search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அட்டவணை வெளியீடு
    X

    அடுத்த ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் அட்டவணை வெளியீடு

    • குரூப்-4 தேர்வு: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படுகிறது.
    • குரூப்-1 பணியிடத்தில் காலியாக உள்ள 65 இடங்களுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது.

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது.

    அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் எவ்வளவு?, அறிவிப்புகள் எப்போது வரும்?, தேர்வு எப்போது நடக்கும்?, தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? என்ற தகவல்கள் அடங்கிய ஆண்டு திட்டங்களை அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிடும்.

    அந்த வகையில், 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வுகள் தொடர்பான ஆண்டு திட்ட உத்தேச அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டது. அட்டவணை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் விவரங்கள் பின்வருமாறு:-

    * குரூப்-4 தேர்வு: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படுகிறது.

    * குரூப்-1 பணியிடத்தில் காலியாக உள்ள 65 இடங்களுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வு ஜூலை மாதம் நடைபெறுகிறது.

    * குரூப்-2 மற்றும் 2ஏ: நேர்முக மற்றும் நேர்முக அல்லாத தேர்வுகளில் 1,294 பணியிடங்கள் உள்ளன. இதற்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகிறது. ஆகஸ்டு மாதம் தேர்வு நடைபெறும்.

    * சமூக நலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறையில் 2 உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) காலியாக உள்ளன. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, தேர்வுகள் மே மாதம் நடைபெறும்.

    * தமிழ்நாடு சட்டமன்றம் பணிகளில் ஆங்கில நிருபர் பணியிடத்தில் 6 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, தேர்வுகள் மே மாதம் நடக்கிறது.

    * வனத்துறையில் வனகாப்பாளர் மற்றும் வனக்கண்காணிப்பாளர் பணியிடத்தில் காலியாக உள்ள 1,264 இடங்களுக்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படுகிறது. இதற்கான தேர்வு ஜூன் மாதம் நடைபெறும்.

    * ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் சார்நிலைப்பணிகளில் 467 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான, அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வு, ஜூலை மாதம் நடக்கிறது.

    * ஒருங்கிணைந்த சட்ட சேவைகள் துறையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். இதற்கான தேர்வுகள், ஜூலை மாதம் நடக்கும்.

    * ஒருங்கிணைந்த அறிவியல் சேவைகள் தேர்வுகளில் 96 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகிறது. தேர்வு செப்டம்பர் மாதம் நடக்கும்.

    * ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப்பணிகளில் 23 காலியிடங்கள் உள்ளன. இதற்கான, அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும். தேர்வு, செப்டம்பர் மாதம் நடக்கும்.

    * ஒருங்கிணைந்த உடற்கல்வி சேவைகளில் 12 காலிப்பணியிடம் உள்ளன. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும். தேர்வு, அக்டோபர் மாதம் நடைபெறும்.

    * ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவி சார்நிலைப்பணிகளில் 1 காலிப்பணியிடம் உள்ளது. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும். தேர்வு, அக்டோபர் மாதம் நடைபெறும்.

    * தொல்லியல்துறை அதிகாரி மற்றும் உதவி அதிகாரி பணியிடங்களில் 14 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு, அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்படும். தேர்வு, அக்டோபர் மாதம் நடைபெறும்.

    * தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படும். தேர்வுகள், நவம்பர் மாதம் நடைபெறும்.

    * ஒருங்கிணைந்த கணக்குப்பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியாகிறது. தேர்வுகள் நவம்பர் மாதம் நடக்கிறது.

    * ஒருங்கிணைந்த நூலக பணிகள் தேர்வுகளுக்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வுகள் நவம்பர் மாதம் நடைபெறும்.

    * ஒருங்கிணைந்த என்ஜினீயரிங் பணிகளில், 47 காலியிடங்கள் உள்ளன. இதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிடப்படுகிறது. தேர்வு, 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது.

    டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள 2024-ம் ஆண்டுக்கான அட்டவணையில், குரூப்-4, தமிழ்நாடு மாநில நீதித்துறையில் உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், ஒருங்கிணைந்த கணக்குப்பணிகள், ஒருங்கிணைந்த நூலக பணிகள் ஆகிய பணியிடங்களுக்கான காலியிடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அறிவிக்கப்பட்டுள்ள காலியிடங்கள் மாற்றங்களுக்கு உட்பட்டது என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

    Next Story
    ×