என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
- ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காசாவில் அமைந்துள்ள மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர்- ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
ஹமாஸ் அரசியல் அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் பர்ஹோம் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்கிரமிப்பின் நீண்டகால பயங்கரவாதத்தை தொடரும் வகையில் உயிர்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அழிக்கும் இந்த குற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை புறக்கணித்து, மக்கள் மற்றும் தலைமைக்கு எதிராக திட்டமிட்ட படுகொலை செய்யும் தொடர்ச்சியான கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது," என தெரிவித்துள்ளது.
முன்னதாக கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
- விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
- மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபையில் கடந்த 14-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்தது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.
அதனைத்தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கியது.
இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேசுவார்கள். அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.
அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடைபெறுகிறது.
எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார். தொடர்ந்து துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அவர் வெளியிடுகிறார்.
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.
- கூட்டத்தில் 18 வயதை எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழ்நாடு தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி சென்னையில் இன்று பிற்பகலில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பதிவு பெற்ற மாநில மற்றும் தேசிய கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றன.
இக்கூட்டத்தில் 18 வயதை எட்டியோரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடைபெறுகிறது.
- ஐதராபாத் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
- நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.
ஐ.பி.எல். 2025 கிரிக்கெட் தொடர் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கிய ஐ.பி.எல். தொடரில் இதுவரை மூன்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இவற்றில் பெங்களூரு, ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளன.
நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இரண்டு போட்டிகள் நடைபெற்றன. நேற்றைய முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் 200-க்கும் அதிக ரன்களை அடித்தன. எனினும், ஐதராபாத் அணி 44 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.
இதைத் தொடர்ந்து சென்னையில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்றைய போட்டி, நடப்பு ஐ.பி.எல். தொடரில் இரு அணிகளுக்கும் முதல் போட்டி.
இதன் காரணமாக நேற்றைய போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. எனினும், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த வெற்றி மூலம் கடந்த 13 ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி தான் வெற்றி பெற்று வருகிறது.
முன்னதாக 2012-ம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் சென்னை - மும்பை அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இருந்தது. அதன்பிறகு நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல். தொடர்களில் இரு அணிகள் மோதிய முதல் போட்டியில் சென்னை அணி மட்டுமே வெற்றி பெற்று வருகிறது.
- படிக்காதவர்களும் சேவை செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.
- உப்பு சப்பில்லாத கூட்டத்தை பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்?
சென்னை:
தொகுதி மறுசீரமைப்பை எதிர்த்த கூட்டுக்குழு கூட்டத்தை உப்புசப்பில்லாத கூட்டம் என பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-
படிக்காதோர் எப்படி பள்ளி பற்றி பேச முடியும் என்ற அண்ணாமலையின் கூற்று காமராஜரை கலங்கப்படுத்தும் விதமாக உள்ளது. படிக்காதவர்களும் சேவை செய்வார்கள் என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.
உப்பு சப்பில்லாத கூட்டத்தை பற்றி நீங்கள் ஏன் பேசுகிறீர்கள்? என்றார்.
- இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை.
- மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என கூறினால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்?
கும்பகோணம்:
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியாவில் மூன்று மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் பிரச்சனை இல்லை. மொழி கற்பதை மாணவர்களுக்கு அழுத்தம் என கூறினால் பிற பாடங்களை எப்படி படிக்க முடியும்? கணக்கு கஷ்டம் என்றால் அதனை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிவிட முடியுமா?
இலகுவான முறையில் மாற்றியமைக்கலாமே தவிர கற்காமல் விடக்கூடாது என்று கூறினார்.
- கைது செய்ய கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார்.
- காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என்று குறிப்பிட்ட காமெடி நடிகர் குணால் கம்ரா சர்ச்சையில் சிக்கியுள்ளார். சர்ச்சை கருத்து தெரிவித்த காமெடி நடிகர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே வலியுறுத்தி உள்ளார்.
மேலும், காமெடி நடிகருக்கு சிவசேனா டிரீட்மென்ட் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "குணால் கம்ராவின் கருத்துக்கள் மிக மோசமாக உள்ளன. அவர் விமானங்களில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக காமெடி நடிகர் குணால் கம்ராவின் நிகழ்ச்சி படமாக்கப்பட்ட மும்பையின் கர் பகுதியில் உள்ள யூனிகான்டினென்ட்டர் ஓட்டல் மீது சிவசேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த விவகாரம் குறித்து சிவேசான எம்.பி. நரேஷ் மஹாஸ்கே கூறும் போது, "இந்தியாவை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்படுவாய்," என்று தெரிவித்தார்.
- சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
- திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு பங்குனி-10 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி நள்ளிரவு 1.22 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: உத்திராடம் நள்ளிரவு 12.57 மணி வரை பிறகு திருவோணம்
யோகம்: மரண, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவாரூர் ஸ்ரீ தியாகேசர் பவனி. திருவல்லிக் கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் - வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்தியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. 2-ம் நவதிருப்பதி வைகுண்டம் அருகில் திருவரகுணமங்கை என்கிற நத்தத்தில் மூலவர் விஜயாசன பெருமாள், ஸ்ரீ வரகுணமங்கைத் தாயார்களுக்கு காலையில் திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பயணம்
ரிஷபம்-நேர்மை
மிதுனம்-பக்தி
கடகம்-பதவி
சிம்மம்-உறுதி
கன்னி-சாதனை
துலாம்- ஊக்கம்
விருச்சிகம்-புகழ்
தனுசு- பெருமை
மகரம்-களிப்பு
கும்பம்-அமைதி
மீனம்-நற்செயல்
- அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
- நாங்களும் அவரை அணுகவில்லை.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.முக. அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.
