என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.
- 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெரு நாட்டில் பாலம் இடிந்து விழுந்ததில் டபுள் டெக்கர் பேருந்து ஆற்றுக்குள் விழுந்தது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்
மீட்புப் பணியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளும் 100 தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. மேலும் 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பெரு நாட்டில் பேருந்து விபத்துக்கள் சமீப காலங்களில் அதிகரித்து வருகின்றன. பெரு நாட்டில் 2023 ஆம் ஆண்டு சாலை விபத்துக்களில் 3,138 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- தியாகபிரம்மா ஆராதனை.
- குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-3 (சனிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை நள்ளிரவு 12.01 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: உத்திரம் நள்ளிரவு 1.51 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
தியாகபிரம்மா ஆராதனை. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவி லில் ஸ்ரீ வரதராஜ மூலவர் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பக்தி
ரிஷபம்-லாபம்
மிதுனம்-களிப்பு
கடகம்-யோகம்
சிம்மம்-ஆர்வம்
கன்னி-சுகம்
துலாம்- அமைதி
விருச்சிகம்-ஆதரவு
தனுசு- தாமதம்
மகரம்-வரவு
கும்பம்-உயர்வு
மீனம்-பயணம்
- எல்ஐகே படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
- எல்ஐகே படத்தின் தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், தீமா தீமா பாடலுக்கு விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் lip sync செய்த வீடியோவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
தமிழ் சினிமாவில் ஏராளமான வெற்றிப்பாடல்களை எழுதி தனக்கென தனி இடத்தை பிடித்தவர் சினேகன். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 1-ல் சினேகன் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
கடந்த 2021-ம் ஆண்டு சினேகன் சின்னத்திரை நடிகையான கன்னிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், அந்த குழந்தைகளுக்கு நடிகர் கமல்ஹாசன் பெயர் வைத்து, தங்க வளையல் சூட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக சினேகன் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காதலர் தினத்தில் ... எங்கள் தங்க மகள்களுக்கு தங்க வளையல்களோடு ... "காதல்" என்ற பெயரையும் "கவிதை " என்ற பெயரையும் .. அணிவித்து வாழ்த்திய, நம்மவர் எங்களின் அன்பு தலைவர் பத்ம பூஷன் கமஹாசன் அவர்களுக்கு எங்கள் அன்பின் நன்றிகள். நீங்களும் வாழ்த்துங்கள் காதல் - கவிதை-யை" என்று பதிவிட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை அமெண்டா வெற்றி பெற்றார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரின் தோஹாவில் உள்ள கலீஃபாவில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது அரையிறுதி சுற்றில் அமெரிக்க வீராங்கனையான அமெண்டா அனிசிமோவா, ரஷிய வீராங்கனை எகடெரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.
இதில் அனிசிமோவா அதிரடியாக ஆடி 6-3, 6-3 என எளிதில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அனிசிமோவா, லாத்வியாவின் ஒஸ்டாபென்கோ உடன் மோத உள்ளார்.
- அதிபர் டிரம்புடன் அதானி விவகாரம் குறித்து பேசவில்லை என்றார் பிரதமர் மோடி.
- அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி டிரம்புடன் இது குறித்து பேசவில்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இல்லை என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதானி விவகாரம் குறித்து இந்தியாவில் நீங்கள் கேள்வி எழுப்பினால், மவுனமே பதிலாக இருக்கும். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விவகாரமாகி விடும். அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
- டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
ஹராரே:
ஜிம்பாப்வே சென்றுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 299 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரையன் பென்னெட் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 169 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் 66 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 300 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் அயர்லாந்து அணி களமிறங்கியது. ஜிம்பாப்வே வீரர்கள் துல்லியமாகப் பந்து வீசியதால் சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.
இறுதியில், அயர்லாந்து 46 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றதுடன் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது.
- இதில் ரஷிய வீரரான மெத்வதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பாரிஸ்:
பிரான்சின் மார்சே நகரில் ஓபன் 13 டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவைச் சேர்ந்த டேனில் மெத்வதேவ், ஜெர்மனியின் ஜேன் லென்னர்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய மெத்வதேவ் 6-3, 6-2 என எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
- கும்பமேளாவிற்கு 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடியுள்ளனர்.
லக்னோ:
உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது.
இதற்காக 10,000 ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15,000 துப்புரவு பணியாளர்கள், 25,000 தொழிலாளர்கள், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்துள்ளது.
இந்நிலையில், கும்பமேளாவிற்கு வருகை தந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ள பக்தர்களின் எண்ணிக்கை 50 கோடியைக் கடந்துள்ளது என உத்தர பிரதேச அரசு தெரிவித்தது.
கும்பமேளாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்பட பல்வேறு பிரபலங்களும் புனித நீராடினர்.
- எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான X Ray கண்கள் பூஜையுடன் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
- எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார்.
டுவிங்கில் லேப்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்.ஏ.பாலா தயாரித்து, இயக்கும் புதிய படமான X Ray கண்கள் பூஜையுடன் சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.
முன்னாள் ராணுவ வீரரான எம்.ஏ.பாலா ஏற்கனவே 'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' என்ற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார்.
எம்.ஏ.பாலா எழுதி இயக்கும் இந்தப் படத்தில் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மருத்துவரான ராம் பிரசாத் நடிக்கிறார். மிஸ்ட்ரி திரில்லர் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில் நாயகி யாஷிகா ஆனந்த் மற்றும் நாயகன் ராம் பிரசாத் இருவரும் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்றது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடி அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களீல் பதிவிட்டுள்ளனர்.

இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மோகன வேலு மேற்கொள்கிறார். இசையமைப்பாளராக விபின் ஆர் பணியாற்றுகிறார்.
விரைவில் இந்தப் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசித்தார்.
இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு தலைநகர் டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.
- இதுவரை 21 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்துள்ளது
- இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
ஜெருசலேம்:
இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர். அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.
கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தப்படி இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் மேலும் 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு சனிக்கிழமை விடுதலை செய்ய உள்ளது.
பிணைக்கைதிகளில் 3 ஆண்களை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, இஸ்ரேலிய பிணைக்கைதிகள் யாஹர் ஹரன் (46), அலெக்சாண்டர் ருபெனோ (29), சஹொய் டிகெல் ஷென் (36) ஆகிய 3 பேரை ஹமாஸ் ஆயுதக்குழு விடுதலை செய்கிறது.
இதற்கு ஈடாக தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளில் 369 பேரை இஸ்ரேல் விடுதலை செய்கிறது. இதில் 36 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட ஆயுள் தண்டனை கைதிகள் ஆவர்.
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பிணைக்கைதிகளில் 21 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக தற்போதுவரை 750-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்துள்ளது.






