தது.
கூட்டம் தொடங்கியதும் மறைந்த கலைஞர்கள் டெல்லி கணேஷ், சரோஜா தேவி, ராஜேஷ், மனோஜ் கே.பாரதி, ரோபோ சங்கர் உள்பட 70-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நடிகைகள் லதா, லட்சுமி, கோவை சரளா உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் குத்து விளக்கு ஏற்றி கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
பொதுச் செயலாளர் விஷால் வரவேற்றார். 2024-25-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்குகளை துணைத்தலைவர் கருணாஸ் வாசித்தார்.
மூத்த கலைஞர்களை கவுரவிக்கும் பொருட்டு 5 உறுப்பினர்களுக்கு சங்கர தாஸ் சுவாமிகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
நடிகர் சங்க கட்டிட பணிகள்
கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் நிதிநிலை குறித்து பொருளாளர் கார்த்தி பேசினார்.
நிர்வாக செயல்பாடுகள், சங்க வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல் மற்றும் நிர்வாகத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து பொதுச் செயலாளர் விஷால் பேசினார்.
இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை உரையாற்றினார். கூட்டத்தில் பழம்பெரும் நடிகை எம் .என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பத்மபூஷன் விருதுபெறும் நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தேசிய விருது பெற்ற எம்.எஸ்.பாஸ்கர், ஜி.வி.பிரகாஷ், ஊர்வசி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
கூட்டத்தில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நடிகர் சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் உறுப்பினர்களின் நலனுக்காகவும் அனைத்து வகையிலும் ஆதரவளித்து உறுதுணையாக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சங்க உறுப்பினரும், துணை முதலமைச்சரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிம்பொனி இசை அமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி வழங்கிய ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பொதுக்குழு கூட்டத்தில் அம்பிகா, ரேகா, வடிவேல், ஸ்ரீமன், முத்துக்காளை, கானா பாலா, சாய் தன்சிகா, தங்கதுரை மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துணைத்தலைவர் பூச்சி முருகன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் முன்னணி நடிகர்-நடிகைகள் பலர் பங்கேற்காதது குறித்து வருத்தம் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
சமூக வலைதளங்களில் செயல்படும் யூடியூப் சேனல்களில், நமது சங்கத்தை பற்றியும், நமது சங்க உறுப்பினர்கள் பற்றியும் அவதூறான செய்திகளை பரப்புபவர்களுக்கு 3 மாத கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்க வேண்டும்.
மன உளைச்சலுக்கு உள்ளான நமது சங்க உறுப்பினருக்கு அந்த நபர் ரூ.3 லட்சம் மான நஷ்ட ஈட்டுத் தொகை வழங்க வேண்டும்.
அவதூறு செய்தியை பதிவேற்றம் செய்யும் சமூக வலைத்தள சேனல் நிறுவனம் நிரந்தரமாக முடக்கப்பட வேண்டும். மேற்கண்டவை உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
- முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம்.
- இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
நேற்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெற்றது.
அப்போது பேசிய விஜய்," இந்த கூட்டம் ஓட்டாக மாறாது என்கிறார்கள். அப்படியா..?" என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், விஜயின் பரப்புரை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில்," கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. அது விஜய்க்கு மட்டும் அல்ல, எனக்கும் பொருந்தும்.
நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள்" என விஜய்க்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.
- விருது வென்ற மோகன்லாலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது என்றார்.
திருவனந்தபுரம்:
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது. இந்த உயரிய விருது நாளை மறுதினம் வழங்கப்பட உள்ளது.
விருது வென்ற மோகன்லாலுக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருது வென்றது குறித்து நடிகர் மோகன்லால் கூறியதாவது:
20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த விருது மலையாளத் திரையுலகிற்கு வருகிறது. எனவே, இந்த விருதை மலையாள திரைத்துறையுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
மலையாளத் திரைத்துறையில் என்னுடன் பணிபுரியும் அனைத்து சிறந்த கலைஞர்களுடனும் இதைப் பகிர்ந்து கொள்கிறேன். என்னை வடிவமைத்தவர், என்னுள் இருக்கும் கலைஞரை கொண்டு வந்தவர், துறையில் எனது அழகிய நடைக்கு அழகான ஒளியைக் காட்டுபவர். நான் அவர்களுடன் எனது அன்பையும் மரியாதையையும் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் விருதைப் பெறுகிறேன் என்று கேள்விப்பட்டபோது, அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம்.
மிகுந்த பெருமை, பணிவு, நன்றியுணர்வு, அன்பு மற்றும் மரியாதையுடன், இந்த சிறந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இது என் வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று என்று நினைக்கிறேன்.
இதைப் பெற்றதைக் கேட்டதும், 'என்ன நடக்கிறது? இது உண்மையா?' என்று நினைத்தேன். இந்தியத் திரைப்படத் துறையில் ஒரு நடிகருக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது. எனவே, இது ஒரு சிறந்த தருணம்.
ஆனால் இந்த சகோதரத்துவத்தில் உள்ள எனது சக உறுப்பினர்கள் அனைவருடனும் நான் இந்த பாராட்டைப் பகிர்ந்து கொள்கிறேன்... அனைத்து கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் படப்பிடிப்புத் தளங்களில் என்னுடன் பணிபுரியும், என்னை நேசிக்கும், என் ரசிகர்களுடனும் நான் மரியாதையைப் பகிர்ந்து கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.






