என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அவருக்கு வழங்கப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.
    • சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருகிறது.

    போப் பிரான்சிஸ் உடல்நிலை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சீராக இருக்கிறது. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ் உடல்நிலை முன்னேற்றம் கண்டதை அடுத்து, அவருக்கு வழங்கப்பட்டு இருந்த செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை சுவாசக் கோளாறு காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களில் இருந்து அவர் மீண்டு வந்ததாகவும், நிமோனியாவில் இருந்து அவர் மீண்டு வருவதால் அவரது சுவாச செயல்பாடு ஒட்டுமொத்தமாக மேம்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    88 வயதான போப் பிரான்சிஸ் கடந்த வெள்ளிக்கிழமை வரையிலும் செயற்கை சுவாச உதவியுடன் இருந்த நிலையில், அவருக்கு தொடர்ச்சியான இருமல் இருந்து வந்தது. இதன் காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவானது. எனினும், நேற்று மருத்துவர்கள் வழங்கிய தகவல்களின் படி போப் பிரான்சிஸ் உடல்நிலை சீராக உள்ளது. ஆனால் ஒட்டுமொத்த உடல்நிலையை பார்க்கும் போது அவர் இன்னும் அபாய கட்டத்தை முழுமையாக கடந்துவரவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

    • இன்றைய முக்கியச் செய்திகள்.
    • இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..

    • தலிபான்களின் நடவடிக்கைக்கு ஐ.நா. சபை கடும் கண்டனம் தெரிவித்தது.
    • பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.

    காபூல்:

    ஆப்கானிஸ்தானில் 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்கள் உயர்கல்வி பயில தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

    தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா.சபை கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் பல நாடுகள் ஆப்கானிஸ்தானுடனான தூதரக உறவை முறித்துக் கொண்டன.

    இதற்கிடையே சமீப காலமாக சர்வதேச உறவை மேம்படுத்த தலிபான்கள் முடிவுசெய்துள்ளனர். எனவே நாட்டில் விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தற்போது கடந்த ஆண்டு தலைநகர் காபூலில் மூடப்பட்ட ஒரு தொலைக்காட்சி நிலையம் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளனர்.

    ஏற்கனவே, பெண்கள் வானொலி நிலையமான ரேடியோ பேகம் கடந்த வாரம் திறந்து வைக்கப்பட்டது.

    • பெங்களூரு அணி உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.
    • போட்டிகளைக் காண வந்த ரசிகர்கள் தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பெங்களூரு:

    3-வது மகளிர் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

    வதோதராவில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் வெற்றி கண்ட பெங்களூரு அணி, அதன்பிறகு உள்ளூரில் 4 ஆட்டங்களிலும் வரிசையாக தோற்று இருக்கிறது.

    இந்நிலையில், தொடர் தோல்வி எதிரொலியாக பெங்களூரு ரசிகர்களிடம் பெங்களூரு அணி கேப்டன் ஸ்மிருதி மந்தனா மன்னிப்பு கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, ஸ்மிருதி மந்தனா கூறுகையில், இந்தப் போட்டியை காண ரசிகர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து ஆதரவு அளித்தனர். தோல்வியால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருப்பார்கள். பெங்களூரு மைதானத்தில் அவர்களுக்காக ஒரு போட்டியிலும் எங்களால் வெற்றிபெற முடியவில்லை. அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெறுவோமென நம்புகிறேன் என தெரிவித்தார்.

    • கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • காங்கிரசார் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர் என்றார்.

    புதுடெல்லி:

    கேரள மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றிபெற முடியாத காங்கிரஸ் கட்சி இம்முறை எப்படியாவது வென்று ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

    ஆனால் அக்கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் தொகுதி எம்.பி.யுமான சசி தரூரின் செயலால் அம்மாநில காங்கிரசார் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

    சமீபத்தில் ஆளுங்கட்சியை பாராட்டி பேசியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டிரம்புடன் சந்திப்பு நடத்தியதற்காக பிரதமர் மோடியையும் பாராட்டியுள்ளார். இதனால் கேரள காங்கிரசார் செய்வதறியாது திகைத்தனர்.

