என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரூர் விவகாரத்தில் முதல் குற்றவாளி விஜய் என்பதை ஏற்க முடியாது- அண்ணாமலை
    X

    கரூர் விவகாரத்தில் முதல் குற்றவாளி விஜய் என்பதை ஏற்க முடியாது- அண்ணாமலை

    • தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
    • கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினர்.

    கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர், "கரூர் துயர சம்பவத்திற்கு விஜயை மட்டும் கார்னர் செய்வது தவறு" என மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    வார விடுமுறையில் பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து விஜய் மிகப்பெரிய தவறை செய்துள்ளார். வார விடுமுறை என்றால் விஜயை பார்க்க குழந்தைகள், பெண்கள் வரத்தான் செய்வார்கள்.

    விஜயை பார்க்க பொது மக்களுக்கும் மக்களை சந்திக்க விஜய்க்கும் முழு உரிமையும் உள்ளது. இருப்பினும், நம்மால் இடையூறு உள்ளதா என விஜய் பார்க் வேண்டும். ஒரு தலைவனாக விஜய் இதை உணர வேண்டும்.

    சரியான இடத்தில் விஜய் கூட்டத்திற்கு அனுமதி தர வேண்டும். அதற்கு காவல்துறை பாதுகாப்பும் தர வேண்டும்.

    இந்த விவகாரத்தில் விஜயை மட்டும் கார்னர் செய்வது தவறு. விஜயை முதல் குற்றவாளி என்பதை ஏற்க முடியாது. திமுக அரசு தான் முதல் குற்றவாளி. விடுமுறை நாளில் பிரசார கூட்டம் நடத்தியதை தவிர விஜய் வேறு எந்த தவறும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×