search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விடுமுறையையொட்டி இன்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
    X

    சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகு சவாரி செய்த காட்சி.

    விடுமுறையையொட்டி இன்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

    • தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.
    • ஏற்காட்டில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காடு பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    விடுமுறை நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டிருக்கும் நிலையில் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

    படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில், கரடியூர், அண்ணா பூங்கா, லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ஆரஞ்சு பழ தோட்டம், காபி தோட்டம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று, இயற்கையின் அழகை கண்டு ரசித்தனர். இதில் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே புகைப்படம் எடுத்தும், குடும்பத்துடன் போழுது போக்கியும் மகிழ்ந்தனர்.

    ஏற்காட்டில் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் குளுமையான சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. பனிப்பொழிவும் நிலவியபடி உள்ளது. சுற்றுலா பயணிகள் வருகை தினமும் அதிகரித்தபடி உள்ளதால் ஏற்காட்டில் விளையும் காபி, வாசனை திரவியங்கள், ஏற்காடு மலையில் விளையும் ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள், வீட்டில் வைத்து வளர்க்கக்கூடிய அழகு செடிகள், பழ வகை செடிகள், அழகு சாதன பொருட்கள் விற்பனை களை கட்டுகின்றன. இவற்றை நர்சரி கார்டன், கடைகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.

    Next Story
    ×