search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை-பொள்ளாச்சி இடையே புதிய ரெயில் சேவை: மத்திய மந்திரி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்
    X

    கோவை-பொள்ளாச்சி இடையே புதிய ரெயில் சேவை: மத்திய மந்திரி நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்

    • கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
    • கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கோவை-பொள்ளாச்சி இடையே தினமும் முன்பதிவில்லா சிறப்பு ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ரெயில் சேவையை மத்திய மந்திரி எல்.முருகன் கோவை ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளாா்.

    கோவையில் இருந்து போத்தனூா், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சிக்கு மாலை 4.05 மணிக்கு சென்றடையும். மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு மாலை 5.50 மணிக்கு கோவை சென்றடையும்.

    தொடா்ந்து திங்கள் கிழமை முதல் பொதுமக்கள் பயணிக்கும் வகையில் வழக்கமான சேவை இயக்கப்படும். இதில் கோவையில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06421) போத்தனூருக்கு காலை 5.35 மணிக்கும், கிணத்துக்கடவுக்கு காலை 5.54 மணிக்கும், பொள்ளாச்சிக்கு காலை 6.25 மணிக்கும் சென்றடையும்.

    மறுமாா்க்கமாக பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06422) கிணத்துக்கடவுக்கு இரவு 9.18 மணிக்கும், போத்தனூருக்கு இரவு 9.44 மணிக்கும் கோவைக்கு இரவு 10.15 மணிக்கும் வந்தடையும்.

    இதுபோல் ஏற்கனவே கோவை-பொள்ளாச்சி இடையே வாரத்தின் 6 நாட்கள் (சனிக்கிழமை தவிர) இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு விரைவு ரெயில் (எண் 06419/06420) திங்கள்கிழமை முதல் வாரத்தின் 7 நாட்களும் இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×