என் மலர்
நீங்கள் தேடியது "அதானி விவகாரம்"
- ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
- நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.
இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் (LIC) மூலம் அதானி குழுமத்துக்கு 3.9 பில்லியன் டாலர் (தோராயமாக ரூ.33,000 கோடி) முறைகேடாக நிதி வழங்க மத்திய அரசு திட்டமிட்டதாக அமெரிக்காவின் வாஷிங்கடன் போஸ்ட் பத்திரிகை குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்றை வாஷிங்கடன் போஸ்ட் வெளியிட்டுள்ளது.
2023 இல், ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் மீது பங்குகளைக் தவறாக கையாண்டு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியது. இந்த குற்றச்சாட்டை அண்மையில் மத்திய அரசின் பங்கு பரிவர்த்தனை வாரியமான செபி நிராகரித்தது.
மேலும் அதானியும் அவரது கூட்டாளிகளும் பல பில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் வழக்கு நடந்து வருகிறது. இதில், எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் ரூ.2,000 கோடி சட்டவிரோதப் பணம் கொடுத்த குற்றச்சாட்டும் அடங்கும்.
இந்த தொடர் குற்றச்சாட்டுகளால் அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்து முந்தைய ஆண்டை விட கடன் 20% அதிகரித்தது. இதனால் சர்வதேச வங்கிகள் கடன் கொடுக்க தயங்கினர். மேலும் முதலீட்டாளர்கள் அதானி குழும பங்குகளை வாங்க தயங்கினர்.
இந்த சூழலில் இருந்து அதானி குழுமத்தை மீட்க கடந்த மே மாதம், மத்திய நிதி அமைச்சகம், நிதிச் சேவைகள் துறை (DFS), LIC ஆகிய 3 மத்திய அரசு நிறுவனங்களும் சேர்ந்து ரகசிய திட்டம் ஒன்றை தீட்டியதாக வாஷிங்க்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டு வியூகம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது என்பதற்கான ஆவணங்களை வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக மே மாத இறுதியில், கடனை தீர்க்க, அதானி குழுமத்தின் கீழ் உள்ள அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் (APSEZ) சுமார் ரூ.5,000 கோடி மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டபோது இதனை LIC முழுமையாக வாங்கியது.
மேலும் இதே போல பல முதலீடு வழிகளில் LIC இன் நிதி மொத்தம் ரூ.33,000 கோடி அதானி குழுமத்திற்கு முறைகேடாக வழங்குவதே அந்த ரகசிய திட்டம் என்றும் அதற்கு நிதி அமைச்சகத்தின் ஒப்புதலும் கிடைத்தது என்பதே வாஷிங்டன் போஸ்ட் அறிக்கையின் குற்றச்சாட்டாக உள்ளது.
நெருக்கடியில் சிக்கிய அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுத்து முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.

இந்த நோக்கத்திற்காக ஒரே நிறுவனத்தில் அதிக முதலீடு செய்வது அதிக ஆபத்தானது மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று தெரிந்தே கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு குறிப்பாக ஏழை மக்களுக்கு காப்பீடு அளிக்கும் பொதுத்துறை நிறுவனமான LIC பணத்தை மத்திய அரசு பயன்படுத்தி உள்ளது என்பதே இந்த குற்றச்சாட்டின் சாராம்சமாகும்.
ஆனால் அதானி குழுமம் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்யும் மத்திய அரசு முடிவுகளில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், அரசியல் சலுகை என்ற குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளது. LIC பல கார்ப்பரேட் குழுமங்களில் முதலீடு செய்கிறது, அதானிக்கு மட்டும் சலுகை அளிக்கப்படுவதாகக் கூறுவது தவறானது என்பதே அக்குழுமத்தின் வாதமாக உள்ளது.
முன்னதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதானி நிறுவனத்தில் LIC-யின் அதிகப்படியான முதலீடு குறித்து சந்தேகம் எழுப்பி வந்த நிலையில் வாஷிங்டன் போஸ்ட் விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
- அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக அமெரிக்கவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையை "கட்டுக்கதை" என இந்தியப் பங்குச் சந்தை வாரியம் (செபி) நிராகரித்துள்ளது .
அதானி குழுமத்திற்கு எதிராக எந்த முறைகேடுகளையும் கண்டறியவில்லை என்றும், எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமத்திற்கு எதிராக வெளியான இந்த ஹிண்டன்பர்க் அறிக்கை பங்குச் சந்தையில் அதன் பங்குகளில் 50 சதவீதம் சரிவை ஏற்படுத்தியது. இதனால் அதானி குழுமப் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.12.5 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
அதானி மீதான முக்கிய குற்றச்சாட்டு, அவர் வெளிநாடுகளில் ஷெல் நிறுவனங்களை அமைத்தார், தனது சொந்த நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் முதலீடு செய்தார், பங்குகளின் விலையை உயர்த்தினார், மேலும் இந்த பங்குதாரர்கள் கடன்களைப் பெறுவதற்கு பிணையம் வழங்கினர் என்பதுதான்.
