என் மலர்
தலைப்புச்செய்திகள்
- துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.
- பாராளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.
புதுடெல்லி:
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் 21-ந்தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக்குறைவு காரணமாக பதவியை ராஜினாமா செய்வதாக அவர் ஜனாதிபதியிடம் விளக்கம் அளித்தார்.
நாட்டின் 2-வது மிக உயர்ந்த அரசமைப்பு பதவியான துணை ஜனாதிபதி பதவியை நீண்ட நாட்களுக்கு காலியாக வைத்திருக்க கூடாது என்று சட்ட விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு தலைமை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து பட்டியல் வெளியிட்டது. அதன்படி கடந்த மாதம் 7-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியா கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி அறிவிக்கப்பட்டார்.
கடந்த மாதம் அவர்கள் இருவரும் துணை ஜனாதிபதி பதவிக்கு தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்த னர். அதன் பிறகு அவர்கள் இருவரும் பாராளுமன்ற இரு அவைகளின் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்கள். நேற்று அவர்கள் இருவரும் தங்களது இறுதிக்கட்ட ஆதரவு திரட்டலை நடத்தி முடித்தனர்.
துணை ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபைகளின் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள். பாராளுமன்ற மக்களவையில் ஒரு இடம் காலியாக இருப்பதால் மொத்தம் 542 எம்.பி.க்கள் உள்ளனர்.
பாராளுமன்ற மேல்சபையில் 5 எம்.பி.க்கள் இடங்கள் காலியாக உள்ளதால் 228 எம்.பி.க்கள் உள்ளனர். இது தவிர மேல்சபையில் 12 நியமன எம்.பி.க்கள் உள்ளனர்.
மொத்தம் 782 எம்.பி.க் கள் நாளை (செவ்வாய்க்கிழமை) வாக்களிக்க தகுதியானவர்களாக உள்ளனர். இந்த 782 எம்.பி.க்களில் 392 வாக்குகள் பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார். தற்போது பாராளுமன்ற இரு அவைகளில் பா.ஜ.க. கூட்டணிக்கு அதிக எம்.பி.க் கள் உள்ளனர்.
பா.ஜ.க. கூட்டணிக்கு இரு அவைகளிலும் மொத்தம் 422 எம்.பி.க்கள் பலம் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு பெரும்பான்மை பெறும் வகையில் எம்.பி.க்கள் பலம் இல்லை. எனவே நாளை நடக்கும் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
இதற்கிடையே துணை ஜனாதிபதி தேர்தலில் ரகசிய வாக்குசீட்டு முறை கடைபிடிக்கப்பட இருப்பதால் தற்போதைய எண்ணிக்கையை விட கூடுதல் வாக்குகளை பெற வேண்டும் என்பதில் இரு கூட்டணிகளும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 11 எம்.பி.க்களும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அறிவித்து உள்ளனர்.
இதனால் பா.ஜ.க. கூட் டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 433 வாக்குகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இது தவிர பிஜு ஜனதா தளத்தின் 7 எம்.பி.க்கள், பாரதீய ராஷ்டீரிய சமிதியின் 4 எம்.பி.க்கள் ஆதரவை பெற இரு கூட்டணிகளும் தீவிரமாக காய்களை நகர்த்தி வருகின்றன.
பாராளுமன்றத்தில் சிறு கட்சிகளும், 3 சுயேட்சைகளும் உள்ளனர். அவர்கள் உள்பட 23 எம்.பி.க்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்பது தெரியாமல் உள்ளது. அந்த வாக்குகளும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கிடைத்தால் அவர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் நாளை பாராளுமன்ற வளாகத்தில் அறை எண். எப்.101 என்ற அரங்கத்தில் நடைபெறும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடத்தப்பட உள்ளது.
