என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சீன் பேக்கர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா.
    • இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது

    2024 ஆம் ஆண்டு சியான் பேகர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா. இப்படத்தின் தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் சீன் பேக்கர் மேற்கொண்டுள்ளார்.

    இப்படத்தில் Mikey Madison, Mark Eydelshteyn,Yura Borisov,Karren Karagulian, Vache Tovmasyan மற்றும் Aleksei Serebryakov முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில் இந்த ஆஸ்கர் விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை 25- வயதே ஆன மைக்கி மாடிசன் வென்றுள்ளார். சிறந்த இயக்குனர், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான விருதை சீன் பேக்கர் வென்றார். ஒரு நபர் நாங்கு ஆஸ்கர் விருதினை வாங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
    • எந்த கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

    நாகையில் நடைபெற்ற தி.மு.க. நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

    * இதில் எந்த கட்சியும் கவுரவம் பார்க்க வேண்டாம். கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

    * அனைத்து கட்சி கூட்டத்தை அரசியலாக பார்க்க கூடாது.

    * தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை பறிக்க பார்க்கிறது பா.ஜ.க.

    * பிள்ளைப்பேற்றை தள்ளிப்போடாமல் குழந்தையை பெற்றுக்கொள்ளுங்கள்.

    * மக்கள்தொகை அதிகரித்தால் தான் எம்.பி.க்கள் எண்ணிக்கை உயரும் என்று திருமண விழாவில் மணமக்களுக்கு அவர் அறிவுரை கூறினார்.

    • கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
    • 105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அப்படி செல்லும் போது 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு தி.மு.க.வினரை தயார்படுத்தும் வகையில் கட்சி பணிகளையும் மேற்கொள்கிறார்.

    ஆட்சிப்பணி, கட்சிப்பணி இரண்டையும் ஒருங்கே செய்து வரும் அவரது நடவடிக்கைகள் தி.மு.க. வினரையும், அதிகாரிகளையும் சுறுசுறுப்பாக மாற்றி உள்ளது.

    அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். பிறகு அவர் திருச்சியில் இருந்து காரில் நாகை மாவட்டத்துக்கு சென்றார்.

    நாகை மாவட்ட எல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவர் அங்கு அரசு சுற்றுலா மாளிகையில் இரவில் தங்கி ஓய்வு எடுத்தார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    நாகை தம்பித்துரை பூங்காவில் இருந்து புத்தூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    சில இடங்களில் அவர் சாலையில் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். மக்களிடம் அவர் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    அதன்பிறகு நாகையில் நடந்த விழாவில் 38 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 700 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் நாகையில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான தளபதி அறிவாலயத்தையும் திறந்து வைத்தார்.

    • இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
    • முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்தி எதிர்ப்பு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    இந்தி திணிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட பதிவு இந்திய அளவில் பேசுபொருளாகியுள்ளது.

    அவரது பதிவில், "மற்ற மாநிலங்களைச் சேர்ந்த என் அன்பான சகோதரிகளே, சகோதரர்களே,

    இந்தி எத்தனை இந்திய மொழிகளை விழுங்கிவிட்டிருக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? போஜ்புரி, மைதிலி, அவதி, பிரஜ், பண்டேலி, கர்வாலி, குமாவோனி, மகாஹி, மார்வாரி, மால்வி, சத்திஸ்கர், சந்தாலி, அங்கிகா, ஹோ, காரியா, கோர்தா, கூர்மாலி, குருக், முண்டாரி மற்றும் இன்னும் பல இப்போது உயிர்வாழ்வதற்காக மூச்சுத் திணறுகின்றன.

    ஒற்றைக்கல் (monolithic) இந்தி அடையாளத்திற்கான அழுத்தம் பண்டைய தாய்மொழிகளைக் கொல்கிறது. உ.பி. மற்றும் பீகார் ஒருபோதும் வெறும் "இந்தி இதயப்பகுதிகள்" அல்ல. அவற்றின் உண்மையான மொழிகள் இப்போது கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள்.

    இது எங்கே முடிகிறது என்பது நமக்குத் தெரியும் என்பதால் தமிழ்நாடு எதிர்க்கிறது. தமிழ் விழித்தது; தமிழினத்தின் பண்பாடு பிழைத்தது! சில மொழிகள் இந்திக்கு இடம் கொடுத்தன; இருந்த இடம் தெரியாமல் தொலைந்தன" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "இந்தியை திணிக்காத தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்ப்பதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் உள்ளன.

