என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது சல்யூட்.
    • சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார்.

    சென்னை:

    சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் SpaceX-ன் 'ட்ராகன்' விண்கலம் மூலம் 17 மணிநேர பயணத்திற்கு பிறகு பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதையடுத்து பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில், திட்டமிடப்படாத 9 மாதங்கள் விண்வெளியில் இருந்து, நிச்சயமற்ற தன்மை மற்றும் சவால்களை எதிர்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் மற்று புட்ச் வில்மோர் ஆகியோருக்கு எனது சல்யூட்.

    குறிப்பாக விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தைரியம் மற்றும் உறுதிப்பாட்டின் உருவகமாக அங்கு வலுவாக நின்றார். அவரது பயணம் விண்வெளி ஆய்வு மட்டுமல்ல, பெண்களின் வலிமை மற்றும் அதிகாரமளித்தல் பற்றியது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரராக, அவரது முன்மாதிரியான பயணம் விடாமுயற்சிக்கு ஒரு சான்றாகும்.

    நான்கு பேர் கொண்ட குழு - க்ருவ்9 உங்களை வரவேற்கிறோம். உங்கள் கதை வருங்கால தலைமுறைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார். 



    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • நத்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-5 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி இரவு 10.32 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: விசாகம் இரவு 6.56 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி புன்னை மர கண்ணன் அலங்காரம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. திரு வெள்ளாறை ஸ்ரீ கவேதாத்தரிநாதர் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் ஸ்ரீசிவபெருமான் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமி பாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-ஆசை

    மிதுனம்-வெற்றி

    கடகம்-பக்தி

    சிம்மம்-வரவு

    கன்னி-தனம்

    துலாம்- தாமதம்

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- புத்துணர்ச்சி

    மகரம்-நன்மை

    கும்பம்-உழைப்பு

    மீனம்-பதிவு

    • 195 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தை கடந்து வீடு திரும்பினர்.
    • அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    விண்வெளியில் ஒன்பது மாதங்கள் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாக அமெரிக்க வளைகுடாவில் தரையிறங்கியதை அடுத்து, விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ்எக்ஸ், நாசா மற்றும் எலான் மஸ்க் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

    சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் 286 நாட்கள் செலவிட்டனர், இது அவர்களின் உண்மையான திட்டத்தை விட 278 நாட்கள் அதிகம் ஆகும். அவர்களின் பயணம் முழுவதும், அவர்கள் பூமியை 4,576 முறை சுற்றி வந்து 121 மில்லியன் மைல்கள் (195 மில்லியன் கிலோமீட்டர்) தூரத்தை கடந்து வீடு திரும்பினர்.

    "வாக்குறுதி அளிக்கப்பட்டது, வாக்குறுதி செய்து முடிக்கப்பட்டது: ஒன்பது மாதங்கள் விண்வெளியில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை மீட்பதாக அதிபர் டிரம்ப் உறுதியளித்தார். இன்று, அவர்கள் அமெரிக்க வளைகுடாவில் பாதுகாப்பாக தரையிறங்கினர், எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசாவுக்கு நன்றி!" என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி 28-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து (ISS) இரண்டு விண்வெளி வீரர்களை மீட்டெடுக்க எலான் மஸ்க் மற்றும் ஸ்பேஸ்எக்ஸ்-இடம் கூறியதாகக் தெரிவித்து இருந்தார்.

    சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இரு நாசா விண்வெளி வீரர்களும், அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷிய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோர் இந்திய நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை 3:27 மணி அளவில் புளோரிடா கடற்கரையில் வெற்றிகரமாக தரையிறங்கினர்.



    • போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • விசாரணையில் மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    மும்பை:

    மும்பையில் வசித்து வரும் 86 வயது மூதாட்டியை. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீஸ் அதிகாரி எனக்கூறி ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் மூதாட்டியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் அதிகளவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து இருப்பதாக கூறினார். மேலும் அதற்காக மூதாட்டி மற்றும் அவரது மகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்போவதாக மிரட்டினார். இதேபோல மூதாட்டியை டிஜிட்டல் கைது செய்து இருப்பதாக கூறினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டியிடம் மேலும் சிலர் அதிகாரிகள் எனக்கூறி பேசினர்.

