என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.
    • அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    இன்று முதல் பொதுத் தேர்வுகளை எழுதவுள்ள 12-ஆம் வகுப்பு மாணவச் செல்வங்கள் யாவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    திடநம்பிக்கையோடும் பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டுகிறேன்.

    விரும்பும் உயர்கல்வியைப் பெறுவதற்கேற்ப அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண்களைப் பெற நெஞ்சார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
    • ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

    அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.

    அதன்படி, செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத் ராவ் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

    இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக செபி அறிவித்துள்ளது. விளையாட்டுத்தனமான மனு மீது நீதிமன்றம் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

    நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செபி தெரிவித்து இருக்கிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக செபியிடம் எந்த கருத்தும் கேட்கப்படாமல் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக செபி குற்றம்சாட்டியுள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.
    • விற்பனைக்கு வந்துள்ள அந்த தங்கப்பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.84 லட்சம்.

    சீனப் பெண் ஒருவர் தங்கப் பாத்திரத்தில் சமைத்து சாப்பிடும் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஷென்சென் எனப்படும் அந்த இளம்பெண் 2 தங்க நகைக் கடைகளை நடத்தி வருகிறார். அவர் தனது நண்பரின் பட்டறையில் 1 கிலோ தங்கத்தில், தங்கப் பாத்திரத்தை செய்யச் சொல்லி வாங்கினார்.

    அதில் தனக்குப் பிடித்தமான உணவை சமைத்து சாப்பிட்டு வீடியோ வெளியிட்டு உள்ளார்.

    வீடியோவில் "இந்த தங்கப்பாத்திரம் விற்பனைக்குத்தான் தயாரிக்கப்பட்டு உள்ளது. அதனால் வாடிக்கையாளர்களிடம் அனுமதி கேட்டுத்தான் அதில் சமைத்து சாப்பிட்டு காட்சிப்படுத்தி உள்ளேன். தங்கம் அதன் சிறந்த கடத்து திறனால், உணவை சீக்கிரம் சமைக்க உதவுகிறது. ஆனால் உணவின் சுவையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று கூறி உள்ளார்.

    விற்பனைக்கு வந்துள்ள அந்த தங்கப்பாத்திரத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ.84 லட்சம். அந்த வீடியோவை பல லட்சம் பேர் ரசித்து உள்ளனர். பலரும் கலவையான கருத்துகளை பதிவிட்டு உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தனர்.
    • மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த சனிக்கிழமை ரோதக்கில் ஒரு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் நர்வாலின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கொலை குறித்து விசாரிக்க அரியானா போலீசார் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) அமைத்தனர்.

    இந்த நிலையில் நர்வால் கொலை வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "ஒருவரை நாங்கள் கைது செய்துள்ளோம். மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று தெரிவித்தார்.

    ரோதக்கில் உள்ள விஜய் நகரில் வசித்து வந்த நர்வால் அரசியலில் மிக குறுகிய காலக்கட்டத்தில் வளர்ச்சி பெற்று வந்ததை பார்த்து கட்சி தலைவர்கள் சிலர் பொறாமைப்படுவதாக நர்வாலின் தாயார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தொடர்ந்து பேசிய நர்வாலின் தாயார் சவிதா, "கடந்த பிப்ரவரி 27-ம் தேதி நான் அவளிடம் பேசினேன். மறுநாள் ஒரு கட்சி நிகழ்ச்சியில் மும்முரமாக இருப்பேன் என்று அவள் கூறியிருந்தாள். ஆனால் அவளுடைய தொலைபேசி அணைந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என் மகளுக்கு நீதி கிடைக்காத வரை, நாங்கள் அவளை தகனம் செய்ய மாட்டோம்," என்று அவர் கூறினார்.

    அரியானா காங்கிரஸ் தலைவர்கள் நர்வால் மிகவும் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள கட்சி பிரமுகர் என்று தெரிவித்திருந்தனர். அவர் முன்னதாக ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையிலும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கும் வழக்கம் கடந்த 96 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
    • 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் தற்பொழுத் நடைப்பெற்று வருகிறது.

    ஆஸ்கர் விருதுகள் உலகளவில் மிகவும் பிரபலம். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள், பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கும் வழக்கம் கடந்த 96 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் 97-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் தற்பொழுத் நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை ஏமி விருது வென்ற தொலைக்காட்சி தொகுப்பாளரும், நகைச்சுவை நடிகருமான கெனைன் ஓ பிரைன் தொகுத்து வழங்குகிறார். இதுவரை யார் யார் எந்தெந்த ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளனர் என்பதை இச்செய்தியில் காணலாம்.

