என் மலர்

  செய்திகள்

  ரூ.19க்கு அன்லிமிட்டெட் சேவைகள் வழங்கும் வோடபோன்
  X

  ரூ.19க்கு அன்லிமிட்டெட் சேவைகள் வழங்கும் வோடபோன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரிலையன்ஸ் ஜியோ வழங்கி வரும் சலுகைகளுக்கு போட்டியாக வோடபோன் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி அன்லிமிட்டெட் சேவைகள் ரூ.19 முதல் துவங்குகின்றது.
  புதுடெல்லி: 

  வோடபோன் இந்தியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இருவித திட்டங்களை அறிவித்துள்ளது. வோடபோன் சூப்பர்டே (SuperDay) மற்றும் வோடபோன் சூப்பர்வீக் (SuperWeek) என அழைக்கப்படும் புதிய சலுகைகளின் விலை ரூ.19 முதல் துவங்குகின்றது. வோடபோன் வாய்ஸ் பிளஸ் டேட்டா சலுகையின் படி தினசரி மற்றும் வாராந்திர சலுகைகள் வழங்கப்படுகின்றன. 

  வோடபோன் சூப்பர்வீக் சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ஏழு நாட்களுக்கும், 250 எம்பி டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதே போன்று வோடபோன் சூப்பர்டே சலுகையின் கீழ் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், (வோடபோன் டூ வோடபோன் எண்களுக்கு மட்டும்) 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்போருக்கு 100 எம்பி டேட்டா ரூ.19க்கு வழங்கப்படுகிறது.    ரூ.19க்கு வழங்கப்படும் வோடபோன் சூப்பர்டே சலுகையின் வேலிடிட்டி ஒரு நாள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வோடபோன் சூப்பர்வீக் சலுகையின் விலை ரூ.49 என நிர்ணயம் செய்யப்பட்டு இதன் வேலிடிட்டி ஏழு நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வோடபோன் சூப்பர்வீக் திட்டத்தின் கீழ் மற்ற நெட்வொர்க்களுக்கு அழைப்புகள் கூடுதலாக வழங்கப்படுகிறது. எனினும் இதன் விலை ரூ.89 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

  வோடபோன் பிரீபெயிட் வாடிக்கையாளர்கள் ரூ.89 செலுத்தும் போது அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள் வோடபோன் நெட்வொர்க்களுக்கும், மற்ற நெட்வொர்க்களுக்கு 100 நிமிடங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 250 எம்பி டேட்டா 4ஜி ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் என வோடபோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.      வோடபோன் அறிவித்துள்ள சூப்பர்வீக் மற்றும் சூப்பர்டே சலுகைகள் அனைத்து சில்லறை விற்பனை மையங்கள், வோடபோன் இணையத்தளம் மற்றும் மைவோடபோன் செயலி (MyVodafone app) உள்ளிட்டவற்றில் கிடைக்கும் என வோடபோன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  வோடபோன் போன்றே ரிலையன்ஸ் ஜியோவும் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.19 விலையில் சேவைகளை வழங்கி வருகிறது.
  Next Story
  ×