search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மன்ற கூட்டங்களில் பங்கேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்வு- தமிழக அரசு அரசாணை வெளியிட்டது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மன்ற கூட்டங்களில் பங்கேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்வு- தமிழக அரசு அரசாணை வெளியிட்டது

    • மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை வாங்கி வந்த ரூ.100 இப்போது ரூ.1000 ஆக உயர்வு.
    • 1.19 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பலன் அடைவார்கள்.

    சென்னை:

    மன்ற கூட்டங்களில் பங்கேற்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அமர்வுப்படி 10 மடங்கு உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

    தமிழ்நாட்டில் மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள், உறுப்பினர்கள் மன்ற கூட்டங்களில் பங்கேற்கும் போது வழங்கப்படும் அமர்வுப்படி இப்போது உள்ளதை விட 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

    இதன்படி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இதுவரை வாங்கி வந்த ரூ.100 இப்போது ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் வாங்கி வந்த ரூ.75 இனிமேல் ரூ.750 ஆகவும், ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ.100-ல் இருந்து ரூ.500 ஆகவும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.250 ஆகவும் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 12,525 கிராம ஊராட்சி தலைவர்கள் 9,327 கிராம ஊராட்சி உறுப்பினர்கள், 388 ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், 6,471 ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், 36 மாவட்ட ஊராட்சி தலைவர்கள், 655 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 1.19 லட்சம் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் பலன் அடைவார்கள்.




    Next Story
    ×