என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மார்கோ திரைப்படம்.
    • அடுத்ததாக கட்டாளன் என்ற திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரிக்கிறார்.

    கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி மலையாள மொழியில் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மார்கோ திரைப்படம்.

    இத்திரைப்படம் மிகவும் ஆக்ஷன், வயலன்ஸ், துப்பாக்கி, ரவுடிசம் நிறைந்த கதைக்களமாக அமைந்துள்ளது. இதுவரை இப்படி வன்முறை நிறைந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகவில்லை என பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தனர். இத்திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரித்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக கட்டாளன் என்ற திரைப்படத்தை ஷரீஃப் முகமத் தயாரிக்கிறார். இப்படத்தை பால் ஜார்ஜ் இயக்குகிறார். படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டனி வர்கீஸ் கையில் கோடாரியுடன் எறியும் நெருப்பின் அருகே நிற்கிறார். இத்திரைப்படமும் ஒரு ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
    • டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன.

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்த தொடர் அடுத்த மாதம் 22ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது.

    இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகளில் டெல்லி மற்றும் கொல்கத்தாவை தவிர மற்ற அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்துவிட்டன. கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானா அல்லது இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விடியோவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

    மேலும், இந்த புதிய ஜெர்சியை விலை கொடுத்து வாங்குவதற்கான இணையதளத்தின் லிங்கின் அந்த அணி பகிர்ந்துள்ளது.

    • இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை எடுத்தது.
    • வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 249 ரன்களை எடுத்தது.

    எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்தப் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி பந்துவீசிய விதத்தை முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வெகுவாக பாராட்டியுள்ளார். மேலும், முகமது ஷமியின் பந்துவீச்சு பல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரும் பாடமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "பல வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக இருக்கக்கூடிய மாஸ்டர் கிளாஸ் தர சீரமைப்பு.

    முதல் படம் ஷமி ஒரு கோணத்தில் இருந்து கிரீசை எவ்வாறு தாக்குகிறார் என்பதைக் காட்டுகிறது. இரண்டாவது படம் ஆங்குலர் ரன் அப் காரணமாக அவர் எவ்வாறு வசதியாக ஒரு சைட் ஆன் பொசிஷனுக்கு நகர்ந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது.

    மேலும் மூன்றாவது படம் அவரது மணிக்கட்டு எப்படி சரியான தலைகீழாக சுழல்கிறது என்பதைக் காட்டுகிறது. இதன் வெளிப்பாடு கடைசி படத்தில் அந்த இன்வெர்ஷன் எவ்வளவு கச்சிதமாக வந்துள்ளது என்பதை காட்டுகிறது. அவர் பந்து வீசுவதை பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது," என குறிப்பிட்டுள்ளார்.

    நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி 45.3 ஓவர்களில் 205 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் அரையிறுதி சுற்றில் களமிறங்க உள்ளது. அரையிறுதி சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாட உள்ளது. இந்தப் போட்டி நாளை (மார்ச் 4) துபாயில் நடைபெறுகிறது.



    • கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பிரதமர் மோடி பார்வையிட்டார்.
    • பிரதமர் மோடி தன்னுடைய கேமராவில் சிங்கங்களை படம் பிடித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக குஜராத் வந்தடைந்தார்.

    இந்நிலையில், உலக வனவிலங்குகள் தினத்தை முன்னிட்டு கிர் தேசிய பூங்காவை பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களை பார்வையிட்ட பிரதமர், தன்னுடைய கேமராவில் சிங்கங்களை படம் பிடித்தார்.

    முன்னதாக பிரதமர் மோடி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான சோம்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். பிரதமர் மோடி ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

    • தனபாக்கியம் நிறுவனத்திற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு.
    • ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து ரூ. 9.39 கோடியை வசூலிக்க ஜகஜால கில்லாடி படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் நிறுவனத்திற்கு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி பங்குதாரராக இருக்கும் ஈசன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவான "ஜகஜால கில்லாடி" என்ற படத்தை தயாரித்தது.

    இந்தப் படத்தை தயாரிக்க தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து ரூ. 3 கோடியே 74 லட்சம் கடன் பெற்று இருந்தனர். கடன் ஒப்பந்தத்தின் படி இந்த கடனை ஆண்டுக்கு 30 சதவீதம் வட்டியுடன் திருப்பி அளிப்பதாக உறுதியளித்து இருந்தனர். எனினும், இந்த கடனை திருப்பி அளிக்காததை தொடர்ந்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.

