என் மலர்
இந்தியா

"இளைஞர்களை கொன்று லடாக்கின் குரலுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது" - ராகுல் காந்தி
- பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
- லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர்.
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியல் அமைப்பில் 6வது அட்டவணையில் இடம் கோரி கடந்த வாரம் வெடித்த இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வன்முறையை தூண்டியதாக காலநிலை செயல்பாட்டாளர்கள் சோனம் வாங்சுக் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இது குறித்து ராகுல் காந்தி இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், லடாக்கின் அற்புதமான மக்கள், கலாச்சாரம் மற்றும் மரபுகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆகியோரால் தாக்கப்படுகின்றன.
லடாக்கியர்கள் தங்களுக்கென ஒரு குரல் வேண்டும் என்று கோரினர். ஆனால் அதற்கு பாஜக, 4 இளைஞர்களை கொன்றும் சோனம் வாங்க்சுக்கை சிறையிலடைத்தும் பதிலடி அளித்துள்ளது.
கொலையை நிறுத்துங்கள். வன்முறையை நிறுத்துங்கள். லடாக்குக்கு ஒரு குரல் வேண்டும், அதனை வழங்குங்கள். அவர்களுக்கு அரசமைப்பின் 6-ஆவது அட்டவணையை வழங்குங்கள்" என்று தெரிவித்துள்ளார்.