    இதற்கிடையே, சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் விதமாக கேரள மாநில காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

    தலைவர்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும். கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யாரும் செயல்படக் கூடாது. கட்சி விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றாக நிற்பது போன்ற கருப்பு வெள்ளை புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தங்கள் முன் உள்ள சவாலுக்காக அனைவரும் ஒற்றுமையாக நிற்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.

    • மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு அறிவித்தார்.
    • கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கினார்.

    லக்னோ:

    மாயாவதி தனது அரசியல் வாரிசாக மருமகன் ஆகாஷ் ஆனந்தை கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் அறிவித்தார். அதோடு ஆகாஷ் ஆனந்திற்கு பகுஜன் சமாஜ்வாதி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது வழங்கப்பட்டது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு மே மாதம் பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் அவரை கட்சிப்பொறுப்பில் இருந்து நீக்கினார். ஆனால் அடுத்த சில வாரங்களில் மீண்டும் ஆகாஷ் ஆனந்திற்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இந்நிலையில், இரண்டாவது முறையாக ஆகாஷ் ஆனந்தை கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து மாயாவதி அதிரடியாக நீக்கி உள்ளார்.

    அவருக்கு பதில் அவரது தந்தை ஆனந்த் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜி கவுதம் ஆகியோரை அந்தப் பொறுப்பில் நியமித்துள்ளார்.

    தனது கடைசி மூச்சு இருக்கும்வரை அரசியல் வாரிசை அறிவிக்கப் போவது இல்லை. கட்சி விவகாரத்தை தானே பார்த்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

    • பிரக்ஞானந்தா ஜெர்மனி வீரர் கெய்மரை வீழ்த்தினார்.
    • பிரக்ஞானந்தா தனது முதல் இரு ஆட்டங்களில் டிரா செய்திருந்தார்.

    புதுடெல்லி:

    பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக் குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்பட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்நிலையில், இதன் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா, ஜெர்மனியின் வின்சென்ட் கெய்மரைச் சந்தித்தார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.

    பிரக்ஞானந்தா இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளில் 2 வெற்றி, 2 டிரா செய்துள்ளார். இதன்மூலம் மற்றொரு இந்திய வீரரான அரவிந்த் சிதம்பரத்துடன் முதலிடத்தைப் பகிர்ந்துள்ளார்.

    • ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து வெஸ்ட் இண்டீஸ் கற்றுக்கொள்ள வேண்டும்.
    • சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எங்கள் அணி பங்கேற்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.

    ஆன்டிகுவா:

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றன. இதில் முன்னாள் உலக சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை அணிகள் தகுதி பெறவில்லை.

    இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பங்கேற்காதது குறித்து அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:

    இந்த வீரர்களின் பட்டியலில் இருந்து எனது மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு சிறிய பகுதியையாவது எடுக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

    ஏனென்றால் ஆப்கானியர்கள் விளையாட்டின் மீது கொண்டு வந்த ஆர்வமும் ஆற்றலும் இதில் உள்ளன.

    உலகெங்கிலும் உள்ள வேறு சில அணிகளைப் போல அவர்கள் கிரிக்கெட் உலகில் நீண்ட காலமாக இல்லை. ஆனால் அவர்களின் சண்டை மனப்பான்மை மட்டுமே எனக்கு பிடித்துள்ளது.

    ஆண்டுகள் செல்லச் செல்ல கற்றுக்கொள்ளும் திறன், அவர்கள் இருக்கும் இடத்தில் இருக்கத் தேவையான அனுபவத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கும்.

    சாம்பியன்ஸ் லீக்கில் ஆப்கானிஸ்தானை நீங்கள் பார்க்கும்போது அந்த அணி ஏதாவது சரியாகச் செய்கிறது என்று அர்த்தம்.

    மேற்கிந்திய தீவுகளுடன் ஒப்பிடும்போது, ஐசிசி போட்டிகளில் சில நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம், ஆப்கானிஸ்தான் இப்போது ஆசிய பிராந்தியத்தில் ஒரு நல்ல சக்தியாக மாறியுள்ளது.

    நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்தை வீழ்த்தியது. 2024 டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிக்கும் முன்னேறியுள்ளது.

    பெரிய பாரம்பரியத்தைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி சாம்பியன்ஸ் டிராபியில் இல்லாதது எனக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது, அது வலிக்கிறது. இது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தார்.

    • மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.
    • அரையிறுதி சுற்றில் கொலம்பிய வீராங்கனை வெற்றி பெற்றார்.

    மெக்சிகோ:

    மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் கொலம்பியாவின் எமிலியானா அரங்கோ, ஆஸ்திரேலியாவின் டாரியா சவேலி உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-3 என வென்ற எமிலியானா 2வது செட்டை 4-6 என இழந்தார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டை 6-2 என கைப்பற்றிய எமிலியானா இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இறுதியில் பிரிட்டனின் எம்மா நவாரோ உடன் மோதுகிறார்.

    • பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று குஜராத் வந்தடைந்தார்.
    • புகழ்பெற்ற சோம்நாத் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி கிர் வனவிலங்கு சரணாலயத்தின் தலைமையகமான சாசனில் நடைபெறும் தேசிய வனவிலங்குகள் வாரிய கூட்டத்திற்கு தலைமை தாங்குவது உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக நேற்று குஜராத் வந்தடைந்தார்.

    இந்நிலையில், ஜாம்நகரில் உள்ள வந்தாரா விலங்குகள் மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

    வந்தாரா விலங்குகள் மையம் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 43 இனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் உள்ளன.

    அதன்பின், பிரதமர் மோடி புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமான சோம்நாத் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

    பிரதமர் மோடி ஸ்ரீ சோம்நாத் அறக்கட்டளையின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது

    • போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.
    • தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனியில் நடைபெற்ற ஜெயலலிதாவின் 77-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    தேனி மாவட்டத்துக்கு தி.மு.க. அரசு எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. 4 ஆண்டுகளில் தி.மு.க. அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை.

    முல்லைப் பெரியாறு அணையை நம்பி 5 மாவட்ட மக்கள் உள்ளனர். முல்லைப் பெரியாறு அணையின்நீர்மட்டத்தை உயர்த்தியது அ.தி.மு.க. அரசு.

    அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களைக் கொண்டுவந்ததால்தான் மக்கள் முன் நெஞ்சை நிமர்த்தி நிற்கின்றோம்.

    அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்களே பாராட்டுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மக்களுக்கு நன்மை அளித்தது. ஏழை, எளிய மாணவர்கள் படிக்க ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன.

    போதைப் பொருள் புழக்கத்தைத் தடுக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க எச்சரிக்கை விடுத்தும் கண்டுகொள்ளவில்லை.

    கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை தொடர்கதையாக உள்ளது. தமிழகத்தில் நடக்கும் பாலியல் வன்கொடுமை நெஞ்சை பதறச் செய்கிறது.

    பெண்கள், பெண் குழந்தைகளுக்கான குற்றங்கள் அதிகரித்துள்ளன. சிறுமிகள் அப்பா.. அப்பா.. என்று கதறும்போது அப்பா ஸ்டாலின் எங்கே போனார்?

    தமிழகத்தில் உயர் பதவியில் உள்ள பெண்களுக்கே பாதுகாப்பு இல்லை. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் யார் அந்த சார் என்பதற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. முதல்வர் ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோ ஷூட் செய்து வருகிறார். தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் அல்ல, ஸ்டாலின் மாடல் என தெரிவித்தார்.

    • லீக் போட்டி முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
    • நாளை மறுதினம் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    8துபாய்:

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. 8 அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்றன. லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டி துபாயில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்தியா 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 79 ரன்னும், அக்சர் படேல் 42 ரன்னும் எடுத்தனர். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்தார்.

    அடுத்து ஆடிய நியூசிலாந்து 205 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேன் வில்லியம்சன் ஓரளவு தாக்குப் பிடித்து அரைசதம் கடந்து 81 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்தியா சார்பில் அறிமுக போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், நாளை மறுதினம் நடைபெறும் முதல் அரையிறுதியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

    புதன்கிழமை நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

    ×