என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும்.
- வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
ரம்புட்டான், ஒரு சுவையான மற்றும் சத்தான பழம். இது மருத்துவ ரீதியாகவும் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பழத்தின் வெளித்தோற்றம் முள் போன்று கரடுமுரடாக இருந்தாலும், உள்ளே இருக்கும் பழம் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து ருசியாகவே இருக்கும். இந்த பழத்தின் தாயகம் மலேசியா மற்றும் இந்தோனேஷியா. தமிழ்நாட்டிலும் குறிப்பிட்ட பகுதிகளில் விளைகிறது. ரம்புட்டான் பழம், காயாக இருக்கும் போது பச்சை நிறத்திலும், பழுத்த பிறகு சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாகவும் மாறும்.
ரம்புட்டான் பழத்தில் கலோரி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உடல் பருமனால் அவதிப்படுவோர், ரம்புட்டானை அடிக்கடி சாப்பிடலாம். இதில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், நாக்கு வறண்டு போவதையும் தடுக்கும். இப்பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம் ஆகிய சத்துக்கள், உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை அதிகரிக்க உதவும். உடல் சீரான வளர்ச்சி பெறவும் முக்கிய பங்காற்றும். ஆஸ்துமா மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். கண் ஆரோக்கியத்தையும் காக்கும். உடலில் கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கவும் செய்யும். இதனால், மாரடைப்பு அபாயம் குறைகிறது.

ரம்புட்டான் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால், தலைமுடி, தோல் மற்றும் கை, கால் நகங்கள் பளபளப்புடன் இருக்கும். எலும்பு மண்டல வளர்ச்சிக்கு உதவக்கூடிய கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் இதில் உள்ளன. இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதில் பாஸ்பரஸ் இருப்பதால் சிறுநீரகத்தில் இருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும். மேலும் திசுக்கள் மற்றும் உடல் உயிரணுக்களின் வளர்ச்சி, புத்துணர்ச்சி மற்றும் பராமரிப்பு போன்ற செயல்களில் இந்த பழம் முக்கிய பங்கு வகிக்கிறது.
ரம்புட்டானில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. அதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். அதிகமாக சாப்பிட தோன்றும் எண்ணத்தையும் குறைத்துவிடும். இந்த பழத்தில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து தண்ணீரில் கரைந்து குடலில் ஜெல் போன்ற ஒரு பொருளை உருவாக்குகிறது. இந்த ஜெல் போன்ற பொருள் செரிமானத்தையும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் மெதுவாக்க உதவுகிறது, இதனால் பசி உணர்வு குறைகிறது.
இந்த பழம், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருந்தாலும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி தான் சாப்பிட வேண்டும். வழுவழுப்பான இந்த பழத்தை குழந்தைகள் சாப்பிடும் பொழுது தொண்டையில் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு கவனத்துடன் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
- கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது.
- நேற்று கோழிக்கோடு - திருவனந்தபுரம் அணிகள் மோதின.
ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) டி20 தொடர் பிரபலமான நிலையில் ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கங்களும் டி20 கிரிக்கெட் லீக்கை தொடங்க ஆரம்பித்தன.
அவ்வகையில் கேரளா கிரிக்கெட் லீக் தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று கோழிக்கோடு - திருவனந்தபுரம் அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் ஆடிய கோழிக்கோடு அணி 20 ஓவர்கள் முடிவில் 186 ரன்கள் அடித்தது. அதிரடியாக விளையாடிய சல்மான் நசீர் 26 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.
குறிப்பாக சல்மான் நசீர் ஒரே ஓவரில் 40 ரன்களை விளாசி அசத்தினார். அபிஜீத் பிரவீன் வீசிய கடைசி ஓவரில் சல்மான் நசீர் 6 சிக்சர் விளாசினார். மேலும் Wide பால், நோ பாலுடன் சேர்த்து கடைசி ஓவரில் மட்டும் 40 ரன்கள் கிடைத்தது
- கோவிந்தராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
- விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நென்மேனி பகுதியில் கார் மீது லாரி மோதிய விபத்தில் தாய், தந்தை, மகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் தாய் யமுனா, மகள் ரூபினி மற்றும் கார் ஓட்டுநர் காளீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த தந்தை கோவிந்தராஜன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
- ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது.
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8-ந் தேதி நான் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருகிறேன் என்றார்.

இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது. அவர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன். தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த பெருமையுடன் வந்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
- நவம்பர் மாதத்தில் டெல்லியில் குவாட் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
- குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரவிருந்தார்
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியா வர இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனையால் டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவரும் நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனிடையீ இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிற்கு டிரம்ப் 50% வரிவிதித்தார்.
இந்நிலையில், ஷாங்காய் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இந்தியா பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையிலும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், சென்னையிலும் நேற்று நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், திண்டுக்கல், தேனி, மதுரை, திருப்பூர், நீலகிரி, கோவை, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலையா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்
- பாலகிருஷ்ணா பேசும் பன்ச் வசனங்களை அவர் தவிர வேறு யார் பேசினாலும் சிறப்பாக இருக்காது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலையா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலையா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து வரலாறு படைத்தார்.
இந்நிலையில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த பாலையாவுக்கு வாழ்த்து தெரிவித்து ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தெலுங்கில் பேசிய ரஜினிகாந்த், "பாலகிருஷ்ணா பேசும் பன்ச் வசனங்களை அவர் தவிர வேறு யார் பேசினாலும் சிறப்பாக இருக்காது. பாலையா என்றாலே POSITIVITY. அவர் எங்கு இருந்தாலும், மகிழ்ச்சியும், சிரிப்புமே இருக்கும். அவருக்கு போட்டி அவரே. பாலையா படம் நன்றாக ஓடுகிறது என்றால், அவரது ரசிகர்கள் மட்டுமல்ல, அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மகிழ்ச்சியடைவார்கள்; அதுவே அவரது பலம்" என்று தெரிவித்தார்.
- சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.
- சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், , கிண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இரவு 11 மணி முதல் கனமழை பெய்தது.
எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், மாம்பலம், கிண்டி, அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.
இந்நிலையில், இந்தாண்டு சென்னையில் முதல் மேகவெடிப்பு நிகழ்ந்ததாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்த ஆண்டு சென்னைக்கு முதல் மேக வெடிப்பு நிகழ்வு நடந்துள்ளது. பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 100 மிமீக்கு மேல் மழை பெய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வருமானப் பற்றாக்குறை ஏற்படும். குடும்ப ரகசியங்களைச் சொல்ல வேண்டாம். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது
ரிஷபம்
தாராளமாக செலவிட்டு மகிழும் நாள். தடைகள் அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும். ஆரோக்கியம் சீராகும்.
மிதுனம்
விருப்பங்கள் நிறைவேறும் நாள். வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். வீடு வாங்கும் முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்
முன்னேற்றம் கூடும் நாள். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சகோதர ஒத்துழைப்பு உண்டு. வருமானம் போதுமானதாக இருக்கும்.
சிம்மம்
திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் நாள். தேவைக்கேற்ற பணம் தேடி வரும். நண்பர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களாக நடந்து கொள்வர். சுப காரிய பேச்சு முடிவாகும்.
கன்னி
குறைகள் அகலும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அன்பு நண்பர்களின் ஆதரவு திருப்தி தரும். குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
துலாம்
திடீர் முன்னேற்றம் ஏற்படும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே வெளியில் நடைபெறும். வரவு திருப்தி தரும். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது நல்லது.
விருச்சிகம்
காரிய வெற்றி ஏற்படும் நாள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் ஒன்று நடைபெறும்.
தனுசு
தேக்க நிலை மாறி தெளிவு பிறக்கும் நாள். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மகரம்
வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்ளும் நாள். வியாபாரம் தொழிலில் இருந்த மறைமுகப் போட்டிகளை முறியடிப்பீர்கள். நண்பர்கள் ஒளிவுமறைவின்றி பழகுவார்கள்.
கும்பம்
பிரச்சனைகளில் இருந்து விடுபடும் நாள். கூட்டுத் தொழில் லாபம் தரும். வருமானம் உயரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறி மகிழ்ச்சி கூடும்.
மீனம்
தனவரவு திருப்தி தரும் நாள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில் சீராக நடைபெறும். உத்தியோகத்தில் சம்பள உயர்வு பற்றிய தகவல் சந்தோஷம் தரும்.
- இந்தோனேசியாவில் எம்.பி.க்கள் சம்பளம் குறைப்பை வலியுறுத்தி போராட்டம் நடைபெறுகிறது.
- அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டதில் 3 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
ஜகார்த்தா:
தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று இந்தோனேசியா. இங்கு சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ஆனால் எம்.பி.க்களுக்கு சுமார் ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறது.
இது அந்த நாட்டு மக்களின் சராசரி வருமானமான ரூ.17 ஆயிரத்தை விட பல மடங்கு அதிகம் ஆகும். எனவே எம்.பி.க்களின் சம்பளத்தை குறைக்க வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள பாராளுமன்றத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். எனவே போராட்டத்தைக் கலைக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அதன்பின் தடியடி மற்றும் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டத்தைக் கலைக்க முயன்றனர். போராட்டக்காரர்களுக்கு இடையே போலீஸ் கவச வாகனம் தறிகெட்டு ஓடியது. இதில் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பாண்டுங், யோககர்த்தா, மக்காசர் ஆகிய நகரங்களுக்கும் போராட்டம் பரவியது.
அதன் ஒரு பகுதியாக மக்காசரில் உள்ள நகர்மன்ற அலுவலகம், போலீஸ் தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அந்தக் கட்டிடம் கொழுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்தனர். பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் 3 அரசு ஊழியர்கள் உடல் கருகி பலியாகினர். 5 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், கனடாவின் டேனிஸ் ஷபோவலோவ் உடன் மோதினார்.
முதல் செட்டை 5-7 என இழந்த சின்னர், அதிரடியாக ஆடி அடுத்த மூன்று செட்களை 6-4, 6-3, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டலேனாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- நாடு முழுவதும் உள்ள 2 லட்சத்துக்கும் அதிகமானோரிடம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
- மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி 2வது இடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றும் முதல் மந்திரி யார் என்று இந்தியா டுடே நாளிதழ் இந்த மாதம் [ஆகஸ்ட்] நடத்திய Mood of the Nation கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள 2,06,826 பேரிடம் இந்த கருத்துக்கணிப்பானது நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 36 சதவீதம் பேர் உத்தர பிரதேச மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை சிறப்பாகச் செயல்படும் முதல் மந்திரியாக கருதுகின்றனர். உ.பி. முதல்வர் கடந்த பிப்ரவரியில் 35 சதவீத ஆதரவு பெற்று இருந்தார். தற்போது ஒரு சதவீதம் அதிகரித்து 36 சதவீதம் பெற்றுள்ளார்.
2வது இடம் பிடித்துள்ள மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை 13 சதவீதம் பேர் விரும்புகின்றனர்.
அவரைத் தொடர்ந்து 7 சதவீதம் பேர் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சிறந்த முறையில் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.






