என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
- அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
ஈரோடு எழுமாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், அமித்ஷா ஆலோசனைபடியே செங்கோட்டையன் வேறு கட்சியில் சேர்ந்துள்ளார். செங்கோட்டையன் கட்சி மாறவில்லை. ஒரே கட்சியின் வேறொரு கிளைக்கு மாறி இருக்கிறார்.
தனது கட்சி பெயரில் உள்ள திராவிடத்தை மறந்துவிட்டார் இபிஎஸ். ஆளுநர் திராவிடத்தை அவமதித்தபோது இபிஎஸ் எனது எதிர்ப்பும் கூறவில்லை.
இபிஎஸ் மனதில் அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா அம்மையோரோ கிடையாது. அவர் மனதில் முழுக்க நிறைந்திருப்பது அமித்ஷா மட்டும்தான்.
அதிமுகவின் மூத்த தலைவர்கள் கூட பாஜகவிடம் எந்தக் கட்சியில் சேரலாம் என அனுமதி வாங்கி தான் சேர்கிறார்கள்.
தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு அமித்ஷா வீடுதான் தலைமை அலுவலகமாக உள்ளது.
அடிமைகளிடம் இருந்து தமிழகத்தை காப்பாற்ற நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார்
- அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் பலி.
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் - பிள்ளையார்பட்டி சாலையில் அரசுப் பேருந்துகள் இரண்டு, நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரணமாகக் குணமடையும் வகையில், தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்தி, உயர்தரமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல்.
- டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்ந்தது.
டிட்வா புயலின் நகர்வை காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரையில் நிலவி வந்த டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை காலை மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 13 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
மேலும், நிவாரணத் தொகையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற துயரச் செய்தியறிந்ததும் மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன்.
உடனடியாக மாவட்ட ஆட்சியரையும் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் திரு. கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களையும் தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்திடுமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
- வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
- அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.
கோபிச்செட்டிப்பாளையத்திற்கு பிரசாரத்திற்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்-க்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் கூட்டத்தில், கோபிச்செட்டிப்பாளையத்தில் LED திரையில் வீடியோக்களை காண்பித்து, செங்கோட்டையனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்தார்.
அப்போது மக்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணி அமோக வெற்றி பெறும்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைந்தது கோபி தொகுதி முதன்மை தொகுதியாக மாற நடவடிக்கை எடுக்கப்படும்.
கோபிசெட்டிபாளையமே அதிரும் வகையில் கூட்டம் கூடியுள்ளது. யார் யாரோ கனவு காண்கிறார்கள், அந்த கனவை அனைத்து மக்களும் வெள்ளமாக திறண்டு நொறுக்கிவிட்டீர்கள்.
50 ஆண்டுகளாக போராடி வந்த அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றியது. மாநில நிதியிலேயே அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றினேன்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு எந்த திட்டமும் செய்யப்படவில்லை.
டெல்டா மாவட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டபோது ஓடோடி சென்று பார்த்தேன். விவசாயிகள் பாதிக்கப்பட்ட போதெல்லாம் ஓடோடி சென்று உதவி செய்த இயக்கம் அதிமுக.
இந்தத் தொகுதியில் ஒருவர் எம்எல்ஏவாக இருந்தார். நீங்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஓட்டு வாங்குவதற்கு உங்களை வந்து அணுகினார். ஆனால் ராஜினாமா செய்வதற்கு உங்களை கேட்டாரா?
அதிமுகவிற்கு யாரெல்லாம் துரோகம் செய்தார்களோ அவர்களை ஆண்டவர் பார்த்துக் கொள்வார்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கான நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆனால் இந்தத் தொகுதியைச் சேர்ந்த எம்எல்ஏ பங்குபெறவில்லை
அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லை என்பதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் காரணம் சொன்னார்.
ஆனால் இப்போது யார் படத்தை வைத்துக்கொண்டு மாற்றுக் கட்சியில் சேர்ந்தீர்கள்?
உங்களுக்கு அடையாளம் கொடுத்தது அதிமுக. பதவி கொடுத்தது அதிமுக.
எம்ஜிஆர் ஆட்சியில் MLA-வாக இருந்தார். ஜெயலலிதா மற்றும் எனது ஆட்சியில் அமைச்சராக இருந்தார். அப்பொதெல்லாம் தூய்மையான ஆட்சி தரவில்லையா?
இவ்வாறு அவர் கூறினார்.
- கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம்.
- அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தார்.
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை பிரசாரம் மேற்கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் திரண்டனர்.
இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற கொண்டையம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 43 வயதான அர்ஜுனன், பிரசார கூட்டத்திற்கு இடையே நின்று கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
- மழை குறைந்த பிறகு வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கும்.
டிட்வா புயல் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மழை குறைந்த பிறகு வெள்ள பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு தொடங்கும்.
டிட்வா புயல் பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னிடம் கேட்டறிந்தார்.
தமிழகத்தில் மதியம் 12 மணிக்கு பிறகு பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பெண்கள் உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். காரைக்குடியில் இருந்து திண்டுக்கல், திருப்பூரிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 40-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்கள் 3 அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்," 19 ஆம்புலன்ஸ்களில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலத்த காயமடைந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
சிவகங்கை அரசு மருத்துவமனைகளுக்கு கூடுதல் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
- திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
- காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் சென்ற பேருந்தும் காரைக்குடி நோக்கி சென்ற பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பலர் மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் ௯ பேர் பெண்கள் என தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழு, காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்காக 8 ஆம்புலன்ஸ்கள் வரழைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
- டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
- டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு- புதுச்சேரி கடற்கரைகளுக்கு இணையாக கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகரும் டிட்வா புயல், அடுத்த மூன்று மணி நேரத்தில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவும் டிட்வா புயல் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது மணிக்கு 5 கி.மீ வேகத்தில் நகர்கிறது.
சென்னையில் இருந்து 150 கி.மீ தொலைவில் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. வேதாரண்யத்தில் இருந்து 170 கி.மீ தொலைவிலும், கடலூருக்கு 90, காரைக்காலுக்கு 120, புதுவைக்கு 90 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
மேலும்,டிட்வா புயலின் நகர்வை காரைக்கால் மற்றும் சென்னையில் உள்ள டாப்ளர் வானிலை ரேடர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
- இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
- எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் படிவங்களுக்கான காலக்கெடு நீட்டிப்பு திமுகவிற்கு கிடைத்த வெற்றி என திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
எஸ்ஐஆர் பணிகள் இன்னும் சிக்கல்கள் நிறைந்ததாகவே இருக்கிறது, அவை தீர்க்கப்படவில்லை.
இந்தியாவில் வாக்காளர்களை பாதுகாக்க பணியாற்றும் ஒரே சட்சி திமுக தான்.
எந்த ஒரு விஷயத்தையும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
எஸ்ஐஆர் விவகாரத்தில் அரசியல் காரணங்களுக்காக திமுக மீது அதிமுக குற்றம்சாட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல்.
- சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
மாநிலங்களில் உள்ள ராஜ் பவன்கள் இனி லோக் பவன் என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2024 ஆளுநர்கள் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பெயர் மாற்றத்தைவிடச் சிந்தனை மாற்றமே தேவை!
சட்டமன்றம் = மக்கள் மன்றம்! சட்டமன்றத்தை மதிக்காதவர்கள், "மக்கள் மாளிகை" எனப் பெயர் மாற்றுவது கண் துடைப்பா? மக்களாட்சித் தத்துவத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளையும், மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற இறையாண்மையுள்ள சட்டமன்றத்தையும் மதிப்பதுதான் இப்போதைய தேவை!
சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






