search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் ஜூன் முதல் வாரத்தில் களமிறங்கும் நோக்கியா
    X

    இந்தியாவில் ஜூன் முதல் வாரத்தில் களமிறங்கும் நோக்கியா

    எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிய நோக்கியா போன்களை ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியிடும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    எச்எம்டி குளோபல் புதிய நோக்கியா போன்களை ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியிட இருப்பதாகவும், இதன் வெளியீட்டு நிகழ்ச்சி புது டெல்லியில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

    எனினும் அறிவித்துள்ள நான்கு மாடல்களையும் ஒரே சமயம் வெளியிடுமா அல்லது வெவ்வேறு தேதிகளில் வெளியிடுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களின் படி முதற்கட்டமாக இரண்டு போன்களையும், அதன்பின் இரண்டு போன்களையும் வெளியிடும் என கூறப்படுகின்றது. 

    முன்னதாக பிப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் நோக்கியா 6, நோக்கியா 5, நோக்கியா 3 மற்றும் நோக்கியா 3310 (2017) என நான்கு மொபைல் போன்கள் அடுத்தடுத்து அறிமுகம் செய்யப்பட்டன. இதே நிகழ்ச்சியில் புதிய நோக்கியா போன்கள் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 



    சர்வதேச சந்தையை பொருத்த வரை எந்த நாடுகளிலும் நோக்கியா போன்கள் வெளியிடப்படவில்லை. எனினும், இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் அனைத்து நோக்கியா போன்களும் இந்தியாவிலேயே கட்டமைக்கப்படும் என்றும் இவற்றின் விலை மற்ற சந்தைகளை விட குறைவகாவே இருக்கும் என்றும் எச்எம்டி குளோபல் உறுதி செய்துள்ளது. 

    அதன் படி நோக்கியா 6 இந்தியாவில் ரூ.20,000க்கும், நோக்கியா 5 ரூ.15,000, நோக்கியா 3 ரூ.10,000 மற்றும் நோக்கியா 3310 (2017) ரூ.4,000 பட்ஜெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
    Next Story
    ×