என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நாகையில் 39 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்  வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    நாகையில் 39 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
    • 105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அப்படி செல்லும் போது 2026-ம் ஆண்டு தேர்தலுக்கு தி.மு.க.வினரை தயார்படுத்தும் வகையில் கட்சி பணிகளையும் மேற்கொள்கிறார்.

    ஆட்சிப்பணி, கட்சிப்பணி இரண்டையும் ஒருங்கே செய்து வரும் அவரது நடவடிக்கைகள் தி.மு.க. வினரையும், அதிகாரிகளையும் சுறுசுறுப்பாக மாற்றி உள்ளது.

    அந்த வகையில் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். பிறகு அவர் திருச்சியில் இருந்து காரில் நாகை மாவட்டத்துக்கு சென்றார்.

    நாகை மாவட்ட எல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு அவர் அங்கு அரசு சுற்றுலா மாளிகையில் இரவில் தங்கி ஓய்வு எடுத்தார்.

    இன்று (திங்கட்கிழமை) காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாகை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதற்காக அவர் அரசு சுற்றுலா மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார்.

    நாகை தம்பித்துரை பூங்காவில் இருந்து புத்தூர் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.

    சில இடங்களில் அவர் சாலையில் நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார். மக்களிடம் அவர் மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.

    அதன்பிறகு நாகையில் நடந்த விழாவில் 38 ஆயிரத்து 956 பயனாளிகளுக்கு ரூ.200 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 700 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 105 பஸ் போக்குவரத்துகளையும் தொடங்கி வைத்தார்.

    முன்னதாக நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கவுதமன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் நாகையில் கட்டப்பட்டுள்ள தி.மு.க. கட்சி அலுவலகமான தளபதி அறிவாலயத்தையும் திறந்து வைத்தார்.

    Next Story
    ×