என் மலர்
தலைப்புச்செய்திகள்
- வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
- புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.
திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 2026 தேர்தலில் கூட்டணி ஆட்சியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது தான் எங்களது கொள்கை. அதை வைத்துத்தான் கூட்டணிகள் அமைய வேண்டும்.
வெறுமென்றே திமுகவை மாற்றுவதற்காக ஒரு கூட்டாணி என்பது ஆகாது.
தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால், ஆட்சி பகிர்வு என்ற லட்சியத்தோடு, அந்த குறிக்கோளோடுதான் ஆட்சி மாற்றங்கள் நடைபெற வேண்டும்.
புதிய தமிழகம் பொறுத்தவரையில் அந்த கொள்கையை வைத்துதான் எங்களின் பயணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருகிறது.
- சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படும்.
தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அந்த வகையில் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிக்கை அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதன்படி சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதில், இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருவதால், சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும்.
2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டில் E-SPORTS சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி, இந்தியாவின் முக்கியமான E-SPORTS நிகழ்வாக அமையும் என கூறினார்.
- கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது.
- 10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை விடுவித்துள்ளது இலங்கை கடற்படை.
கட்சத்தீவு அருகே மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன், படகுகளையம் பறிமுதல் செய்கிறது. படகுகளை திரும்ப பெற அதிக அளவிலான அபராதம் விதிக்கிறது.
தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இது தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் தமிழக திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு மத்திய வெளியுறவுத்துறை சார்பில் அளித்த பதில் பின்வருமாறு:-
கடந்த 10 ஆண்டுகளில் (2015-25) தமிழ்நாடு மீனவர்கள் 2,870 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.. 454 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 104 மீனவரகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
10 ஆண்டுகளில் 2,839 மீனவர்கள் மற்றும் 345 படகுகளை விடுவித்துள்ளது இலங்கை கடற்படை.
இவ்வாறு வெளியுறவுத்துறை பதில் அளித்துள்ளது.
- வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
- படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.
வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
- மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்த்தப்படும்.
டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மத்திய ஊழியர்களின் அகவிலைப்படியை 2% அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் அகவிலைப்படி 53% இலிருந்து 55% ஆக உயர்த்தப்படும். எனினும் இந்த அதிகரிப்பானது கடந்த 78 மாதங்களில் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் மிகக் குறைந்த அதிகரிப்பு என கருதப்படுகிறது.
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதனை சுருக்கமாக டிஏ (Dearness Allowance) என்பார்கள்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும்.
அதாவது நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- கணக்கு வைத்துள்ள வங்கி ஏ.டி.எம்.-ஐ 5 முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
- 5 முறைக்கு மேல் பயன்படுத்தினால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 23 ரூபாய்ம் பிடித்தம் செய்யப்படும்.
வங்களில் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. கார்டு மூலம் பணம் எடுத்தல், ஸ்டேட்மென்ட் உள்ளிட்டவைகளுக்கு ஏ.டி.எம். இயந்திரத்தை ஒரு மாதத்திற்கு ஐந்து முறை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
எந்த வங்கியில் கணக்கு வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தில் ஐந்து முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம். இயந்திரத்தில் பெருநகரில் 3 முறையும், பெருநகர் அல்லாத இடங்களில் ஐந்து முறையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதற்குமேல் ஏ.டி.எம். இயந்திரத்தை பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் தலா 21 ரூபாய் கட்டணமாக பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை 23 ரூபாயாக உயர்த்த ஆர்பிஐ வங்கிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. வருகிற மே 1 ஆம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும்.
- ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
- கவுகாத்தியில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர்.
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு சீசனிலும் புதிய விதிகளை கொண்டுவருவதை ஐபிஎல் நிர்வாகம் வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் இந்த முறையும் புதிய விதிகளை கொண்டுள்ளது.
