என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
- 7 பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் கடுமையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், துர்க்மெனிஸ்தான், பெலாரஸ், பூட்டான் மற்றும் வனுவாட்டு உள்ளிட்ட 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பல்வேறு குறைபாடுகளை சுட்டிக்காட்டி இந்த தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசு நிர்வாக மட்டத்தில் இருந்து கிடைத்த வரைவு அறிக்கை தகவலின்படி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நாடுகள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன, முதல் குழுவில் உள்ள நாட்டினரின் விசாவை முழுமையாக ரத்து செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டாவது குழு பகுதி கட்டுப்பாடுகள் மற்றும் தடையை எதிர்கொள்கிறது. மூன்றாவது குழுவில் உள்ள நாடுகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைபாடுகளை சரிசெய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.

ராய்ட்டர்ஸ்கு கிடைத்த வரைவின்படி முதல் குழுவில், ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா மற்றும் ஏமன் ஆகிய 10 நாடுகளின் குடிமக்கள் முழு விசா தடையை எதிர்கொள்ள நேரிடும்.
இரண்டாவது குழுவில் இடம்பெற்ற எரித்திரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர் மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளின் மீது சுற்றுலா, மாணவர் விசாக்கள் புலபெயர்வு விசா வழங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மூன்றாவது குழுவில் இடம்பெற்ற பாகிஸ்தான் உள்ளிட்டவை தங்கள் குறைபாடுகளை சரி செய்ய 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிகிறது.
டிரம்ப் 2016-20 பதவிக்காலத்தில், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பயண தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதை விட தற்போது விதிக்கப்பட உள்ள கட்டுப்பாடுகள் பெரிய அளவிலிருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என ராய்ட்டர்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் எவ்வளவு பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள விவரங்களுக்கும். சில மாதங்களுக்கு முன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட புள்ளிவிவரங்களுக்கும் இடையே மிகப்பெரிய முரண்பாடு நிலவுகிறது. வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும்.
நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் பல்வேறு அரசுத் துறைகளில் இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இது தவிர, பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக 21,866 பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்" என்று கூறியிருந்தார்.
அமைச்சர் வெளியிட்ட புள்ளி விவரங்களில் தேர்வாணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை நிரந்தரப் பணியாளர்கள் ஆவர். உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். இவர்களின் பணி நிலை குறித்த துல்லியமான விவரத்தை வெளியிடும்படி பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் தமிழக அரசிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடந்த 3 ஆண்டுகளில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாக 32 ஆயிரத்து 774 பேருக்கு பல்வேறு அரசுத் துறைகளில் நேரடிப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத் துறை நிறுவனங்கள் போன்ற பல்வேறு அரசு அமைப்புகளில் 32 ஆயிரத்து 709 இளைஞர்கள் பணிநியமனம் பெற்றனர். மொத்தம் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் அரசுப் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது '' என்று கூறியிருந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்ததற்கு பிந்தைய 8 மாதங்களில் அரசுத் துறைகளில் வேலை பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்திலிருந்து 78 ஆயிரமாக உயர்ந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதை மறுக்கவில்லை. ஆனால், கடந்த 8 மாதங்களில் மொத்தப் பணியாளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரம் மட்டுமே உயர்ந்துள்ள நிலையில், அரசுத் தேர்வு முகமைகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வாறு 25 ஆயிரம் உயர முடியும்?
அதேபோல், மொத்தப் பணியாளர் எண்ணிக்கை உயரும் போது உள்ளாட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும் அல்லது அதே எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஆனால், அவர்களின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 709-லிருந்து 21,866 ஆக 11 ஆயிரம் பேர் குறைந்தது எப்படி?
அதேபோல், வரும் நிதியாண்டிற்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடப்பாண்டில் 7 பணிகளுக்கு மட்டும் தான் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால் அந்த 7 பணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 10 ஆயிரம் பேர் கூட தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள். அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் பேரை எவ்வாறு தேர்வு செய்ய முடியும்?
ஐந்தரை லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக, அதில் 10 விழுக்காட்டினருக்கு கூட வேலை வழங்காததை மறைப்பதற்காக பொய்யான புள்ளி விவரங்களை வெளியிட்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. அரசு வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் தெரிவித்த புள்ளிவிவரங்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில், இருவரில் யார் சொன்னது சரி? என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும். தமிழத்தில் இதுவரை வழங்கப்பட்ட அரசு வேலைகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
- தமிழகத்தில் கரும்பு மற்றும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது.
- இருபோக சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசிடம் எந்த திட்டமும் இல்லை.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.
