search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு- காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி
    X

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பு- காய்கறிகள் விலை கடும் வீழ்ச்சி

    • ஆடி மாதம் தொடங்கியது முதலே எதிர்பார்த்த அளவுக்கு காய்கறி விற்பனை நடக்கவில்லை.
    • பச்சை காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகி குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது.

    போரூர்:

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 480 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    நள்ளிரவு வழக்கம் போல காய்கறி விற்பனை விறுவிறுப்பாக தொடங்கியது. பின்னர் அதிகாலையில் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி கடைக்காரர்களின் வரத்து குறைந்ததால் மார்கெட் வளாகம் முழுவதும் வெறிச்சோடி போனது.

    இதன் காரணமாக கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், சவ்சவ், காலி பிளவர், பீட்ரூட், வெள்ளரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விற்பனை ஆகாமல் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்து உள்ளதால் மொத்த வியாபாரிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

    நேற்று மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ பீன்ஸ் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் வரத்து அதிகரிப்பு காரணமாக விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது இன்று ரகத்தை பொறுத்து ஒரு கிலோ பீன்ஸ் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மொத்த வியாபாரி ராஜீவ்காந்தி கூறும்போது:-

    ஆடி மாதம் தொடங்கியது முதலே எதிர்பார்த்த அளவுக்கு காய்கறி விற்பனை நடக்கவில்லை. மேலும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தக்காளி, பீன்ஸ், அவரை, வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    எனினும் தினசரி 5 டன் அளவிலான பச்சை காய்கறிகள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகி குப்பையில் கொட்டப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×