    புதிய கல்விக்கொள்கை 2020 இல் இந்தி மட்டுமே இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் கூறியதில்லை. தாய்மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படும். தமிழகத்தில் தமிழில் தான் கற்பிக்கப்படும் என்றுதான் சொன்னோம்.

    சிலரின் அரசியல் ஆசைகளுக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. புதிய கல்விக்கொள்கை 2020 இந்தியாவின் பல்வேறு மொழிகளில் கவனம் செலுத்துகிறது. அதில், இந்தி , தமிழ், ஒடியா, பஞ்சாபி உட்பட எல்லா மொழிகளுக்கும் சம முக்கியத்துவம் உண்டு. தமிழகத்தில் அரசியல் காரணங்களால் இதை சிலர் எதிர்க்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • தமிழக மக்கள் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் தோல்வி தான்.
    • 2026-ம் ஆண்டு 200 அல்ல 200-ஐ தாண்டி தி.மு.க. தலைமையில் உள்ள மதசார்பற்ற கூட்டணி வெல்லும்.

    சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், முதல் எதிரி தி.மு.க.தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஏற்கனவே ஒழிந்துகொண்டு இருக்கக்கூடிய கட்சி அந்த கட்சி. முழுமையாக அதை அவர் ஒழித்து விட்டார்.

    எதிரிகளே இல்லை நான் தான் எதிரி என்கிறார். நாங்கள் அவரை எதிரியாக பார்க்கவில்லை உதிரியாகத்தான் பார்க்கிறோம்.

    அவர் தலைமை ஏற்ற பிறகு தமிழக மக்கள் அவர்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய பரிசு என்னவென்றால் தோல்வி தான்.

    எங்கள் கழகத்தலைவர் தலைவராக முன்னின்று தேர்தலை சந்தித்த பிறகு தமிழக மக்கள் அவருக்கு கொடுத்துக் கொண்டிருக்கக்கூடிய பரிசு வெற்றி.

    ஆகவே 2026-ம் ஆண்டு 200 அல்ல 200-ஐ தாண்டி தி.மு.க. தலைமையில் உள்ள மதசார்பற்ற கூட்டணி வெல்லும். இதை நாளைய வரலாறு சொல்லும் என்று கூறினார்.

    • மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயலும் அண்ணாமலையின் பேச்சு கண்டனத்துக்குரியது.
    • இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு நமது நாடு பலவீனமாக இருக்கிறதா?

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியதாவது:

    மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயலும் பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலையின் பேச்சு கடும் கண்டனத்துக்குரியது.

    பாஜக தேர்தலுக்கு முன்பு கடல் தாமரை மாநாடு நடத்துவார்கள், மீனவர்களை சந்திப்பார்கள் தேர்தல் முடிந்த பின்பு ஒட்டுமொத்தமாக மீனவர்களை கைவிட்டு விடுவார்கள்.இதுதான் அவர்களின் வழக்கம்.

    தற்போது அனைத்திற்கும் மேலாக பாஜகவில் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை மீனவர்களை கடத்தல் காரர்களாக சித்தரிக்க முயல்கிறார்.

    பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அதனை பகிரங்கமாக கூறுகிறார். அவரது எண்ணம் ஆபத்தானது,

    ஒன்றிய பாஜக அரசு நினைத்தால் மீனவர்களின் பிரச்சனைக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்திட முடியும், ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காத பாஜக, பிரச்சனையை திசை மாற்றும் வண்ணம், பாதிக்கப்பட்ட மீனவர்களையே குற்றம் சாட்டும் வண்ணம், மீனவர்களையே அவமானப்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.

    நம்மை விட சிறிய நாடான இலங்கை கடற்படையை கூட கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பலவீனமாக நம்முடைய நாட்டை பாஜக மாற்றி இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது.

    தினம் தினம் செத்துப் பிழைக்கும் எங்களின் மீனவர்களின் இன்னல்களை தீர்க்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பாஜக, தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கும் மேலாக நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நாங்கள் எழுப்பிய குரலுக்கு செவிமடுக்காத பாஜக, தற்போது போலி நாடகம் போடுகிறது.

    பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஒட்டுமொத்த மீனவர்களையும் இழிவுபடுத்தும் வண்ணம் அவர்களை கடத்தல் காரர்கள் என்ற போர்வையில் பேசுவது கடும் கண்டனத்துக்குரியது, திரு அண்ணாமலை இதற்கு உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்டிட வேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. சென்னையில் நேற்று தங்கம் விலை ஒரு கிராம் ரூ.7,940-க்கும், ஒரு சவரன் ரூ.63,520-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520

    28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680

    27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080

    26-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,400

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    02-03-2025- ஒரு கிராம் ரூ.105

    01-03-2025- ஒரு கிராம் ரூ.105

    28-02-2025- ஒரு கிராம் ரூ.105

    27-02-2025- ஒரு கிராம் ரூ.106

    26-02-2025- ஒரு கிராம் ரூ.106

    • பிளஸ்-2 தேர்வை மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
    • தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபடுகின்றனர்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இன்று முதல் 25ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. இன்று தமிழ் மொழி பாடத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை மாணவ-மாணவிகள் எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபடுகின்றனர்.

    தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் தொடர் மின்சாரம் வழங்கும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. 

    • 97வது ஆக்ஸர் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ்- இல் நடைப்பெற்றது.
    • Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது

     97வது ஆக்ஸர் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ்- இல் நடைப்பெற்றது.

    சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளை வழங்கியது.

    Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது.

    இந்த வருடம் ஆக்ஸர் இறுதிப் பட்டியலில் இந்தியாவிலுருந்து சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் என்ற பிரிவில் இந்தியாவைச் சார்ந்த 'அனுஜா' என்ற குறும்படம் தேர்வானது.

    ஆடம் ஜே.கிரேவ்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை குனீத் மோங்கா, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். இந்த குறும்படம் குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை பற்றி பேசுகிறது.

    அனுஜா படம் மட்டுமே இந்தியா சார்பில் இந்த வருடம் ஆஸ்கர் இறுதி பட்டியலில் இடம்பெற்ற ஆகும் ஆனால் சிறந்த லவ் ஆக்ஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை I'M NOT A ROBOT படம் வென்றது.

    இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்த அனுஜா திரைப்படம் விருது வெல்லாததால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.
    • கேன் வில்லியம்சன் பொறுப்பாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார்.

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) துபாயில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

    நேற்றைய போட்டியில் இரு அணிகளின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்களை மட்டுமே எடுத்தது. மறுப்பக்கம் எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

    எனினும், அந்த அணியின் வீரர்கள் அவுட் ஆகி வந்தனர். அந்த அணியின் நட்சத்திர வீரரான கேன் வில்லியம்சன் தனது விக்கெட்டை கொடுக்காமல், நிதானமாக ஆடி ரன்களை சேர்த்து வந்தார். இந்த நிலையில், போட்டியின் இக்கட்டான சூழலில், இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் கேன் வில்லியம்சன் விக்கெட்டை எடுத்தார்.

    உடனே இந்திய வீரர்கள் அக்சர் படேலை வாழ்த்த அவரை நோக்கி ஓடி வந்தனர். அப்போது, அக்சர் படேலிடம் ஓடி வந்த விராட் கோலி அவரது காலை தொட்டு வணங்க முற்பட்டார். எனினும், இதனை சுதாரித்து கொண்ட அக்சர் படேல் சட்டென கீழே உட்கார்ந்து கொண்டு விராட் கோலி கைகளை பற்றிக் கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.



    • அமைச்சர் அன்பில் மகேஷ் நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார்.
    • என்ன படித்தீர்களோ அதை தான் கேட்கப்போகிறார்கள்... பதட்டமில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள்.

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதையடுத்து தேர்வெழுதும் மாணவ-மாணவிகளுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

    குட்மார்னிங்..

    டென்ஷன் இல்லாமல் எழுத வேண்டும்.

    என்ன படித்தீர்களோ அதை தான் கேட்கப்போகிறார்கள்... பதட்டமில்லாமல் ஹாப்பியா எழுதுங்கள்.

    முதலமைச்சரும் அதைத்தான் சொல்லி இருக்கிறார்கள். உற்சாகமாக எழுதுங்கள்.. நல்லா எழுதுங்க.. ஆல் தி பெஸ்ட் என்று வாழ்த்தினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
    • அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று முதல் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    திடநம்பிக்கையோடும் பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுகிறேன்.

    விரும்பும் உயர்கல்வியைப் பெறுவதற்கேற்ப அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    ×