என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
- லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் அமைப்பில் 6வது அட்டவணையில் இடம் கோரி கடந்த வாரம் வெடித்த இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வன்முறையை தூண்டியதாக காலநிலை செயல்பாட்டாளர்கள் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், லடாக்கின் அற்புதமான மக்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோரால் தாக்கப்படுகின்றன.
லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர். ஆனால் அதற்கு பாஜக, 4 இளைஞர்களை கொன்றும் சோனம் வாங்க்சுக்கை சிறையிலடைத்தும் பதிலடி அளித்துள்ளது.
கொலையை நிறுத்துங்கள். வன்முறையை நிறுத்துங்கள். லடாக்குக்கு ஒரு குரல் வேண்டும், அதனை வழங்குங்கள். அவர்களுக்கு அரசமைப்பின் 6-ஆவது அட்டவணையை வழங்குங்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- திரும்பிக் கூட பார்க்காம தனி விமானத்தில் ஏறி, சென்னை போறாரு விஜய். இது ஏற்புடையதா?
- 8.45-க்கு நாமக்கல்ல இருக்கணும். 8.45-க்கு தான் சென்னைலயே கிளம்புறீங்க.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் எம்.எல்.ஏ கூறியதாவது:-
30 பேர் இறந்துட்டாங்க, உங்க கருத்து என்னனு பத்திரிகையாளர்கள் கேக்குறாங்க. திரும்பிக் கூட பார்க்காம தனி விமானத்தில் ஏறி, சென்னை போறாரு விஜய். இது ஏற்புடையதா?
8.45-க்கு நாமக்கல்ல இருக்கணும். 8.45-க்கு தான் சென்னைலயே கிளம்புறீங்க. தனி விமானம் லேட்டா வந்துச்சா? காலதாமதமா வராம இருந்திருந்தா, தண்ணி, உணவு இல்லாம மக்கள் செத்திருப்பாங்களா?
ஆகவே, விஜய் மீதும் தவறு இருக்கு.. விஜய் ரசிகர்கள் மீதும் தவறு இருக்கு.. சினிமா மோகத்தால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் மீதும் தவறு இருக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
- துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதற்கிடையே, ஆசியகோப்பை தொடர் இறுதிப்போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார்.
- இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
- அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர்.
அமெரிக்காவில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா விண்ணப்ப கட்டணத்தை 1 லட்சம் டாலர்களாக (இந்திய மதிப்பில் ரூ.88 லட்சம்) அதிபர் டிரம்ப் உயர்த்தி அறிவித்தார்.
எச்-1பி விசா பெறுபவர்களில் 71 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவார்கள். இதனால் இக்கட்டண உயர்வால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். வெளிநாட்டு ஊழியர்களை கட்டுப்படுத்த விசா விதிகளை அமெரிக்கா கடுமையாக்கி வரும் நிலையில், சீனா புதிய விசா நடைமுறையை அறிவித்தது.
அறிவியல், தொழில்நுட் பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளில் உலக அளவில் உள்ள சிறந்த ஊழியர்களை ஈர்க்கும் நோக்கில் கே விசாவை அறிமுகம் செய்துள்ளது. இது வருகிற 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இந்த நிலையில் வெளிநாட்டு பணியாளர்களை ஈர்க்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்து உள்ளார்.
அமெரிக்காவில் அதிகமான எச்-1பி விசா வைத்திருப்பவர்களுக்கு இனி விசா நீட்டிப்பு கிடைக்காது. இவர்கள் திறமையானவர்கள். அவர்களுக்கு கனடாவில் ஒரு வாய்ப்பு வழங்கி பயன்படுத்தி கொள்வோம்.
விரைவில் இது குறித்து ஒரு விசா சலுகையை வழங்குவோம். அந்த பணியாளர்களில் பலர் தொழில்நுட்பத் துறையில் உள்ளனர். மேலும் அவர்கள் கனடாவில் வேலைக்கு வர தயாராக உள்ளனர்.
கனடா அரசாங்கம் இந்த வகையான திறமைகளை உள்வாங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுகுறித்து தெளிவான சலுகை விரைவில் இருக்கும்" என்று கூறினார்.