    சிறந்த துணை நடிகருக்கான விருதை எ ரியல் பெயின் ( A Real pain) படத்திற்காக கீரன் கல்கின் ( Kieran Culkin) வென்றார்.

    சிறந்த ஆனிமேடட் படத்திற்கான விருதை ஃப்லோ {FLOW} திரைப்படம் வென்றது. இப்படத்தை Gints Zilbalodis இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த ஆனிமேடட் குறும்படத்திற்கான விருதை IN THE SHADOW OF THE CYPRESS குறும்படம் வென்றுள்ளது. இப்படத்தை Shirin Sohani and Hossein Molayemi இயக்கியது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை Wicked திரைப்படத்திற்காக Paul Tazewell வென்றார். இவரே ஆஸ்கர் விருது வெல்லும் முதல் கருப்பினத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த திரைக்கதைக்கான விருதை அனோரா (Anora) திரைப்படம் வென்றது. சியான் பேகர் (Sean Baker) இப்படத்தின் திரைக்கதை ஆசிரியராவார்.

    சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை கான்கிலேவ் (CONCLAVE) திரைப்படத்திற்காக Peter Straughan வென்றார்.

    சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரதிற்கான விருது THE SUBSTANCE திரைப்படத்திற்காக PIERRE-OLIVIER PERSIN, STÉPHANIE GUILLON AND MARILYNE SCARSELLI வென்றனர்.

    சிறந்த படத்தொகுப்பிற்கான விருதை Anora திரைப்படத்திற்காக Sean Baker வென்றார்.

    சிறந்த துணை நடிகைக்கான விருதை EMILIA PÉREZ படத்திற்காக Zoe Saldaña வென்றார்.

    சிறந்த கலை வடிவமைப்புக்கான விருதை WICKED திரைப்படத்திற்காக

    NATHAN CROWLEY மற்றும் LEE SANDALES வென்றனர்.

    சிறந்த பாடலுக்கான விருதை EMILIA PÉREZ திரைப்படத்தில் இடம் பெற்ற El Mal பாடல் வென்றது. இப்பாடலை பாடியவர்கள் Clément Ducol, Camille மற்றும் Jacques Audiard என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாட்னா, பக்சார், சாப்ரா, பாகல்பூர், முங்கர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளன.
    • நீர்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள், மீன்கள் ஆகியவற்றின் வாழ்வுக்கு உகந்ததாக இருக்கின்றன.

    பாட்னா:

    பீகார் மாநில சட்டசபையில் சமீபத்தில் 2024-2025 நிதியாண்டுக்கான பீகார் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பீகாரில் உள்ள கங்கை நதி நீரின் தரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பீகாரில் கங்கை நதியின் தரத்தை 34 இடங்களில் பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்து வருகிறது. 2 வாரங்களுக்கு ஒருதடவை இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

    அதில், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நதி நீரில் 'கோலிபாம்' என்ற பாக்டீரியா சார்ந்த நுண்கிருமிகள் அதிக அளவில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால், பீகாரில் பெரும்பாலான இடங்களில் கங்கை நீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை.

    கங்கை மற்றும் அதன் உபநதிகளின் கரைகளில் அமைந்துள்ள நகரங்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும், சாக்கடையும் கங்கையில் கலப்பதுதான் இதற்கு காரணம் ஆகும்.

    பாட்னா, பக்சார், சாப்ரா, பாகல்பூர், முங்கர் உள்ளிட்ட முக்கிய நகரங்கள், கங்கை நதிக்கரையில் அமைந்துள்ளன.

    அதே சமயத்தில், கங்கை நதிநீரில் இருக்கும் இதர அளவீடுகள், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்கின்றன. அவை நீர்வாழ் உயிரினங்கள், வனவிலங்குகள், மீன்கள் ஆகியவற்றின் வாழ்வுக்கு உகந்ததாக இருக்கின்றன. நீர்ப்பாசனத்துக்கும் ஏற்றதாக இருக்கின்றன.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கங்கை நதிநீரில் அதிக அளவு நுண்கிருமிகள் இருப்பதாக வெளியான தகவல் கவலை அளிக்கிறது என்று பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் டி.கே.சுக்லா தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.
    • மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கொண்டு செல்வதை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    தமிழ் கூட்டத்தை மீட்டு தன்மானமிக்க தமிழ் பேரினமாக வாழ வைக்க இருக்கிற உங்கள் பிள்ளைகள்தான் நாங்கள். மலை தானே போனால் போகட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இந்த வளத்தை உங்களால் உருவாக்க முடியாது. நேர்மையான ஆட்சி அமைந்தால் ஊழல், லஞ்சத்தை ஒழித்து விடலாம்.

    நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒரு கார் தருவோம். எல்லோருக்கும் ஒரு அலைபேசி தருவோம். அதற்கு சார்ஜர் கொடுப்போம் என்று மக்களை ஏமாற்றும் கூட்டம் அல்ல. நாங்கள் மக்கள் பிரச்சனைகளை கேட்க வந்தவர்கள், அவற்றை தீர்க்க வந்தவர்கள்.

    உங்களை நம்பித்தான் நிலத்தை காக்க, வளத்தை காக்க, நாம் எல்லோரும் பெரும்படையாக நின்று இந்த மண்ணின் வளத்தை காத்து இன்னொரு தலைமுறைக்கு கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு உண்டு. 13 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி மக்கள் பிரச்சனைக்காக போராடி வருகிறது.

    ஒரு நேரத்தில் சீமான் என்றால் பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்து வந்தார்கள். அனைத்து கட்சிகளும் இன்று நாம் வளர்ந்துவிட்டதை கண்டு பொறாமைப்படுகின்றனர். குறிப்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிம்ம சொப்பனமாக இந்த சீமான் இருக்கிறேன். என் பெயரை கேட்டாலே அவருக்கு இரவில் தூக்கம் கூட வருவதில்லை. ஆகவே மக்கள் ஆதரவு எங்களுக்கு படிப்படியாக உயர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு அதிக அளவில் கொடுக்கிறீர்கள். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் மருத்துவ கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகிறார்கள்.

    தமிழகத்தில் இயற்கை வளங்கள் அழிந்து வருகிறது. கேரளாவில் இயற்கை வளங்கள் மாறாமல் பசுமையாக வைத்து இருக்கிறார்கள். பணத்திற்கு ஆசைப்பட்டு இன்று பணத்தை எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். வருகிற 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு நாங்கள் ஆட்சி அமைப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்.
    • பிளஸ் 12 பொதுத் தேர்வுகளை 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இன்று பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 11 & 12ஆம் வகுப்பைச் சேர்ந்த அன்புத் தம்பிகள் மற்றும் தங்கைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    பொதுத் தேர்வினைத் துணிவுடன், தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டு, தேர்வில் வெற்றி பெற்று, வாழ்வில் சிகரம் தொட வாழ்த்துகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்வை கண்காணிக்க 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றவுள்ளனர்.
    • முறைகேடுகளை தடுக்க 4800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    தமிழ்நாட்டில் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்குகிறது. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 பள்ளி மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 பள்ளி மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதுகின்றனர்.

    இந்த தேர்வை எழுதுவதற்கு ஏதுவாக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு நாளும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு முறைகேடுகளை தடுக்க 4 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் தேர்வுப் பணியில் ஈடுபட உள்ளனர்.

    தேர்வு நடைபெற உள்ள பள்ளிகளில் தேர்வுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதை அரசு தேர்வுத்துறை உறுதி செய்து இருக்கிறது. பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும், தேர்வு பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவல் துறைக்கும், தேர்வு மையங்களின் போதுமான அடிப்படை வசதிகளை செய்துதர உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கிறது.

    பொதுத் தேர்வு குறித்து மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்கள் புகார்கள், கருத்துகள், சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக முழு நேர தேர்வு கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படம் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேர்வர்கள் மற்றும் பொது மக்கள் தேர்வு கட்டுப்பாட்டு அறையை (9498383075, 9498383076) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    • அவருக்கு வழங்கப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.
    • சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருகிறது.

    போப் பிரான்சிஸ் உடல்நிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சீராக இருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேற்றம் கண்டதை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை சுவாசக் கோளாறு காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து அவர் மீண்டு வந்ததாகவும், நிமோனியாவில் இருந்து அவர் மீண்டு வருவதால் அவரது சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் செயற்கை சுவாச உதவியுடன் இருந்த நிலையில், அவருக்கு தொடர்ச்சியான இருமல் இருந்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது. எனினும், நேற்று மருத்துவர்கள் வழங்கிய தகவல்களின் படி போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த உடல்நிலையை பார்க்கும் போது அவர் இன்னும் அபாய கட்டத்தை முழுமையாக கடந்துவரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • தலிபான்களின் நடவடிக்கைக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்தது.
    • பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள் உயர்கல்வி பயில தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.

    இதற்கிடையே சமீப காலமாக சர்வதேச உறவை மேம்படுத்த தலிபான்கள் முடிவுசெய்துள்ளனர். எனவே நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டு தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளனர்.

    ஏற்கனவே, பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.

    ×