துணை ஜனாதிபதி தேர்தல் நடத்தும் அதிகாரியாக மேல்சபை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் ஓட்டுப்பதிவை கண்காணிப்பார். ஓட்டு போடுவதற்காக அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் டெல்லிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
இன்று மாலைக்குள் அனைத்து எம்.பி.க்களும் டெல்லிக்கு வந்து விட வேண்டும் என்று பா.ஜ.க. உத்தரவிட்டுள்ளது. நாளை மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும் உடனடியாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் கூலி திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் 11 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி யில் வெளியாகிறது.
இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்ற தகவல் அண்மையில் வெளியானது.
சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். அவர் அதில் கூறியதாவது "நாங்கள் இருவரும் இணைந்து எப்பவோ நடித்திருக்க வேண்டும். வியாபாரம் ரீதியாக நாங்கள் சேராமல் இருந்தோம். இப்பொழுது அதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது" என கூறினார்.
- 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது.
- சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) நாளை முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த தொடருக்கு தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி வீரர்கள் துபாயில் உள்ள ஐசிசி மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.
பயிற்சியை முடித்து இந்திய வீரர்கள் மைதானத்தில் இருந்து வெளியே வந்தனர். சூர்யகுமார், சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சுப்மன் கில் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரசிகர்கள் சஞ்சு சாம்சன் என முழங்கினர்.
அப்போது, சூர்யகுமார் யாதவ் சாம்சனை 'உள்ளூர் பையன்' என்று நகைச்சுவையாக அழைத்தார். உடனே சஞ்சு ரசிகர்களிடம் ஆட்டோகிராப் மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அப்போது அங்கு வந்த சுப்மன் கில் ரசிகர்களை கண்டு கொள்ளாமல் முகத்தை திரும்பி கொண்டு சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல ரசிகர்கள் சுப்மன் கில்லுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த முறை சுப்மன் கில் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பராக மிடில் ஆர்டரில் விளையாட கூடிய ஜித்தேஷ் சர்மாவும் அணியில் உள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் அணியின் லெவனில் இடம்பெருவாரா என்ற கேள்விகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.
இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார். சாண்டியின் வில்லத்தனம் படத்திற்கு ஒரு புதிய சாயலை கொடுத்துள்ளது.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.
வெளியான அனைத்து மொழிகளிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் உலகளவில் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்தது.
படத்தின் மூத்தோன் என்ற கதாப்பாத்திரம் இருக்கிறது. அவர்தான் அனைவருக்கும் லீடர் போல் இருக்கிறார். ஆனால் இவரது முகத்தை படத்தில் காட்ட மாட்டார்கள். இந்நிலையில் மூத்தோன் கதாப்பாத்திரம் நடிகர் மம்மூட்டி தான் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நேற்று பிறந்தநாள் கொண்டாடிய மம்மூட்டியை வாழ்த்தி படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக கிஸ் (KISS) படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். ஜென் மார்டின் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் கிஸ் படம் செப்டம்பர் 19ஆம் தேதி உலகளவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு நாளை மாலை 5 மணிக்கு படக்குழு வெளியிட இருக்கிறது.
- மல்லை சத்யாவுக்கும், வைகோ மற்றும் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
- மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மல்லை சத்யா நடத்தினார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்து வரக்கூடிய மல்லை சத்யாவுக்கும், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் முதன்மை செயலாளர் துரை வைகோவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
சமீபத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்திருந்த மல்லை சத்யா, தன்னை துரோகி என்று அழைத்ததற்கு பதில், தனக்கு விஷம் கொடுத்திருந்தால், அதை குடித்துவிட்டு இறந்து போயிருப்பேன் என கூறியிருந்தார்.
இதையடுத்து, மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் மல்லை சத்யா நடத்தினார்.
இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்கும் வகையில் செயல்பட்டதாக கூறி ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக மல்லை சத்யாவை நீக்கி வைகோ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் ம.தி.மு.க. உடமைகள், ஏடுகள் அனைத்தையும் ஒப்படைக்கக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
முன்னதாக ம.தி.மு.க.வில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நிலையில் தற்போது மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டதாக வைகோ அறிவித்துள்ளார்.
- அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம்.
- தமிழ்நாட்டை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் போட்டி.
எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியால் தி.மு.க.வுக்கு தோல்வி பயம்.
தமிழ்நாட்டை ஆண்ட தி.மு.க., அ.தி.மு.க. இடையே தான் போட்டி.
அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
முதல்வர் முக ஸ்டாலின் 5-வது முறையாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார். இந்த வெளிநாட்டு பயணங்களின் மொத்த விளக்கமும் வேண்டும்.
அதிமுக ஆட்சியின் போது முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்தன. ஒப்பந்தம் போட்டவுடனேயே தொழில் தொடங்கப்பட்டது போல் பொய் செய்தி.
என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
- யூனிட் 14.6bhp பவர் மற்றும் 14Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
- மோட்டார் CVT ஆட்டோமேடிக் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், இந்தியாவில் தனது புதிய Xoom 160 அட்வென்ச்சர் மேக்சி-ஸ்கூட்டர் விநியோகங்களை விரைவில் தொடங்குவதாக அறிவித்துள்ளது. முன்னதாக ஹீரோ நிறுவனம் கடந்த ஜூலை மாத வாக்கில் Xoom 160 மாடலுக்கான முன்பதிவுகளை தொடங்கியது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹீரோ Xoom 160 அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1.49 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இந்த மாடலின் டெலிவரிகள் தொடங்கப்பட இருந்த நிலையில், பல்வேறு தடைகள் காரணமாக தாமதங்களை சந்தித்தது.
அட்வென்ச்சர்-ஸ்டைல் மேக்சி-ஸ்கூட்டரில் புதிய 156சிசி, லிக்விட்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த யூனிட் 14.6bhp பவர் மற்றும் 14Nm டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மோட்டார் CVT ஆட்டோமேடிக் யூனிட் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒரே அட்வென்ச்சர் மேக்சி ஸ்கூட்டர் Xoom 160 ஆகும். மேலும் இதன் வடிவமைப்பு அதற்கு நிறைய பொருத்தமாக இருக்கும். அம்சங்களின் அடிப்படையில், இது LED லைட்டிங், ரிமோட் கீ இக்னிஷன், ஸ்மார்ட் கீ மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் பெறுகிறது. இதற்கு நேரடி போட்டியாக வேறு எந்த மாடலும் இல்லை. எனினும், ஹீரோ Xoom 160 மாடல் யமஹா ஏரோக்ஸ் 155 உடன் போட்டியிடுகிறது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதனை தொடர்ந்து கடந்த வாரம் இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
இந்நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,970-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.79,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 137 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
05-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,920
04-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,360
03-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.78,440
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
07-09-2025- ஒரு கிராம் ரூ.138
06-09-2025- ஒரு கிராம் ரூ.138
05-09-2025- ஒரு கிராம் ரூ.136
04-09-2025- ஒரு கிராம் ரூ.137
03-09-2025- ஒரு கிராம் ரூ.137
- பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
- தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
சென்னை:
ஜெர்மனி, இங்கிலாந்து பயணங்களை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தாயகம் திரும்பினார். அவரை அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வரவேற்றனர். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் முதலீடுகளை ஈர்த்து மன நிறைவுடன் திரும்பி இருக்கிறேன். வெற்றிப்பயணத்தால் மனநிறைவு ஏற்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து நிறுவனங்கள் முதலீடுகள் செய்துள்ளன.
* இதுவரை சென்ற பயணங்களிலேயே முத்தாய்ப்பான பயணம் இது.
* பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர்.
* தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா துடிப்பானவர் என்பதை நிரூபித்துள்ளார்.
* முதலீடுகளை ஈர்ப்பதற்கான எனது வெற்றிப்பயணத்தை பொறுக்க முடியாமல் சிலர் புலம்பி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 30-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு 9 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்பினார்.
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளின் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்று வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பயணத்தில் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.15,516 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ரூ.7,020 கோடி முதலீடு ஈர்த்து 15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் 7 நிறுவனங்களில் ரூ.8,496 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு 2,293 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.






