என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜெர்மனியில் உள்ள தமிழர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
- ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
- ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது.
தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக அரசு முறை பயணமாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு செல்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.
முன்னதாக, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒரு வார கால பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நான் என்னுடைய பயணத்தை மேற்கொள்கிறேன். செப்டம்பர் 8-ந் தேதி நான் தமிழ்நாட்டுக்கு திரும்பி வருகிறேன் என்றார்.
இந்த நிலையில், ஜெர்மனி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில், ஜெர்மனி வாழ் தமிழர்களின் வரவேற்பு மனதை கவர்ந்தது. அவர்களின் பாசத்தைக் கண்டு மகிழ்கிறேன். தமிழ்நாட்டின் சிறப்புகளை எடுத்துக்கூறி முதலீடுகளை ஈர்த்து பிரகாசமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு ஏற்படுத்த பெருமையுடன் வந்திருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.