    அந்த கும்பல் வழக்கில் இருந்து தப்பிக்க வைப்பதாக கூறி மூதாட்டியிடம் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கடந்த 5-ந்தேதி வரை ரூ.20 கோடி வரை பறித்தனர். இந்த நிலையில் சமீபத்தில் தான் ஏமாற்றப்படுவது குறித்து அறிந்த மூதாட்டி இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

    போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது மோசடியில் மலாடு மேற்கு பகுதியை சேர்ந்த ஷயான் ஜமீல் சேக்(20), மிரா ரோட்டை சேர்ந்த ரஜிக் அசாம் பட்டிற்கு(20) தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், மோசடியில் சர்வதேச கும்பலுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
    • 9 மாதங்களுக்கு பிறகு சுனிதா வில்லியம்ஸ் பூமியில் கால் பதிக்கவுள்ளார்.

    வாஷிங்டன்:

    விண்வெளியில் ஆராய்ச்சிக்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டியதாயிற்று. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர்.

    எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்சை பூமிக்கு அழைத்துவர அமெரிக்காவின் புதிய அரசு முயற்சி செய்தது.

    இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரு டிராகன் என்ற விண்கலம், பால்கன்-9 என்ற ராக்கெட் மூலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. இந்த மீட்பு விண்கலத்தில் ரஷிய நாட்டை சேர்ந்த கிரில்பெஸ்கோவ் உள்ளிட்ட 4 விண்வெளி வீரர்கள் இருந்தனர். அந்த விண்கலம் நேற்று முன்தினம் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தது.

    இதையடுத்து சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்து, க்ரு டிராகன் விண்கலத்துக்கு சென்றனர். அவர்களுடன் இங்கிருந்த சென்ற விண்வெளி வீரர்களும் பயணிக்கிறார்கள்.

    இது தொடர்பாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில், வானிலை சீராக இருந்தால் க்ரு டிராகன் விண்கலம் புளோரிடா கடல் பகுதியை வந்தடையும் என்று தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த டிராகன் விண்கலம், புளோரிட கடற்பரப்பை நோக்கி நெருங்கியது.

    தரையிறங்கும் டிராகன் விண்கலத்தில் இருந்து விண்வெளி வீரர்களை மீட்க தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் குழு வந்துள்ளனர்.

    17 மணி நேர பயணத்துக்கு பிறகு புளோரிடாவில் உள்ள கடற்கரையில் அவர்களது விண்கலம் தரையிறங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து, சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் பாதுகாப்பாக பூமி திரும்பினார்.

    • அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.
    • பணமோசடி வழக்கில் கடந்த வாரம் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    திபிலிசி:

    ஜார்ஜியா முன்னாள் அதிபர் மிகைல் சாகாஷ்விலி (வயது 57). இவர் மீது அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

    இதுதொடர்பான ஒரு வழக்கில் 2018-ம் ஆண்டு அவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. அதன்பேரில் மிகைல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து பணமோசடி வழக்கில் கடந்த வாரம் அவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.

    இதற்கிடையே அவர் சட்ட விரோதமாக எல்லை தாண்டி உக்ரைன் சென்றிருந்தார். எனவே சட்ட விரோத பயணம் மேற்கொண்டதற்காக அவருக்கு தற்போது மேலும் 4½ ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    • உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.
    • போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.

    உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. உக்ரைனின் பெரும்பாலான இடங்களை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. பின்னர் உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் ராணுவ உதவி வழங்கியன. இதனால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிராக பதில் தாக்குதல் நடத்த தொடங்கியது. ரஷியா பல இடங்களில் பின்வாங்கியது. இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் உக்ரைன் பகுதிகளை ரஷியா ஆக்கிரமித்துள்ளது.

