search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டவுட்டன் மேம்பாலத்தில் பள்ளம்
    X

    டவுட்டன் மேம்பாலத்தில் பள்ளம்

    • பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை டவுட்டனில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய பல ஆண்டுகளுக்கு முன்பு பாலம் அமைக்கப்பட்டது. இது மிகவும் பழமையான பாலமாகும். இந்த பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் டவுட்டன் மேம்பாலம் தற்போது சேதம் அடைந்து வருகிறது.

    நெரிசல் மிகுந்த இந்த மேம்பாலத்தின் பல இடங்களில் பள்ளங்கள் மற்றும் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. பாலத்தில் 500 மீட்டர் தூரம் வரை ஆங்காங்கே பள்ளம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் இந்த பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

    இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்கு பிறகு இந்த பாலத்தில் செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் மழை பெய்யும் போது இந்த வழியாக செல்லும் வாகனங்களால் மேம்பாலம் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் வழுக்கி விழுந்து விபத்தை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. வாகன போக்குவரத்து தொடர்ந்து நடைபெறுவதால் பாலம் தினமும் கூடுதலாக சேதம் அடைந்து வருகிறது. மேலும் இந்த பகுதியில் பள்ளிகள் இருப்பதால் பாலத்தில் மாணவ-மாணவிகளை அழைத்து செல்லும் பெற்றோரும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'இந்த பாலத்தை சீரமைக்குமாறு அந்த துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். எனவே பாலம் விரைவில் சீரமைக்கப்படும்' என்றனர்.

    Next Story
    ×