search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமண ஆசை காட்டி மோசடி: சென்னை பெண்ணையும் ஏமாற்றிய போலி சுங்க அதிகாரி
    X

    திருமண ஆசை காட்டி மோசடி: சென்னை பெண்ணையும் ஏமாற்றிய போலி சுங்க அதிகாரி

    • ராமுவும், அவரது மனைவி லட்சுமியும் சேர்ந்து இதேபோல பல பெண்களை ஏமாற்றி பணம், நகை பறித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • ராமுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    கோவை:

    கோவைப்புதூர் அருகே உள்ள அறிவொளி நகரை சேர்ந்தவர் 37 வயது பெண். இவரது கணவர் இறந்து விட்டார். இதனையடுத்து அவர் 2-வது திருமணம் செய்வதற்காக திருமண தகவல் மையம் மூலம் இணையதளத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

    இதனை பார்த்த சின்ன தடாகத்தை சேர்ந்த ராமு என்பவர் பெண்ணை தொடர்பு கொண்டு தான் சுங்கத்துறையில் இணை கமிஷனராக பணியாற்றுவதாகவும், தனக்கு திருமணமாகி மனைவி விவாகரத்து பெற்று சென்று விட்டதால் திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார்.

    கடந்த மாதம் 17-ந்தேதி பெண் ராமுவை சந்திக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து ராமு சீருடை அணிந்து சென்று பெண்ணை சந்தித்து பேசினார்.

    பின்னர் ராமுவின் பேச்சை நம்பிய பெண் அவரை திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்தார். 2 பேரும் அடுத்த மாதம் திருமணம் செய்வது என முடிவு செய்தனர்.

    இந்தநிலையில் ராமு பெண்ணை கடைக்கு அழைத்து சென்று ரூ.50 ஆயிரத்துக்கு துணிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கினார். மேலும் பெண்ணை தொடர்பு கொண்ட ராமு தனது விவாகரத்து ஆன மனைவி ரூ.25 ஆயிரம் பணம் கேட்பதாக தெரிவித்தார். நாம் திருமணம் செய்ய உள்ளதால் அவர் கேட்பதால் பணம் கொடுக்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து பெண் ஆன்லைன் மூலமாக ராமுவுக்கு ரூ.25 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார்.

    அதன் பின்னர் அவர் பெண்ணிடம் பேசுவதையும் பழகுவதையும் தவிர்ந்து வந்தார். இதனால் ராமு மீது பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சுங்கத்துறை அலுவலகத்துக்கு சென்று ராமு என்பவர் இணை கமிஷனராக வேலை பார்க்கிறாரா என விசாரணை நடத்தினார். அப்போது அப்படி யாரும் வேலை பார்க்கவில்லை என்பது அவருக்கு தெரிவந்தது. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி சுங்கத்துறை அதிகாரியாக நடித்து பெண்ணிடம் ரூ.75 ஆயிரம் மோசடி செய்த ராமுவை கைது செய்தனர். இதற்கு உந்தையாக இருந்த அவரது மனைவி லட்சுமி (34) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் கணவன்-மனைவி இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட ராமு இதேபோல சென்னை கூடுவாஞ்சேரியை சேர்ந்த பெண்ணிடம் தான் சுங்கத்துறை அதிகாரி என கூறி அறிமுகமாகி உள்ளார்.

    பின்னர் அவர் அந்த பெண்ணிடம் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலமாக பயணிகள் கடத்தி வந்த தங்க நகைகள் தன்னிடம் ஏராளமாக உள்ளதாக கூறி அந்த பெண்ணிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இது குறித்து அரும்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ராமுவும், அவரது மனைவி லட்சுமியும் சேர்ந்து இதேபோல பல பெண்களை ஏமாற்றி பணம், நகை பறித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் ராமுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.

    Next Story
    ×