    இரு நாடுகளுக்கும் இடையில் 3 வருடங்களை தாண்டி சண்டை நடைபெற்று வருகிறது. சண்டை நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் உக்ரைன்- ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

    30 நாட்கள் கொண்ட போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷியா இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏறக்குறைய இரு நாடுகளும் சம்மதிக்கும் நிலையில்தான் உள்ளது.

    இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் புதின் தொலைபேசியில் பேசியிருப்பதாவது:-

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு புதின் நிபந்தனை வைத்துள்ளார்.

    அதில் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர முழுமையாக அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயார்.

    உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை நிறுத்த வேண்டும்.

    போர் நிறுத்தத்தை பயன்படுத்தி உக்ரைன் ஆயுதங்களை குவிக்க கூடாது.

    ஒவ்வொரு புதன்கிழமையும் 175 உக்ரைன் ராணுவ கைதிகளை விடுவிக்கப்படும்.

    உக்ரைன் மீதான தாக்குதலை 30 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்த ரஷிய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.

    • மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.
    • காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது.

    லிமா:

    தென் அமெரிக்க நாடான பெருவின் மார்கோனா நகரைச் சேர்ந்த மீனவர் மாக்சிமோ நாபா காஸ்ட்ரோ (வயது 61). இவர் கடந்த டிசம்பர் மாதம் சக மீனவர்களுடன் பசிபிக் பெருங்கடல் பகுதிக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தார்.

    அங்கு 2 வாரங்கள் தங்கி மீன்பிடிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் திடீரென அங்கு பலத்த காற்று வீசியது. இதனால் அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்த பல படகுகள் நிலைகுலைந்தன.

    இதில் காஸ்ட்ரோவின் படகு மட்டும் வழிமாறி தனியே பிரிந்தது. ஆனால் அவருடன் சென்ற மற்ற மீனவர்கள் பத்திரமாக வீடு திரும்பினர்.

    இதனையடுத்து அவர்கள் அளித்த புகாரின்பேரில் கடலோர போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் இணைந்து காஸ்ட்ரோவின் உறவினர்களும் அவரை தேடி வந்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்தநிலையில் ஆப்பிரிக்க நாடான புர்கினோ பாசோ கடலோர போலீசார் அங்கு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த ஒரு படகில் காஸ்ட்ரோ ஆபத்தான நிலைமையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை மீட்ட போலீசார் பெரு கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அதன்பிறகு அவரது உறவினர்களிடம் காஸ்ட்ரோ ஒப்படைக்கப்பட்டார். கடலில் மாயமான காஸ்ட்ரோ 95 நாட்களுக்கு பிறகு திரும்பியதால் குடும்பத்தினர் அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி நடந்தது
    • திரு மு. சொளந்தர ராஜா அவர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார்

     புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு ஐக்கிய அமீரக தமிழக வெற்றிக்கழகம் துபாய் சார்பில் இப்தார் நோம்பு திறக்கும் நிகழ்ச்சி 16/03/2025 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் அமீரகம் முழுவதும் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

    இந்நிகழ்வினை அமீரக தமிழக வெற்றிக் கழத்தின் நிர்வாகிகளான தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ரகுவரன், இணை ஒருங்கிணைப்பாளர் திரு. ஸ்மாயில், பொருளாளர் சதிஸ், மகளிர் அணிச் செயலாளர் RJ மாயா மற்றும் கழக நிர்வாகிகளான சுதாகர், சரவணன் சேதுபதி, காரல் மார்க்ஸ், விஜய், ரியாஸ், புவி, சரத் மற்றும் நிஜாம் ஆகியோர் ஒன்றிணைந்து நடத்தினர்.