    மத்தியஸ்தராக இருக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி இந்த விவகாரத்தை விசாரித்து, கடன் பாக்கி தொகை வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை வசூலிக்க ஏதுவாக "ஜகஜால கில்லாடி" படத்தின் மொத்த உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு ஒப்படைக்க கடந்த ஆண்டு 2024-ம் ஆண்டு மே மாதம் உத்தரவிட்டு இருந்தார். இந்த உரிமைகளை பெற்றுக்கொண்டு விற்று அந்த கடன் தொகையை ஈடு செய்ய வேண்டும் என்றும் மீதித் தொகையை ஈசன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டும் என்றும் மத்தியஸ்தர் உத்தரவிட்டு இருந்தார்.

    உத்தரவின் படி படத்தின் உரிமையை ஒப்படைக்கும் படி தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனம் கேட்டது. எனினும், படத்தின் பணிகள் முழுமை பெறவில்லை என்பதால் அதனை ஒப்படைக்க முடியாது என்று ஈசன் புரொடக்ஷன்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மத்தியஸ்தர் உத்தரவை அமல்படுத்தும் வகையில் ராம்குமார் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து புதிய ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில் தற்போது வரை கடன் தொகையில் 9 கோடியே 39 லட்சத்து 5 ஆயிரத்து 43 ரூபாய் வசூலிக்க வேண்டியுள்ளதாக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் தெரிவித்து இருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல், "இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதற்கு ஈசன் புரொடக்ஷன்ஸ் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. எனினும், இதுவரை பதில் மனு எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட சார்பதிவாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ளது.

    • ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படத்தில் சொனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    நானி, கீர்த்தி சுரேஷ் , சமுத்திரகனி, டாம் சாக்கோ போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து அறிமுக இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தசரா.

    தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான தி பாரடைஸ் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். எஸ்.எல்.வி. சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

    தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் . படத்தின் முதல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    நானி இதுவரை பார்த்திராத லுக்கில் இருக்கிறார். இரண்டு மூக்குத்தி, இரட்டை பின்னிய ஜடையுடன் ஒரு கூட்டத்தின் தலைவனாக கிளிம்ப்ஸ் வீடியோவை காட்சிப்படுத்தியுள்ளனர். திரைப்படத்தில் சொனாலி குல்கர்னி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மற்றும் படத்தொகுப்பை நவீன் நூலி மெற்ற்கொள்கின்றனர். திரைப்படம் 2026 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை புகாரின்பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
    • சீமான்- நடிகை தரப்பு பரஸ்பரம் பேசி முடிவெடுக்க வேண்டும்.

    தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி சீமான் தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஒருவர் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின்பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மனு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு மீதான விசாரணை கடந்த 17-ந்தேதி நடைபெற்றது. அப்போது, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அதில், இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் உயர் நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, 12 வாரங்களுக்குள் புலன் விசாரணை நடத்தி காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் இந்த மேல் முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,

    * ஏற்கனவே இந்த வழக்கு திரும்ப பெறப்பட்ட நிலையில் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    * சீமான்- நடிகை தரப்பு பரஸ்பரம் பேசி முடிவெடுக்க வேண்டும்.

    * இடைப்பட்ட காலத்தில் settlement வழங்குவது குறித்து இருதரப்பும் பேசி முடிவெடுக்க வேண்டும்.

    * மேலும், நடிகையின் பாலியல் புகார் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.

    • திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் ஆகியோர் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர்.
    • தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேல் நாட்டிற்குள் ஜோர்டான் வழியாக சட்டவிரோதமாக நுழையமுயன்றதாக கூறி கேரளாவை சேர்ந்த நபர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த கேப்ரியல் மற்றும் எடிசன் என்ற இருவர் பிப்ரவரி 5 ஆம் தேதி, சுற்றுலா விசாவில் ஜோர்டானுக்குச் சென்றுள்ளனர். அவர்கள் சில நபருடன் சேர்ந்து இஸ்ரேலின் எல்லையை சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர்.

    அப்போது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் தாமஸ் கேப்ரியல் (44) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாமஸ் கேப்ரியலின் உறவினரான எடிசன் என்பவரின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.

    தாமஸ் கேப்ரியல் உயிரிழந்தது தொடர்பாக இஸ்ரேலுக்கான இந்திய தூதரகத்திலிருந்து அவரது குடும்பத்தினருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.

    • ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.
    • இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் காரணமாக இந்துமதி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்ற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.

    அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நேற்று தேனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூட தி.மு.க.வின் நீட் ரகசிய அரசியல் நாடகம் குறித்து நான் பேசிய நிலையில்,

    நாமும் மருத்துவர் ஆகிவிடலாம் என்கிற உயரிய லட்சியத்தோடு அல்லும் பகலும் படித்து வரும் மாணவர்கள் மத்தியில்,

    ஆட்சிப்பொறுப்பேற்று 4 ஆண்டுகள் ஆகியும் இன்று வரை அவர்களுக்கு விடியா தி.மு.க. அந்த நீட் ரகசியத்தை சொல்லாமல், ரகசியம் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி அவர்களை குழப்பத்திலேயே வைத்திருக்கும் இந்த ஸ்டாலின் மாடல் அரசுதான் மாணவியின் மரணத்திற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

    அந்த நீட் ரகசியத்தை மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உடனடியாக சொல்ல வேண்டும், அப்படி இல்லை என்றால், தி.மு.க. பொய்தான் சொன்னது என்ற உண்மையை ஒப்புகொண்டு, இனியாவது எந்த நீட் மரணமும் நிகழாவண்ணம் தடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது.
    • Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது .

    இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

    சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் இந்த வருடத்தின் விருதுகளை வழங்கியது.

    Anora திரைப்படம் இந்தாண்டு 5 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது . சிறந்த திரைப்படம் , திரைக்கதை, இயக்குனர், நடிகை மற்றும் படத்தொகுப்பு ஆகிய பிரிவுகளில் விருதை அள்ளியுள்ளது.

    இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்ப்பதால் கெனைன் ஓ பிரைன் அவரது தொடக்க உரையை ஆங்கில மொழியில் மட்டுமல்லாமல் இந்தி, ஸ்பானிஷ், சீன மற்றும் பிற மொழிகளிலும் பேசினார்.

    அதில் அவர் இந்தியில் கூறியதாவது " நமஸ்தே. இந்தியாவில் தற்பொழுது காலையாக இருக்கும். நீங்கள் அனைவரும் 97- வது அகாடமி விருது வழங்கும் விழாவை மகிழ்ச்சியாக காலை உணவை சாப்பிட்டுக்கொண்டு பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் என நம்புகிறேன்" என கூறியுள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் இந்தியில் பேசியது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்தியில் பேசிய வீடியோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது
    • திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் அதிகமானோர் நீராடினர்.

    உத்தர பிரதேசத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13-ம் தேதி தொடங்கியது. 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி அண்மையில் நிறைவடைந்தது. திரிவேணி சங்கமத்தில் 66 கோடிக்கும் அதிகமானோர் நீராடினர்.

    இந்நிலையில், மகா கும்பமேளாவில் காணாமல் போன 54,357 பேர் தங்களது குடும்பங்களுடன் மீண்டு இணைந்துள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

    கும்பமேளாவில் காணாமல் போனவர்களை கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்துடன் சேர்க்க சிறப்பு நடவடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. காணாமல் போனவர்களில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சீன் பேக்கர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா.
    • இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக நடைப்பெற்றது

    2024 ஆம் ஆண்டு சியான் பேகர் இயக்கத்தில் வெளியானது அமெரிக்கன் ரொமாண்டிக் காமெடி திரைப்படமான அனோரா. இப்படத்தின் தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் சீன் பேக்கர் மேற்கொண்டுள்ளார்.

    இப்படத்தில் Mikey Madison, Mark Eydelshteyn,Yura Borisov,Karren Karagulian, Vache Tovmasyan மற்றும் Aleksei Serebryakov முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இன்று 97- வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா மிக பிரம்மாண்டமாக மற்றும் கோலாகலத்துடன் நடைப்பெற்றது. பல்வேறு திரைப்பிரபலங்கள், இயக்குனர்கள் இந்த விழாவில் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில் இந்த ஆஸ்கர் விழாவில் அனோரா திரைப்படம் 5 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. சிறந்த நடிகைக்கான விருதை 25- வயதே ஆன மைக்கி மாடிசன் வென்றுள்ளார். சிறந்த இயக்குனர், திரைக்கதை மற்றும் படத்தொகுப்பிற்கான விருதை சீன் பேக்கர் வென்றார். ஒரு நபர் நாங்கு ஆஸ்கர் விருதினை வாங்குவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×