* ஒன்றே முக்கால் மணி நேரம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது தான் சாதனையே தவிர, பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
* விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்பது போலி தோற்றம் என நிரூபணம் ஆகி உள்ளது.
* வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை, ஏமாற்றம் மட்டுமே.
* பல துறைகளை ஒன்றாக இணைத்து அவியல் கூட்டு போல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
* தவறு செய்வதற்கு வசதியான திட்டங்களை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை.
* பட்ஜெட்டில் கூறியபடி சாகுபடி பரப்பு எதுவும் அதிகரிக்கவில்லை, குறைந்துதான் போய் உள்ளது. சாகுபடி பரப்பு 1.2 சதவீதம் குறைந்துள்ளது, அதிகரிக்கவில்லை.
* இருபோக சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசிடம் எந்த திட்டமும் இல்லை.
* தமிழகத்தில் கரும்பு மற்றும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது.
* ஜெயலலிதா ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் வேளாண் பட்ஜெட்டில் உள்ளதே தவிர புதிய திட்டங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- எங்களின் ஒரே அரசியல் எதிரி தி.மு.க. தான்.
- தி.மு.க. உடைத்தால் மண்குடம். நாங்கள் உடைத்தால் பொன் குடமா?
மதுரை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க.வுடன் ஒருபோதும் அ.தி.மு.க. கூட்டணி அமைக்காது என்று கூறி வந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு அது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இது அரசியல் களத்தில் சில அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமியின் இந்த திடீர் மனமாற்றம் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறி இருக்கிறார். அதில் எந்த தவறும் இல்லை. எங்களின் தலைவர் புரட்சித்தலைவி அம்மா தி.மு.க. என்ற தீய சக்தியை ஒழிக்க உருவாக்கப்பட்ட அ.தி.மு.க.வை லட்சியத்தோடு வளர்த்தார்.
எங்களின் ஒரே அரசியல் எதிரி தி.மு.க. தான். அன்றைக்கு காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியை முறித்தபோது இனியொரு போதும் காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி இல்லை. அப்படி கூட்டணி வைத்தால் அது தற்கொலை செய்து கொள்வதற்கு சமம் என்று கருணாநிதி கூறினார். ஆனால் அதே கருணாநிதி தான் சொன்னதையும் மீறி காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொண்டார் .
தி.மு.க. உடைத்தால் மண்குடம். நாங்கள் உடைத்தால் பொன் குடமா? தற்கொலைக்கு சமம் என்று சொன்ன கருணாநிதியே தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு காங்கிரசுடன் கூட்டணி வைத்தார். அந்த அளவுக்கு கூட எங்கள் அண்ணன் (எடப்பாடியார்) இப்போது தெரிவிக்கவில்லை. எனவே தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
செல்லூர் ராஜூவின் இந்த கருத்து தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தலைவர்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
- இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
- நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
இயற்கை மேலாண்மை பணிகளுக்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு.
உழவர்களுக்காக இலவச மின் இணைப்புகளுக்கான கட்டணத் தொகையாக ரூ.8,186 கோடி ஒதுக்கீடு
வேளாண் துறைக்கு இந்த ஆண்டு ரூ.45,661 கோடி ஒதுக்கீடு
பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன.
நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை சுமார் 1 மணி நேரம் 41 நிமிடங்களில் தாக்கல் செய்தார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
- அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான அணி வென்றெடுத்து.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை வழிநடத்த ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ மற்றும் தேர்வுக் குழுவின் ஆதரவு கிடைத்துள்ளது. வரவிருக்கும் தொடருக்கு அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தான் இருக்க வேண்டும் என குழுவின் அனைத்து உறுப்பினர்களும் விருப்பம் தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தொடர் தோல்விகளைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறத் தவறியது.
இதனால் ஹிட்மேன் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார் என்று ஊகங்கள் எழுந்தன. இதற்கிடையே இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்டில் ரோகித் வெளியேறினார். இதனால் டெஸ்ட் கேப்டனாக அவரது எதிர்காலம் குறித்த விவாதம் எழுந்தது.

ஆனால் அனைத்து முன் முடிவுகளையும் தவிடுபொடியாக்கி 2025 சாம்பியன்ஸ் டிராபியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றெடுத்து.
இதன்மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்து உள்ளார். எனவே அவரை ஓரம்கட்டும் முடிவை பிசிசிஐ கைவிட்டதாக தெரிகிறது. ரோகித் சர்மா மீண்டும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்தில் இந்தியாவை வழிநடத்த உள்ளார்.