     

     

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் கழகத் தலைவர் திரு மு. சொளந்தர ராஜா அவர்கள் கலந்து கொண்டு நோம்பு திறந்து வழிபாடுகளிலும் ஈடுபட்டார் 

    மேலும் இந்த நிகழ்விற்கு கழகத் தலைவர் அவர்களின் தாய்வழி உறவினரான பல்லவி வினோத்குமார் மற்றும் வினோத்குமார் ஆகியோரும் பொது அமைப்புகள் மற்றும் மாற்றுக்கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    நோன்பு திறக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சௌந்தர ராஜா, "தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்கும், மண்ணுக்கும் சேவை செய்ய வந்த அரசியல் கழகம். பொறாமை பிடித்த பலர் நம் மீது விமர்சனங்களை முன்வைப்பர். அத்தகைய விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம் தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இங்கு தமிழர்கள் யாருக்கு, எந்த பிரச்சனை என்றாலும் தமிழக வெற்றிக் கழகம் தோழர்கள் அவர்களுக்கு முன் நின்று உதவ வேண்டும், என்று தெரிவித்தார்.

     



     


    • பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள்.
    • கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும்.

    ஐபிஎல் தொடர் மார்ச் 22-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியை பெங்களூரு சந்திக்கிறது.

    17 வருடங்களாக ஒரு கோப்பையை கூட வெல்லாததால் கிண்டலடிக்கப்பட்டு வரும் அந்த அணி இம்முறை ரஜத் படிதார் தலைமையில் முதல் சாம்பியன் பட்டத்தை முத்தமிடும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

    கடந்த வருடம் விராட் கோலி 741 ரன்கள் அடித்து ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். ஆனாலும் அவர் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியது ஒருபுறம் பெங்களூரு அணிக்கு பின்னடைவை கொடுத்தது. அதனால் விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்தார்.

    இந்நிலையில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் பிரச்சினையில்லை என்று அந்த அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பிலிப் சால்ட் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். எனவே விராட் கோலி தனது ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த வேண்டிய அவசியமில்லை. ஐபிஎல் மற்றும் இதர தொடர்களில் பிலிப் சால்ட் மிகவும் அட்டாக் செய்யக்கூடிய ஒரு வீரராக விளையாடி வருகிறார். அவர் விராட் கோலி மீதான அழுத்தத்தை எடுத்து விடுவார் என்று நினைக்கிறேன்.

    அது போன்ற சூழ்நிலையில் விராட் கோலி கடந்த பல வருடங்களைப் போல் இம்முறையும் போட்டியை கட்டுப்படுத்தும் அளவுக்கு விளையாட வேண்டும். எப்போது ரிஸ்க் எடுக்க வேண்டும் எப்போது கூடாது என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பெங்களூரு அணியின் பேட்டிங் துறையின் கேப்டனாக செயல்பட்டு புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

    ஏனெனில் இம்முறை பெங்களூரு அணி நிறைய மைதானங்களுக்கு பயணித்து விளையாட உள்ளது. அங்கே பேட்டிங் ஆர்டரில் குறைந்த ரன்களுக்குள் சரிவு ஏற்படாமல் இருப்பதை பார்த்துக்கொள்ள வேண்டும். தன்னைச் சுற்றி அதிரடியாக விளையாடும் வீரர்கள் இருப்பதால் விராட் புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாட வேண்டும்.

    என்று டிவில்லியர்ஸ் கூறினார்.

    • இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
    • நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'.

    நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    அண்மையில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தின் மிக வைரலான கோல்டன் ஸ்பாரோ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் பிரியங்கா மோகன் சிறப்பு நடனமாடியுள்ளார்.

    இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது இதனால் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கின்றனர்.


    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
    • போர்நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்தது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஜனவரி முதல் போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனாலும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து காசாவில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மாற்றுவதற்கான இஸ்ரேலிய கோரிக்கைகளை ஹமாஸ் மறுத்தது. இதையடுத்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காசா பகுதிகளில் தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். இந்த நடவடிக்கை முடிவற்றது, விரிவடையும் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த உத்தரவை அடுத்து இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கும் என தெரிகிறது.

    இதற்கிடையே, காசா முனையில் இஸ்ரேல் இன்று அதிரடி வான்வழி தாக்குதல் நடத்தியது. காசா முனையின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் விமானப்படை குண்டுமழை பொழிந்தது. இந்தத் தாக்குதலில் 300 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 404 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×