கனடா பிரதமர் கார்னி அறிவிப்பின்படி விசா சலுகை அளிக்கப்பட்டால் அமெரிக்காவின் எச்-1பி விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரணமாக இருக்கும்.
ஆயிரக்கணக்கான உயர் திறமையான இந்திய நிபுணர்களுக்கு ஒரு தெளிவான மாற்று இடமாக கனடா இருக்கும்.
- தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
- கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினர்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்த துயரத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் மீண்டும் வர வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விஜய் கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததாக கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. எதற்காக விஜய்க்கு 7 மணி நேரம் காவல்துறை அனுமதி வழங்கியது. மதியம் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள்ளாக என நீண்ட நேரம் பிரசாரத்திற்கு அனுமதி அளித்தது தவறு.
அதனால், விஜய் மீது தவறில்லை. கரூர் பெருந்துயரமே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்.
இந்த துயரத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் மீண்டும் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.
- ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன.
அணுசக்தி திட்டங்களை கைவிட மறுக்கும் ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா) மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு உலக வல்லரசுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது. ஆனால் ஒப்பந்த விதிகளை மீறியதற்காக, அதே ஒப்பந்தத்தில் இடம்பெற்ற "ஸ்னாப்பேக்" (Snapback) என்ற அம்சம் மூலம் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த ஒப்பந்தம் செய்வதற்கு முன் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகள் 10 வருடங்கள் கழித்து மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.
தற்போது அமலுக்கு வந்துள்ள இந்திய தடையால் ஈரானின் வெளிநாட்டுச் சொத்துகள் முடக்கப்படும், ஆயுத விற்பனை ஒப்பந்தங்கள் நிறுத்தப்படும், மேலும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களை மேம்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்மாக கருதப்படும்.
முன்னதாக ஈரான் மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்காக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் கொண்டு வந்த வரைவு தீர்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளின் வாக்கெடுப்புக்காக முன் வைக்கப்பட்டது.
ரஷியா, சீனா, பாகிஸ்தான் மற்றும் அல்ஜீரியா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஒன்பது நாடுகள் எதிராக வாக்களித்தன. இரண்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து, வரைவுத் தீர்மானம் தோல்வி அடைந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று முன் தினம், ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதை ஆறு மாதங்கள் தாமதப்படுத்த கோரி நேற்று ரஷியா மற்றும் சீனா கொண்டு வந்த வரைவு தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்தது. இதைத்தொடர்ந்து இன்று (செப்டம்பர் 28) முதல் தடைகள் அமலுக்கு வந்தன.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஈரானுக்கு இந்த தடைகள் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் மீது தடை விதிக்க ஐநாவுக்கு உரிமை இல்லை என்றும் இந்த தடைகளால் தங்களுக்கு எந்த பொருளாதார பாதிப்புகளும் இருக்காது என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
- தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
- கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினர்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இளைஞர்களுக்கும், தொண்டர்களுக்கும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எதற்காக விஜயை பைக்கில் துரத்துகிறீர்கள், கூட்டமாக இருக்கும் இடத்திற்கு செல்லாதீர்கள்.
பாதுகாப்பில்லாத இடத்திற்கு செல்லக்கூடாது. உங்கள் தலைவரை பாதுகாப்பாக ரசியுங்கள்.
ஆனல், உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் மட்டும் தான் என்பதை இளைஞர்கள், தொண்டர்கள், ரசிகர்கள், பொது மக்கள் உணர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
- கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினர்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "கரூர் துயர சம்பவத்திற்கு விஜயை மட்டும் கார்னர் செய்வது தவறு" என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வார விடுமுறையில் பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விஜய் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். வார விடுமுறை என்றால் விஜயை பார்க்க குழந்தைகள், பெண்கள் வரத்தான் செய்வார்கள்.
விஜயை பார்க்க பொது மக்களுக்கும் மக்களை சந்திக்க விஜய்க்கும் முழு உரிமையும் உள்ளது. இருப்பினும், நம்மால் இடையூறு உள்ளதா என விஜய் பார்க் வேண்டும். ஒரு தலைவனாக விஜய் இதை உணர வேண்டும்.
சரியான இடத்தில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி தர வேண்டும். அதற்கு காவல்துறை பாதுகாப்பும் தர வேண்டும்.