இது குறித்து பேசும் போது, "திருப்பி திருப்பி நாங்கள் கூறிவிட்டோம். அ.தி.மு.க. மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நீங்களாகவே கற்பனையில் கூறுகிறீர்கள். நீங்கள் சொல்லும் அவர்களை, கட்சியில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பு இல்லை. பா.ம.க.-வுக்கு, ராஜ்யசபா சீட் கேட்கப்படுகிறதா என கேட்கிறீர்கள். இன்னும் ராஜ்ய சபா தேர்தல் பற்றி அறிவிக்கப்படவில்லை.
நீங்களே கற்பனையாக கேள்வி கேட்கிறீர்கள். ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு வரும்போது நாங்கள் தெரிவிப்போம். த.வா.க. வேல்முருகன் எங்களை அணுகவில்லை. நாங்களும் அவரை அணுகவில்லை. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தான், கூட்டணி பற்றி பேசுவோம்.
கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை என்பது நிலையானது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பது. வாக்குகள் சிதறாமல் அதிக வாக்குகளை பெற வியூகம் அமைப்பது வழக்கம் தான். கூட்டணி என்றும் நிலையானது இல்லை.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த விருப்பம் இல்லை. அதனால், ஏதேதோ காரணம் சொல்லி தள்ளிப் போடுகிறார்," என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.
- நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்குகிறார்.
தமிழக சட்டசபையில் கடந்த 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்த மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இந்த விவாதத்தில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
பட்ஜெட் மீதான எம்.எல்.ஏ.க்களின் கருத்துக்கள், கோரிக்கைகளுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 21-ந்தேதி சட்டசபையில் பதில் அளித்து பேசினர்.
இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சட்டசபைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதற்கிடையே சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்க இருக்கிறது. இதில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்று தங்கள் தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்கவும், புதிய திட்டங்கள் கொண்டு வரவும் வலியுறுத்தி பேச உள்ளனர்.
அவற்றுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கின்றனர். அதன்படி, மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் முதல் நாளான இன்று நீர்வளத்துறை, இயற்கை வளங்கள் துறை மீதான விவாதம் நடக்க உள்ளது.
இன்றைய கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் பேசிய பிறகு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்கி துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.
- மைசூருவில் இருந்து கார்வாருக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
- ரெயில்கள் இருமார்க்கமாகவும் மண்டியா, யஷ்வந்தபுரம், குனிகல், ஹாசன், ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
யுகாதி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் பெங்களூருவில் இருந்து சென்னை, கலபுரகிக்கும், மைசூருவில் இருந்து கார்வாருக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
* கே.எஸ்.ஆர். பெங்களூரு-டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07319) வருகிற 28-ந்தேதி காலை 8.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மதியம் 2.40 மணிக்கு சென்னையை சென்றடையும்.
* டாக்டர் எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-கே.எஸ்.ஆர். பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (07320) அதே நாளில் பகல் 3.40 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு பெங்களூருவை வந்தடையும். இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் யஷ்வந்தபுரம், கே.ஆர்.புரம், பங்காருபேட்டை, ஜோலார்பேட்டை, ஆம்பூர், குடியாத்தம், காட்பாடி, சோளிங்கர், அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* எஸ்.எம்.வி.டி. பெங்களூரு-கலபுரகி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06519) வருகிற 28-ந்தேதி இரவு 9.15 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.40 மணிக்கு கலபுரகியை சென்றடையும்.
* கலபுரகி-எஸ்.எம்.வி.டி. பெங்களூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06520) வருகிற 29-ந்தேதி காலை 9.35 மணிக்கு கலபுரகியில் இருந்து புறப்பட்டு அதே நாள் இரவு 8 மணிக்கு பெங்களூருவை வந்தடையும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும் எலகங்கா, தர்மாவரம், அனந்தபூர், குண்டக்கல், அதோனி, மந்த்ராலயம் ரோடு, ராய்ச்சூர், கிருஷ்ணா, யாதகிரி, சகாபாத் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
* மைசூரு-கார்வார் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06203) வருகிற 28-ந்தேதி இரவு 9.35 மணிக்கு மைசூருவில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.15 மணிக்கு கார்வாரை சென்றடையும்.
* கார்வார்-மைசூரு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (06204) வருகிற 29-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 4.40 மணிக்கு மைசூருவுக்கு செல்லும்.
இந்த ரெயில்கள் இருமார்க்கமாகவும், மண்டியா, கே.எஸ்.ஆர். பெங்களூரு, யஷ்வந்தபுரம், குனிகல், ஹாசன், சக்லேஷ்புரா, சுப்பிரமணியா ரோடு, கபகாபுத்தூர், பண்ட்வால், சூரத்கல், முல்கி, உடுப்பி, பர்கூர், குந்தாபுரா, பைந்தூர், பட்கல், முருடேஸ்வர், ஒன்னாவர், குமட்டா, கோகர்ணா, அங்கோலா ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






