search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கார் பந்தயத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்
    X

    கார் பந்தயத்தையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம்

    • போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
    • சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'சென்னை பார்முலா ரேசிங் சர்க்யூட்' என்னும் கார் பந்தயம் டிசம்பர் 9-ந்தேதி மற்றும் 10-ந்தேதிகளில் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வை கருத்தில் கொண்டு பின்வரும் சாலைகள் பந்தயச் சுற்றுகளாக உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    எனவே, அதற்கேற்ப போக்குவரத்து மாற்றங்கள் இன்று (17-ந்தேதி) இரவு முதல் டிசம்பர் 1-ந்தேதி வரை நடைமுறைப்படுத்தப்படுகிறது.

    அதன்படி, போர் நினைவிடத்தில் இருந்து வாலாஜா சந்திப்பு வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. ரிசர்வ் வங்கியின் சுரங்கப்பாதை பாரிமுனை வழியாக செல்லலாம். அதேசமயம், முத்துசாமி பாலத்தில் இருந்து கொடி மர சாலை நோக்கி வாகனங்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படும்.

    மேலும் அண்ணாசாலையில், பல்லவன் சாலை சந்திப்பு முதல் மண்ட்ரோ சிலை வரை, சுவாமி சிவானந்தா சாலையில், பெரியார் சிலை முதல் நேப்பியர் பாலம் வரை, காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் முதல் போர் நினைவிடம் வரை சாலைகள் குறுகலாக்கப்பட்டாலும் வாகனங்கள் வழக்கம்போல செல்லும். இந்த சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. கனரக வாகனங்கள் பல்லவன் சாலை, சுவாமி சிவானந்தா சாலை வழியாக திருப்பி விடப்படும். மேற்கண்ட தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×