என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மு.க. ஸ்டாலின்"

    • 2006 - 16 காலக்கட்டத்தில் சிங்காநல்லூர் எம்எல்ஏவாக இருந்தார்
    • 2018-ல் ஓபிஎஸ் - இபிஎஸ்-ஆல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகள் விலகி, புதிய கூட்டணி குறித்து விவாதித்து வருகின்றன. இருக்கின்ற நிர்வாகிகள் இருக்கும் கட்சிகளை விட்டு, மாற்றுக் கட்சிக்கும் தாவும் நிகழ்வுகளும் தொடர்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுகவில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் கட்சி தாவி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி திமுகவில் இணைந்துள்ளார். கோவை சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏ -வாக இரண்டு முறையும், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவையின் செயலாளராகவும் இருந்தவர் சின்னசாமி. இதில் அண்ணா தொழிற்சங்க பணத்தை கையாடல் செய்ததாக கடந்த 2018ஆம் ஆண்டு இவர்மீது புகார் எழுந்தது. இதனால் இவரை கட்சியில் நீக்கம் செய்து அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்அறிவிப்பு வெளியிட்டனர். 

    தன்னைக் அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் சின்னசாமி வழக்கும் தொடர்ந்தார். மேலும் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் துரோகிகள் எனவும் பல விமர்சனங்களை முன்வைத்தார். அதன் பின்னர் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக அணியில் சேர்ந்து அங்கும் தொழிற்சங்க பேரவை செயலாளராக பொறுப்பேற்றார். இந்த நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.  

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இங்குள்ள முக்கிய அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகள், கூட்டணி பேச்சுவார்த்தைகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றன. இந்த நிலையில் தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஐவர் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைமை அமைத்திருந்தது.

    இந்த ஐவர் குழுவினர் இன்று காலை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். அதன் பிறகு அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய காங்கிரஸ் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை,

    "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, மரியாதை நிமிர்த்தமாக சந்தித்தோம். திமுக தரப்பில் குழு அமைக்கப்பட்டதும் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கும். இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்பதற்கு இன்றைய சந்திப்பு ஒரு உதாரணம். இந்தியா கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி." என தெரிவித்தார்.

    காங்கிரஸின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். 

     

    ×