என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது.
    • வனராஜ் மஞ்சாரியா தனது வளர்ப்பு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தார்.

    நாடு முழுவதும் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து ரேபிஸ் தாக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், குஜராத்தில் வளர்ப்பு நாயின் நகம் கீறியதால் காவல் ஆய்வாளர் ஒருவர் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    காவல் ஆய்வாளர் வனராஜ் மஞ்சாரியாவை 5 நாட்களுக்கு முன்பு அவரது வளர்ப்பு நாய் கீறியுள்ளது. ஆனால் நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருந்ததுடன், வெறும் நகக் கீறல்தானே என்று அவர் அலட்சியமாக இருந்துள்ளார். இதன் காரணமாக ரேபிஸ் நோய் பாதித்து அவர் உயிரிழந்துள்ளார்.

    • எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
    • சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றார் நடிகை ஊர்வசி.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

    2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

    விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். முன்னதாக, மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் மோகன்லாலுடன் சிறிது நேரம் உரையாடினார்.

    • ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் தொடங்கினார்.
    • 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார்.

    71 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் வென்றனர்.

    விருது அறிவிக்கப்பட்டவர்களு இன்று ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார். ஷாருக்கான் மற்றும் விக்ராந்த் மெஸ்ஸி ஆகியோர் ஜனாதிபதி கையில் விருதை பெற்றனர்.

    ஷாருக்கான் தன் திரைப்பயணத்தை 1992 ஆம் ஆண்டு தீவானா என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஷாருக்கான் நடித்து இருந்தாலும் ஜவான் திரைப்படமே இவருக்கு முதல் தேசிய விருதை கொடுத்துள்ளது.

    • கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார்.
    • சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் உள்ளொழுக்கு படம் வென்றுள்ளது.

    71ஆவது தேசிய விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ஊர்வசிக்கு உள்ளொழுக்கு (மழையாளம்) படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதற்கான சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.

    இன்று ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறார்.

    நடிகை ஊர்வசி ஜனாதிபதியிடம் இருந்து தேசிய விருதை பெற்றுக்கொண்டார். உள்ளொழுக்கு படம் கடந்த ஆண்டு ஜூன் 21ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கிறிஸ்டோ டோமி இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் சிறந்த மலையாள படத்திற்கான தேசிய விருதையும் வென்றுள்ளது. இப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிக்கைக்கான மலையாள சினிமா விருதையும் வென்றுள்ளார்.

    ஊர்வசி ஏற்கனவே அசுவிண்டே அம்மா என்ற படத்திற்கான சிறந்த துணை நடிகை விருதை வென்றுள்ளார்.

    நடிகை ராணி முகர்ஜி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றார்.

    தமிழ் சினிமாவில் பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ். பாஸ்கர் (சிறந்த துணைநடிகர்), ஜி.வி. பிரகாஷ் ஆகியோர் விருது பெற்றனர்.

    • ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது.
    • இந்த டி20 லீக்கை தொடர்ந்து அஸ்வின் BBL-க்கு செல்ல உள்ளார்.

    இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

    ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.

    இந்த டி20 லீக்கை தொடர்ந்து அவர் BBL-க்கு செல்ல உள்ளார். அங்கு நான்கு அணிகள் அவரை தங்கள் அணிக்கு எடுக்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார் ஜி.வி.பிரகாஷ்
    • எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

    2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

    விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    இந்நிலையில், பார்க்கிங் படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார்.

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் 6 என சைகை காட்டினார்.
    • ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் இந்திய விமானங்களை வீழ்த்தியதை அவர் அவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. பிரிவு லீக் ஆட்டம் முடிந்த பின்னர், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மீண்டும் மோதின.

    இந்த போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

    பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் கைவிரல்களை உயர்த்தி 6 போன்று சைகை காட்டினார். மேலும், பறக்கும் விமானம் கீழே விழுவதுபோல் சைகை காட்டினார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த சண்டையின்போது இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. ஆனால் இந்தியா இதை மறுத்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வீரரின் சைகைக்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் "ஹரிஷ் ராஃப் இந்தியாவை சரியான முறையில் நடத்தியுள்ளார். தொடருங்கள். கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. நீதிக்கான நாள் வரை 6-0 என்பதை இந்தியா மறக்காது. உலகமும் அதை மனதில் வைத்திருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

    • எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதைப் பெற்றார்.
    • சிறந்த இசையமைப்பாளர் விருது பெற்றார் ஜி.வி.பிரகாஷ்

    புதுடெல்லி:

    இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.

    2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை 4 மணிக்கு தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

    விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

    இந்நிலையில், வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெற்றார்.

    தேசிய திரைப்பட விருதுகள் கடந்த மாதம் 1-ம் தேதி அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • சிறந்த தமிழ்படமாக பார்க்கிங் அறிவிக்கப்பட்டது.
    • சிறந்த திரைக்கதைக்கான விருதையும் வென்றது.

    71 வது தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்த பார்க்கிங் திரைப்படம் வென்றது. இப்படத்தை ராம் குமார் பால கிருஷ்ணன் எழுதி இயக்கினார்.

