என் மலர்tooltip icon

    இந்தியா

    அதானி குழும முறைகேடு புகார்- மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் பேரணி அறிவிப்பு
    X

    அதானி குழும முறைகேடு புகார்- மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் பேரணி அறிவிப்பு

    • அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன.
    • உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார்.

    அதானியின் நிறுவனங்கள் மோசடி செய்தே உலக பணக்காரர் வரிசையில் அதானி இடம் பெற்றதாக அமெரிக்க நிறுவனம் ஒன்று அம்பலப்படுத்தியது.

    இந்த விவகாரத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கையில் எடுத்து போராடி வருகின்றன. ராகுல்காந்தியும் பாராளுமன்றத்தில் பலமுறை கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தால் பாராளுமன்றமும் முடங்கியது.

    உண்மை வெளிவராமல் திசை திருப்பும் முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளதாக ராகுல் குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக மார்ச் 13ம் தேதி காங்கிரஸ் பேரணி அறிவித்துள்ளது.

    அதன்படி, அனைத்து மாநில தலைநகரங்களிலும் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி, பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

    Next Story
    ×