அதன்படி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியாவை ரோகித் சர்மா கேப்டனாக வழிநடத்த அதிகம் வாய்ப்புள்ளது.
- பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாட்டில் பருத்தியின் தேவை அதிகரித்துள்ளதால் பருத்தி உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க பருத்தி சாகுபடி திட்டம் 2021-2022-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-2026-ம் ஆண்டிலும் "பருத்தி உற்பத்திப் பெருக்குத் திட்டம்" ரூ.12 கோடியே 21 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இயற்கைச் சீற்றங்களால் விளையும் பயிர் சேதங்களினால் ஏற்படும் வருவாய் இழப்புகளில் இருந்து பாதுகாத்து, உழவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த, பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2025-2026-ம் ஆண்டில் 35 லட்சம் ஏக்கரிலான பயிர்களை காப்பீடு செய்யும் வகையில், ரூ.841 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.
- மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* சென்னை, கோவை, தூத்துக்குடி, மதுரையில் உயிர்ம வேளாண் விளைபொருட்களுக்கு தர நிர்ணய ஆய்வகம் அமைக்க ரூ.6.16 கோடி நிதி ஒதுக்கீடு.
* வரும் ஆண்டில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.1,427 கோடி நிதி ஒதுக்கீடு.
* பாசனத்திற்கு கடைமடை வரை நீர் செல்ல ரூ.120 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* 2 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரின் டன் கொண்ட நெல் சேமிப்பு மையம் அமைக்கப்படும்.
* நெல் ஈரப்பதத்தை அளவிட 2500 டிஜிட்டல் கருவிகள் வழங்கப்படும்.
* மண்புழு உரம் தயாரிக்க ரூ.3.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* நெல் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு ரூ.525 கோடி நிதி ஒதுக்கீடு.
* உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உணவு மானியத்திற்கு ரூ.12,500 கோடி நிதி ஒதுக்கீடு.
* கால்நடை இனப்பெருக்க திறனை மேம்படுத்த ரூ.5.25 கோடி ஒதுக்கீடு.
* 5 ஆயிரம் பேருக்கு சிறிய அளவிலான பால் பண்ணைகள் அமைக்க கடன் வழங்கப்படும்.
* மீன் குஞ்சு உற்பத்தி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மகளிருக்கு பயிற்சி அளிக்கப்படும்.
* மீனவர் மற்றும் மீன் வளர்ப்போருக்கு விவசாய கடன் அட்டை வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.
- வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* கூட்டுறவு பயிர் கடனுக்கு ரூ.17000 கோடி ஒதுக்கீடு
* தமிழ்நாட்டில் அதிக வரத்துள்ள 50 உழவர் சந்தைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தர ரூ.8 கோடி ஒதுக்கீடு
* இணைய வர்த்தகம் மூலம் உழவர் சந்தை காய்கறிகள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்படும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.
* 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற வேளாண் பட்ஜெட்டில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு.
* புவிசார் குறியீட்டுடன் கூடிய பொருட்களின் சந்தை தேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* 9 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் ரூ.20 கோடியில் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.
* வேளாண்மையில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு.
* 500 பேரை தேர்ந்தெடுத்து ரூ.50 லட்சம் செலவில் ஏற்றுமதியை ஊக்குவிக்க பயிற்சி அளிக்கப்படும்.
* ரூ.3000 கோடி அளவிற்கு குறுகிய கால கடன்கள் வழங்கப்படும்.
* புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி ஒதுக்கப்படும்.
* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காசாவில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மற்ற நாடுகளில் குடியமர்த்துவதன் மூலம், காசா பகுதி ஒரு ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்கப்படும்
- சூடானுடனான தொடர்புகளை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்
ஹமாஸ் - இஸ்ரேல் போர் தற்காலிக முடிவை எட்டியுள்ள நிலையில் 56,000 பேர் உயிரிழந்த காசா நகரம் இடிபாடுகளாக காட்சி அளிக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் போர் நிறுத்தத்துக்கு பின் தங்கள் இடங்களுக்கு திரும்பியிருந்தாலும், அத்தியாவசிய பொருட்கள், மனிதாபிமான உதவிகள், மின்சாரம் ஆகியவற்றை இஸ்ரேல் துண்டித்துள்ளதால் 20 லட்சம் மக்கள் தற்காலிக முகாம்களில் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
இடிபாடுகளை அகற்றும் உபகரணங்கள், மருத்துவ சேவைகள், அத்தியாவசிய பொருட்கள் அவர்களின் தற்போதைய தேவை. ஆனால் அவை திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காசா மக்களை நிரந்தமராக வெளியேற்றி அங்கு ரிசார்ட் சொகுசு நகரத்தை உருவாக்கும் கனவு திட்டத்தை அறிவித்தார். இதனை இஸ்ரேல் தொலைநோக்கு பார்வை என வர்ணித்தது.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்காவில் காசா மக்களைக் குடியேற்ற அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு திட்டத்தைத் தயாரித்துள்ளன.