அதானி குழுமத்துடன் தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு முதலீடுகளில் அப்போதைய செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஈடுபட்டதாகவும் ஹிண்டன்பர்க் குற்றம் சாட்டியிருந்தது.
முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அதானி விவகாரத்தில் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார்.
- இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு தழுவிய போராட்டத்தை நடத்த உள்ளது.
புதுடெல்லி:
ஹிண்டர்பர்க் ஆய்வறிக்கையால் அதானி குழுமம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில் எஸ்.பி.ஐ. கடன் வழங்கி உள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தை இரு நாளாக முடக்கின.
இதற்கிடையே, நாடு முழுவதும் பிப்ரவரி 6-ம் தேதி எல்ஐசி மற்றும் எஸ்பிஐ வங்கி முன்பு போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
இந்நிலையில், பிரதமர் மோடியின் நண்பர் அதானி முறைகேட்டில் ஈடுபட்டதாக வெளியான புகார்கள் குறித்து எந்த ஒரு விசாரணையும், நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மவுனம் காத்து வருகிறார். இதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை காங்கிரஸ் நடத்த உள்ளது. மக்களுக்கு பதில்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- அதானி குழும நிறுவனத்தின் புகார் பற்றி மத்திய அரசு விவாதிக்க மறுப்பதோடு அதை அவை பதிவுக்கு கொண்டு வரக் கூடாது என நினைக்கிறது.
- ஜனாதிபதி உரை மீதான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம்.
புதுடெல்லி:
அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.
போராட்டத்திற்கு பிறகே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
அதானி குழும விவகாரம் குறித்து பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பதில் அளிக்க வேண்டும். ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை காட்டிலும் பிரதமர் முதலில் பதில் அளிக்க வேண்டும்.
அதானி குழும நிறுவனத்தின் புகார் பற்றி மத்திய அரசு விவாதிக்க மறுப்பதோடு அதை அவை பதிவுக்கு கொண்டு வரக் கூடாது என நினைக்கிறது. ஜனாதிபதி உரை மீதான விவாதங்களுக்கு தயாராக இருக்கிறோம். அதற்கான முக்கியத்துவத்தையும் தருகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சென்னையில் 7 மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 68 மாவட்டங்களுக்கும் தகவல் சென்றுள்ளது.
- பா.ஜனதா அரசின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த ராகுல் புதிய வியூகம் ஒன்றை அமைத்துள்ளார்.
புதுடெல்லி:
அதானியின் நிறுவனங்கள் மோசடி செய்தே உலக பணக்காரர் வரிசையில் அதானி இடம் பெற்றதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அம்பலப்படுத்தியது.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன.
ராகுல்காந்தியும் பாராளுமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தால் பாராளுமன்றமும் முடங்கியது. உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார்.
எதிர்பார்த்த அளவு இந்த பிரச்சினை மக்கள் மத்தியில் செல்லவில்லை என்று ராகுல் கருதுகிறார். எனவே இந்த விவகாரத்தை சாதாரண மக்கள் மத்தியிலும் கொண்டு சென்று பா.ஜனதா அரசின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த ராகுல் புதிய வியூகம் ஒன்றை அமைத்துள்ளார்.
அதன்படி நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார்.
அதில் அதானி விழுந்தால் இந்தியாவின் பொருளாதாரம் வீழும் என்ற நிலையில் நாட்டின் பொருளாதாரம் ஆபத்தான நிலையில் இருப்பதையும் அதானிக்கு கடந்த 9 ஆண்டுகளாக மோடி அரசு உதவி வருவதையும், அவரது மோசடிகளுக்கு துணை போவதையும் கிராமங்கள் வரை சென்று மக்கள் மத்தியில் புரிய வையுங்கள். உள்ளூர் ஊடகங்கள் மூலமும் தெரியப்படுத்துங்கள்.
அடுத்த மாதம் (மார்ச்) 6-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை மாவட்ட, வட்டார அளவில் போராட்டங்கள் நடத்தி மக்கள் மத்தியில் எடுத்து சொல்லுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் 7 மாவட்டங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 68 மாவட்டங்களுக்கும் தகவல் சென்றுள்ளது. மத்திய சென்னை மாவட்டத்தில் 6 சர்க்கிள் தலைவர்கள் தலைமையில் 6 இடங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மாவட்ட தலைவர் சிவராஜ் சேகரன் கூறினார். இதே போல் மற்ற மாவட்டங்களிலும் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
- அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன.
- உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார்.
அதானியின் நிறுவனங்கள் மோசடி செய்தே உலக பணக்காரர் வரிசையில் அதானி இடம் பெற்றதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அம்பலப்படுத்தியது.
இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன. ராகுல்காந்தியும் பாராளுமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தால் பாராளுமன்றமும் முடங்கியது.
உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் பேரணி அறிவித்துள்ளது.
அதன்படி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
- அதானி விவகாரத்தில் விசாரணை நடத்த இவ்வளவு பயம் ஏன் என பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
- அதானி பிரச்சினையை தொடர்ந்து எழுப்பிக்கொண்டு இருப்பேன் என அவர் கூறியிருந்தார்.
புதுடெல்லி:
இந்தியாவின் பிரபல தொழிலதிபரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள், பங்குச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாகவும், கணக்குகளில் முறைகேடு செய்ததாகவும் அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியிருந்தது. இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் அரசியல் புயலைக் கிளப்பி இருக்கிறது.
இதுதொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்தவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
அதானி பிரச்சினையை முன்வைத்து மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குறைகூறி வருகிறார். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில், அதானி விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை மீண்டும் அவர் சாடியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், எல்.ஐ.சி.யின் மூலதனம் அதானிக்கு. பாரத ஸ்டேட் வங்கியின் மூலதனம் அதானிக்கு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலதனம் அதானிக்கு. அதானி முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த பிறகும் பொதுமக்களின் ஓய்வூதிய பணம் ஏன் அதானியின் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது? என கேள்வி எழுப்பினார்.
திரு.பிரதமரே விசாரணை இல்லை, பதில் இல்லை. ஏன் இவ்வளவு பயம்?' எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது வாழ்நாள் முழுவதும் பாராளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்தாலும், அதானி பிரச்சினையை தொடர்ந்து எழுப்பிக்கொண்டு இருப்பேன் என அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்கப்பட்டது.
- அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது.
முன்னாள் பிரதமர் வி.பி.சிங் நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார்.
அதன்பிறகு, செய்தியாளர்கள் சந்திப்பில், "முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாமகவினர் போராடி வருவது குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனிடம் கேள்வி கேட்டனர். அதற்கு அவர், "கருத்துச் சொல்ல விரும்பவில்லை" என்றார்.
மேலும், திருமாவளவன் கூறியதாவது:-
மதத்தை அல்லது மத உணர்வுகளை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பாடப்பட்ட பாடல் அல்ல. ஐயப்பன் துஇருக்கோயிலில் பெண்கள் நுழையக்கூடாது என்கிற சர்ச்சை எழுந்தபோது, ஒரு பெண்ணியக் குரலாக அந்த குரல், பெரியாரின் குரலாக அந்த குரல் இசையாக வெளிவந்து இருக்கிறதே தவிர அதில் யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்தக்கூடியதாக இல்லை.
அதானி போன்ற பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக தமிழ்நாட்டில் இதை பெரிதுப்படுத்துகிறார்கள்.
அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது தேசிய அளவிலான கோரிக்கையாக மாறிருக்கிறது. அவற்றை எல்லாம் திசைத்திருப்பவே இதுபோன்ற சிறு பிரச்சினைகளை கையில் எடுக்கிறார்கள் என்று கருதுகிறேன். அது ஏற்புடையது அல்ல.
இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்லுவது பொறுத்தமானது அல்ல. அது கண்டனத்திற்குரியது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட் ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார்.
- அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.
சூரிய மின்சக்தி ஒப்பந்தம் பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,029 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொழிலதிபர் கவுதம் அதானி மீது நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது அரசியல் ரீதியாகவும் புயலைக் கிளப்பி வருகிறது.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்த 51வது ஜெம் அண்ட்ஜூவல்லரி விருது விழாவில் அதானி பேசியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேடையில் பேசிய அவர், இரண்டு வாரங்களுக்கு முன்னர், அதானி க்ரீன் எனர்ஜியின் நடைமுறைகள் குறித்து அமெரிக்காவிடமிருந்து வந்த பல குற்றச்சாட்டுகளை உங்களில் பெரும்பாலோர் படித்திருப்பீர்கள்.

