என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா: பிரதமர் மோடி பெருமிதம்
    X

    புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா: பிரதமர் மோடி பெருமிதம்

    • சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது.
    • நவராத்திரி முதல் நாளில் இந்தியர்களுக்கு கிடைத்த இனிப்பே ஜிஎஸ்டி சீர்திருத்தம் என்றார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    மத்திய அரசு இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வருமானத்திற்கு வருமான வரி தள்ளுபடியை அறிவித்தது.

    அதேபோல் இப்போது ஜிஎஸ்டியிலும் மிகப்பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    புதிய ஜிஎஸ்டி வரி அடுக்குகள் என்பது மக்களின் சேமிப்பு திருவிழா.

    இந்திய பொருளாதாரத்தில் புதிய சகாப்தம் தொடங்குகிறது.

    சரக்கு போக்குவரத்தில் இருந்த தடைகளை நீக்கவே ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது.

    இரண்டாம் தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம் அனைத்து தரப்பினருக்கும் நன்மை உண்டாக்கும்.

    பல்வேறு பெயர்களில் ஆன மறைமுக வரிகளால் ஏற்பட்ட சிக்கல்கள் ஜிஎஸ்டியால் அகன்றன.

    உங்களுக்குப் பிடித்தமான பொருள்களை குறைக்கப்பட்ட விலையில் நாளை காலை முதல் வாங்க முடியும்.

    இந்தியர்கள் அன்றாட வாழ்வில் வெளிநாட்டு பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனா்.

    உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த ஆரம்பித்தால் இந்தியா வேகமாக வளர்ச்சி அடையும்.

    சிறு, குறு, தொழில்கள் மக்களுக்கு தேவையான பொருட்களை உள்நாட்டில் தயாரிக்க முனைப்பு காட்ட வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×