என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயரத்தில் இருந்து விஜய் மீண்டு வர வேண்டும்- அண்ணாமலை
- தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
- கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அண்ணாமலை ஆறுதல் கூறினர்.
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிறகு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, இந்த துயரத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் மீண்டும் வர வேண்டும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
விஜய் கரூர் கூட்டத்திற்கு தாமதமாக வந்ததாக கூறும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது.
மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை காவல்துறை அனுமதி அளித்துள்ளது. எதற்காக விஜய்க்கு 7 மணி நேரம் காவல்துறை அனுமதி வழங்கியது. மதியம் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள்ளாக என நீண்ட நேரம் பிரசாரத்திற்கு அனுமதி அளித்தது தவறு.
அதனால், விஜய் மீது தவறில்லை. கரூர் பெருந்துயரமே கடைசி சம்பவமாக இருக்க வேண்டும்.
இந்த துயரத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் மீண்டும் வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