இந்த விவகாரத்தில் விஜயை மட்டும் கார்னர் செய்வது தவறு. விஜயை முதல் குற்றவாளி என்பதை ஏற்க முடியாது. திமுக அரசு தான் முதல் குற்றவாளி. விடுமுறை நாளில் பிரசார கூட்டம் நடத்தியதை தவிர விஜய் வேறு எந்த தவறும் செய்யவில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
- பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் நேற்று மாலை தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ள நிலையில் பிரபலங்கள் பலரும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்துள்ளனர்.
நடிகர் மம்மூட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் நடந்த துயர சம்பவத்தால் மிகவும் வருத்தமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், மன வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
அவரை தொடர்ந்து நடிகர் மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "கரூரில் ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்காகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், வலிமை பெறவும் பிரார்த்திக்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
- விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் நுழைந்தது எப்படி?
- விஜய் பேசியபோது செருப்பு வீசப்படுகிறது என்றால் அதனை தவெகவினர் வீசுவதற்கு வாய்ப்பில்லை.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பரசார கூட்டத்தின்போது, நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கரூர் மாவட்ட பஜாக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும். கரூர் துயரத்திற்கு காரணமான அம்மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., ஆகிய இருவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும்.
ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத குறுகலான பகுதியில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி அளித்ததே உயிர் பலிகளுக்கு காரணம்.விஜய் கூட்டத்தில் விசமத்தனமான நபர்கள் நுழைந்தார்களா? ஏன் மின்தடை ஏற்பட்டது என விசாரணை நடத்தப்பட வேண்டும்.
விஜய் பேசிக்கொண்டிருந்தபோது ஆம்புலன்ஸ் நுழைந்தது எப்படி? அதில் இருந்தவர்கள் யார் ? என விசாரணை தேவை. விஜய் பேசியபோது செருப்பு வீசப்படுகிறது என்றால் அதனை தவெகவினர் வீசுவதற்கு வாய்ப்பில்லை, தீவிர விசாரணை தேவை.
திமுக தனது ஆட்சிக்காலத்தில் சரியாக செயல்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சூப்பர்-4 சுற்று போட்டி யின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண் பித்தனர்.
- சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இத்தொடரில் இவ்விரு அணிகள் மோதிய ஆட்டங்க ளில் சர்ச்கைகள் எழுந்தது. லீக் போட்டியின்போது ஆட்டம் முடிந்தபிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தனர். இதுகுறித்து பாகிஸ்தான் புகார் செய்தது.
மேலும் பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றியை பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக் கெட் கவுன்சிலில்(ஐ.சி.சி) புகார் செய்தது.
சூப்பர்-4 சுற்று போட்டியின்போது பாகிஸ்தான் வீரர்கள் பர்ஹான், ஹாரிஸ் ரவூப் ஆகியோர் ஆத்திர மூட்டும் சைகைகளை காண்பித்தனர்.
இதுதொடர்பாக சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலில் இந்திய கிரிக்கெட் வாரியம் புகார் செய்தது. இப்புகார் களை விசாரித்த ஐ.சி.சி, சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரவூப் ஆகியோருக்கு அபராதம் விதித்தது. பர்ஹானுக்கு எச்சரிக்கை மட்டும் விடுக்கப்பட்டது. இந்த சர்ச்கைகளுக்கு மத்தியில் கோப்பைக்கான இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டனுடன் கோப்பை புகைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா மறுத்துவிட்டது.
இறுதிப் போட்டிக்கு முன் அதில் மோதும் அணிகளின் கேப்டன்கள் கோப்பையுடன் புகைப்ப டத்துக்கு போஸ் கொடுப் பார்கள். இது பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சி நேற்று நடைபெறவிருந்தது. ஆனால் அதில் பங்கேற்க இந்தியா மறுத்து விட்டதாக கூறப்படு கிறது.
இதனால் கோப்பை புகைப்பட நிகழ்ச்சி நடைபெறவில்லை. இந்திய அணி நேற்று ஒரு நாள் விடுமுறை எடுத்து எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
- தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், " கரூர் மாவட்ட பஜாக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும்" என்றார்.