    சிறந்த துணை நடிகருக்கான விருதை பார்க்கிங் திரைப்படத்திற்காக எம்.எஸ் பாஸ்கர் வென்றார். சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதை ராம்குமார் பால கிருஷ்ணன் பார்க்கிங் திரைப்படத்திற்காக வென்றுள்ளார்.

    விருது அறிவிக்கப்பட்டவர்களு இன்று ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

    இப்படத்தின் தயாரிப்பாளர் சினிஷ் மற்றும் இயக்குனர் ராம்குமார் பால கிருஷ்ணன் விருதுகளை பெற்றனர்.

    • அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை
    • எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

    அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு H-1B விசா வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே எச்-1பி விசா கட்டணத்தை 1 லட்சம் அமெரிக்க டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தினார். ரூ.1.75 லட்ச மாக இருந்த இந்த கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

    இந்த கட்டணத்தை எச்-1பி விசா பெற்று பணியாற்றும் ஒரு பணியாளருக்கும் அவரைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

    அமெரிக்காவின் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது. இது எச்-1பி விசாவை அதிகளவில் பெறும் இந்தியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்து உள்ளது.

    இதற்கிடையே ஏற்கனவே எச்-1பி விசா வைத்திருப்போர் அல்லது புதுப்பிப்பவர்களுக்கு இந்த கட்டண உயர்வு பொருந்தாது எனவும் இது ஒருமுறை மட்டுமே செலுத்தும் கட்டணம் எனவும் அமெரிக்க அரசு விளக்கம் அளித்தது.

    இந்த நிலையில் எச்-1பி விசா கட்டண உயர்வில் இருந்து டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க பரீசிலிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எச்-1பி விசா கட்டண உயர்வுக்கு பல்வேறு துறை நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்குதான் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்து உள்ளனர்.

    அமெரிக்காவின் மருத்துவத்துறை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்று கருத்துக்கள் எழுந்தன. குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் டாக்டர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் குறித்து மிகப்பெரிய மருத்துவ அமைப்புகள் கவலைகளை தெரிவித்தன.

    இதையடுத்து விசா கட்டண உயர்வில் டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் டெய்லர் ரோஜர்ஸ் கூறும் போது, "அதிபர் டிரம்ப்பின் விசா கட்டண உயர்வில் சில விலக்குகள் அளிக்கப்பட உள்ளன. அதில் டாக்டர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்குவார்கள் என்று தெரிவித்தார்.

    • ரைட் படத்தின் மூலம் யுவினா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
    • ரைட் படம் வருகிற 26 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

    சுப்ரமணியன் ரமேஷ்குமார் இயக்கத்தில் 'ரைட்' என்ற படம் உருவாகி இருக்கிறது. 'வீரம்' படத்தில் அஜித்துடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த யுவினா இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

    இப்படம் வருகிற 26 ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது.

    விழாவில் பேசிய யுவினா, "அஜித்துடன் நான் இணைந்து நடித்ததால் மட்டுமே எனக்கு அடையாளம் கிடைத்திருக்கிறது. ரஜினியுடன் மீனா ஜோடியாக நடிப்பதை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், இன்றைய காலக்கட்டத்தில் நான் அஜித்துக்கு ஜோடியாக நடித்தால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அஜித்தும் அதனை விரும்ப மாட்டார்" என்று தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு வீரம் படத்தில் நடித்த குழந்தையா இவங்க என யுவினாவின் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    • சூப்பர் 4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • அந்த போட்டியில் ஹாரிஸ் ராஃப் விமானம் விழுந்து நொறுங்குவது போன்ற சைகையை செய்தார்.

    துபாய்:

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் துபாயில் கடந்த 21-ந் தேதி நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்திய வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில்லிடம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராஃப் வம்பிழுத்தார். அதற்கு இருவரும் தக்க பதிலடி கொடுத்தனர். அத்துடன் இதனை பார்த்த இந்திய ரசிகர்களும் பவுண்டரி எல்லையில் பீல்டிங் செய்த ஹாரிஸ் ராஃப்புக்கு எதிராக கோலி.. கோலி.. என கூச்சலிட்டு கலாய்த்தனர்.

    அதற்கு ஹாரிஸ் ரவூப் 6 விரல்களைக் காட்டி 'விமானம் விழுந்து நொறுங்குவது' போன்ற சைகையை செய்தார். அதாவது காஷ்மீரின் பகல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக, "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி தாக்குதலை மேற்கொண்டது.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரே நாள் இரவில் மொத்தம் 9 தீவிரவாத முகாம்கள் இதில் அழிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது ஆறு இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் பலமுறை கூறியது.

    அந்த போலியான செய்தியை வைத்துக்கொண்டு '6 விமானங்கள் வீழ்த்தப்பட்டது மறந்து விட்டதா?' என்ற வகையில் ஹாரிஸ் ராஃப் சைகை செய்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் கோலி.. கோலி.. என்று கூச்சலிட்டு அவருக்கு மீண்டும் பதிலடி கொடுத்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் ஹாரிஸ் ராஃப் சைகைக்கு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் தக்க பதிலடி கொடுத்துள்ளார். அவரது சைகை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×