ஆனால் இந்த ஆண்டு புதிதாக கலை நிகழ்ச்சியில் ஒரு புது முயற்சியை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் தொடக்க ஆட்டம் நடைபெறும் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஆனால் இந்த முறை 12 மைதானங்களில் நடக்கும் தொடக்க போட்டியில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடிய தொடக்க ஆட்டத்தில் இசையமைப்பாளர் அனிருத் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த வகையில் வரும் 30-ந் தேதி ராஜஸ்தான் - சென்னை அணிகள் மோதுகின்றனர். இந்த போட்டி கவுகாத்தியில் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக பாலிவுட் நட்சத்திரம் சாரா அலி கானின் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் அம்மாநில ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
- இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
- ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ஓலா, ஊபர் உள்ளிட்ட டாக்சி சேவைகள் மற்றும் ராபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகள் பெருநகரங்களில் மக்களால் தினந்தோறும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவற்றுக்கு போட்டியாக பைக், கார் மற்றும் ஆட்டோ சேவைகளை வழங்கும் "சஹ்கார் டாக்ஸி" (Sahkar Taxi) என்ற புதிய கூட்டுறவு அடிப்படையிலான டாக்சி சேவையை தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தனியார் நிறுவனங்களைப் போலல்லாமல், இந்த அரசாங்க ஆதரவு சேவை மூலம் அனைத்து வருமானமும் ஓட்டுநருக்கே செல்லும்.
பாராளுமன்றத்தில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா பேசியதாவது, "சஹ்கார் டாக்சி சேவை வரும் மாதங்களில் தொடங்கப்படும்.
சஹ்கார் டாக்சியின்கீழ் நாடு முழுவதும் பைக் டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார் டாக்சிகளைப் பதிவு செய்யப்படும். இந்த சேவையின் லாபம் எந்த பெரிய தொழிலதிபருக்கும் செல்லாது. மாறாக வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமே செல்லும் என்று தெரிவித்தார்.
- விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் நடித்துள்ள திரைப்படம் Once More
- ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.
அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மலையாள பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும்.
இவர் இதற்கு முன் ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் அடுத்த பாடலான எதிரா? புதிரா? பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் சத்யபிரகாஷ் பாடியுள்ளார். பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
- கட்சியை விட தமிழக மக்களின் நலன் தான் முக்கியமானது.
- கூட்டணி குறித்து எனக்கென்று தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சி தான் முக்கியம்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்பேது அவர் கூறியதாவது:-
2026 சட்டமன்றத் தேர்தல் தமிழகத்திற்கு மிக முக்கியமான தேர்தல் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்.
கூட்டணிக்கான காலத்திற்கு இன்னும் அவகாசம் உள்ளது. கூட்டணி குறித்து தற்போதைக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை.
அரசியலில் கள நிலவரத்தை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். மைக்கில் பேசுவது அரசியல் அல்ல, களத்தில் வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்திருந்தார்.
- வானூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள அனுமதி.
காமெடி நடிகரான (Stand-up comedian) குணால் கம்ரா மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகைச்சுவைக்காக அம்மாநில துணைமுதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்தார். ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியிருந்தார்.
இதனால் கோபம் அடைந்த ஏக்நாத் ஷிண்டே கட்சித் தொண்டர்கள் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதப்படுத்தினர். இதற்கிடையே மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கர் காவல்நிலையத்தில் குணால் கம்ராவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருவேளை கைது செய்யப்படலாம் என அஞ்சினார்.
இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். மகாராஷ்டிராவில் நடைபெற்ற சம்பவத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றததில் முன்ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்ய காரணம் என்ன? என் கேள்வி எழுந்தது.
குணால் கம்ரா விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். மும்பையில் வசித்து வருகிறார். இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் குணால் கம்ராவுக்கு இடைக்கால முன்ஜாமின் வழங்கியுள்ளது. மனு குறித்து பதில் அளிக்க மும்பை கர் காவல்நிலையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமின் பெற்றுக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார்.
- படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற இந்தி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித்நதியத்வாலா தயாரித்துள்ளார்.
படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் மார்ச் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சில விஷயங்களை சல்மான் கான் கூறியதாவது " ரஜினிகாந்த், சிரஞ்சீவி காரு, சூர்யா, ராம் சரண் படங்களை நாங்கள் இங்கு பார்க்கிறோம். நன்றாக ஓடுகின்றன. ஆனால் எங்கள் இந்தி திரைப்படங்களை அவர்களின் ரசிகர்கள் பார்க்கச் செல்வதில்லை. அவர்களின் ஊர்களுக்கு நான் செல்லும்போதெல்லாம், "பாய்.. பாய்" என என்னை அழைப்பார்கள். ஆனால் தியேட்டருக்கு செல்வதில்லை" என அவரது கருத்தை பதிவிட்டுள்ளார்.






