search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக்குழுக்களை கலைக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்
    X

    அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக்குழுக்களை கலைக்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

    • மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சக பணியாளர்கள் மீதான இந்தித் திணிப்பு ஆகும்.
    • இந்தி மொழி என்பது நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    டெல்லியில் நடைபெற்ற மத்திய நலவாழ்வு அமைச்சகத்தின் இந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டாவியா, 'மாநில மொழிகளை நாம் பேசினாலும், தேசிய மொழி என்ற அடிப்படையில் இந்திக்கு மரியாதை அளிக்க வேண்டும். அனைவரும் இந்தியில் பேச வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். இது மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சக பணியாளர்கள் மீதான இந்தித் திணிப்பு ஆகும். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும். இந்தி மொழி என்பது நாட்டின் அலுவல் மொழி மட்டும் தான்.

    மத்திய அரசின் அலுவல்கள் முழுக்க முழுக்க இந்தியில் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து அமைச்சகங்களிலும் இந்தி ஆலோசனைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதே இந்தியை திணிக்கும் செயல் தான். பிறமொழி பேசும் மக்களுக்கு எதிரான இந்த அமைப்புகளை உடனடியாக மத்திய அரசு கலைக்க வேண்டும். எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×