இதற்காக, இரு நாடுகளின் அதிகாரிகளும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆப்பிரிக்க நாடுகளான சூடான், சோமாலியா மற்றும் சோமாலிலாந்து ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளனர்.
காசா மக்களை அண்டை நாடான ஜோர்டான் மற்றும் எகிப்தில் குடியேற்றுவது குறித்துப் டிரம்ப் பேசியிருந்தார். காசாவில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை மற்ற நாடுகளில் குடியமர்த்துவதன் மூலம், காசா பகுதி ஒரு ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்கப்படும் என்ற அவரது திட்டத்தை அரபு நாடுகளும் பாலஸ்தீனியர்களும் முற்றிலுமாக நிராகரித்தனர். இத்தகைய சூழ்நிலையில், காசா மக்களை ஆப்பிரிக்காவிற்கு அழைத்துச் செல்லும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அசோசியேட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்த இராஜதந்திர முயற்சி ரகசியமாக செய்யப்படுகிறது. சோமாலியா மற்றும் சோமாலிலாந்துடனான தொடர்புகளை அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சூடானுடனான தொடர்புகளை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். இருப்பினும், பேச்சுவார்த்தை எந்த மட்டத்தில் நடந்தது, அதில் எவ்வளவு முன்னேற்றம் ஏற்பட்டது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
அமெரிக்க அதிகாரிகளின் கூற்றுப்படி, பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் முக்கிய பங்கு வகிக்கிறது. தகவல்களின்படி, சூடான் அமெரிக்க முன்மொழிவை நிராகரித்துள்ளது. இதற்கிடையில், சோமாலியாவும் சோமாலிலாந்தும் அத்தகைய பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளன.
- திறந்தவெளி பாசன கிணறுகளுக்கு சுற்றுசுவர் கட்ட மானியம் அளிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
- 300 கிராமப்புற இளைஞர்களுக்கு இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* சி, டி பிரிவு வாய்கால்களை தூர்வார ரூ.13.80 கோடி நிதி ஒதுக்கீடு.
* சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் விவசாயிகளுக்கு 60 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
* சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மின் மோட்டார் பம்பு செட்டுகள் ரூ.15000 வரை மானியமாக வழங்கப்படும்.
* நீர் பற்றாக்குறையை போக்க ரூ.2.75 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* வேளாண் பணிகளில் இயந்திரமயமாக்கலை கொண்டு வர உழவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படும். இதற்காக ரூ.3.55 கோடி ஒதுக்கீடு.
* காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு, வடிநிலப்பகுதிகளிலும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளிலும் தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* திறந்தவெளி பாசன கிணறுகளுக்கு சுற்றுசுவர் கட்ட மானியம் அளிக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* 300 கிராமபுற இளைஞர்களுக்கு இயந்திரங்களை கையாள பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு.
* வேளாண் பொருட்களை பதப்படுத்த, மதிப்பு கூட்டுதலுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.
- எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையில் கூறி இருப்பதாவது:
* பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரூ.1.65 கோடி ஒதுக்கீடு.
* சுவை தாளிப்பு பயிர்களுக்கான சிறப்பு திட்டத்திற்காக ரூ.11.47 கோடி நிதி ஒதுக்கீடு
* பலா மேம்பாட்டு இயக்கத்திற்காக ரூ.3.75 லட்சம் நிதி ஒதுக்கீடு- அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
* புதிய பலா சாகுபடி உள்ளிட்ட திட்ட கூறுகளை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
* வெண்ணை பழ உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு.
* 17,000 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.215.80 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறிய வகை வேளாண் கருவிகளுக்கான மானியம் ரூ.1.75 லட்சமாக உயர்வு
* சிறுகுறு உழவர்கள் பயனடையும் வகையில் மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்படும்.
* சிறுகுறு உழவர்கள் வேளாண் கருவிகள் வாங்க 60 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* உழவர்களின் நிலங்களில் விதைப் பண்ணைகள் அமைக்க ரூ.250 கோடி ஒதுக்கீடு.
* வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மூலம் குறைந்த வாடகையில் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக ரூ.108 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






