என் மலர்tooltip icon

    உலகம்

    இந்தியாவை சரியான முறையில் நடத்துதல்: ஹரிஸ் ராஃப் சைகைக்கு பாகிஸ்தான் அமைச்சர் ஆதரவு
    X

    இந்தியாவை சரியான முறையில் நடத்துதல்: ஹரிஸ் ராஃப் சைகைக்கு பாகிஸ்தான் அமைச்சர் ஆதரவு

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் 6 என சைகை காட்டினார்.
    • ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தான் இந்திய விமானங்களை வீழ்த்தியதை அவர் அவ்வாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. பிரிவு லீக் ஆட்டம் முடிந்த பின்னர், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மறுத்துவிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் சூப்பர் 4 சுற்றில் இரு அணிகள் மீண்டும் மோதின.

    இந்த போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர். அதற்கு இந்திய வீரர்களும் பதிலடி கொடுத்தனர்.

    பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் கைவிரல்களை உயர்த்தி 6 போன்று சைகை காட்டினார். மேலும், பறக்கும் விமானம் கீழே விழுவதுபோல் சைகை காட்டினார்.

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் நாட்டில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த சண்டையின்போது இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. ஆனால் இந்தியா இதை மறுத்தது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் வீரரின் சைகைக்கு, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் "ஹரிஷ் ராஃப் இந்தியாவை சரியான முறையில் நடத்தியுள்ளார். தொடருங்கள். கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன. நீதிக்கான நாள் வரை 6-0 என்பதை இந்தியா மறக்காது. உலகமும் அதை மனதில் வைத்திருக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×