என் மலர்
கிரிக்கெட் (Cricket)

எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச அடிப்படை விலை: ILT20 தொடரில் விலை போவாரா அஸ்வின்?
- ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறுகிறது.
- இந்த டி20 லீக்கை தொடர்ந்து அஸ்வின் BBL-க்கு செல்ல உள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் ரூ.1 கோடியை தனது அடிப்படை விலையாக அஸ்வின் நிர்ணயித்துள்ளார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்த டி20 லீக்கை தொடர்ந்து அவர் BBL-க்கு செல்ல உள்ளார். அங்கு நான்கு அணிகள் அவரை தங்கள் அணிக்கு எடுக்க ஆர்வம் காட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