இதுபோன்ற சவால்களை நாம் எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு தாக்குதலும் நம்மை வலிமையாக்குகிறது, மேலும் ஒவ்வொரு தடையும் மிகவும் உறுதியான அதானி குழுமத்திற்கு ஒரு படியாக மாறும். அதானி குழுமத்தின் வெற்றிகள் இருந்தபோதிலும், அது எதிர்கொண்ட சவால்கள் இன்னும் பெரியவை, இந்தச் சவால்கள் நம்மை உடைக்கவில்லை.
மாறாக, அவை நம்மைக் கடினமாக்கியுள்ளன, மேலும் ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும், நாம் மீண்டும் எழுவோம், முன்பை விட வலிமையாக, மேலும் வலிமையுடன் எழுவோம் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை நமக்கு இவை அளித்துள்ளன என்று தெரிவித்தார். மேலும் 2023 இல் வெளிவந்த ஹிண்டன்பெர்க் அறிக்கையையும் சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
- அவையில் எதிர்க்கட்சியில் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
- அதானி விவகாரத்தை விவாதிக்க அவர்கள் பயப்படுகின்றனர் என்றார் பிரியங்கா.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் அதானி விவகாரம் மற்றும் அமெரிக்க தொழிலதிபர் சோரஸ் விவகாரம் ஆகியவை எதிரொலித்தது. இதையடுத்து, அவையில் எதிர்க்கட்சியில் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், வயநாடு எம்பியான பிரியங்கா காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதானி விவகாரத்தை விவாதிக்க அவர்கள் பயப்படுகின்றனர். நான் பாராளுமன்றத்திற்கு புதியவர். ஆனால் இதுவரை பிரதமரை பாராளுமன்றத்தில் காணவில்லை. இந்தப் பிரச்சனையை நாம் ஏன் எழுப்பக் கூடாது?
அப்போது, அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபரான ஜார்ஜ் சோரோசுடன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு தொடர்பு உள்ளது என்ற பா.ஜ.க.வினரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பிரியங்கா காந்தி, இது அவர்கள் கொண்டு வரக்கூடிய மிகவும் அபத்தமான விஷயம். அவர்கள் 1994-ம் ஆண்டு விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள், அதைப் பற்றி யாரிடமும் எந்த பதிவும் இல்லை. என்ன பேசுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதானி பிரச்சனையை விவாதிக்க விரும்பாததால் தான் இப்படி செய்கிறார்கள் என காட்டமாக தெரிவித்தார்.
- அரசு அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்துள்ளார்
- டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.
இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானி, மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்காவில் முதலீடுகளைத் திரட்டியதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அவருக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.
இது அரசியளிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க இந்தியா கூட்டணி எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் நியூயார்க்கின் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் அதானி வழக்கை விசாரித்த நீதிபதி ப்ரியோன் பீஸ் [breon peace] [53 வயது] தனது பதவி விலகலை அறிவித்துள்ளார்.
அதானி விவகாரத்தில் இந்தியா சார்பில் அமெரிக்க நீதித்துறைக்கு அழுத்தம் இருந்து வந்த நிலையில் டிரம்ப் அடுத்த மாதம் பதவி ஏற்பதற்கு முன்னர் ஜனவரி 10 ஆம் தேதியோடு தான் பதவி விலகுவதாக அவர் இன்று அறிவித்தார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் அடுத்த மாதம் பதவி ஏற்கிறார்.

இந்நிலையில் தற்போதைய அதிபர் ஜோ பைடனால் நியமிக்கப்பட்ட நீதிபதி அதுவும் அதானி வழக்கு உட்பட பல முக்கிய வழக்குகளை கையாண்ட நீதிபதி திடீர் பதவி விலகலை அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. 2021 முதல் அவர் நியூயார்க்கில் நீதிபதியாக பணியாற்றி வந்துள்ளார்.
- அதிபர் டிரம்புடன் அதானி விவகாரம் குறித்து பேசவில்லை என்றார் பிரதமர் மோடி.
- அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என்றார் ராகுல் காந்தி.
புதுடெல்லி:
தொழிலதிபர் அதானி மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ள நிலையில், அந்நாட்டு ஜனாதிபதி டிரம்புடன் இது குறித்து பேசவில்லை என தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், தனிப்பட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் பேசுவது இல்லை என விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதானி விவகாரம் குறித்து இந்தியாவில் நீங்கள் கேள்வி எழுப்பினால், மவுனமே பதிலாக இருக்கும். வெளிநாட்டில் கேள்வி கேட்டால் அது தனிப்பட்ட விவகாரமாகி விடும். அமெரிக்காவில் கூட மோடிஜி அதானியின் ஊழல்களை மறைக்கிறார் என பதிவிட்டுள்ளார்.






