search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலாஷேத்ரா விவகாரம்- நாளை மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
    X

    கலாஷேத்ரா விவகாரம்- நாளை மனித உரிமைகள் ஆணையம் விசாரணை

    • ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ளது.
    • நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    மத்திய அரசின் கலாசாரத்துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவி ஒருவர் அடையார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில், ஹரி பத்மன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், உல்லாசத்துக்கு வீட்டுக்கு அழைத்ததாகவும், அவரது தொல்லை தாங்காமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் கூறியிருந்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயகுமாரி, கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 3 கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தார். மாதவரத்தில் உள்ள நண்பரின் வீட்டில் பதுங்கி இருந்த ஹரி பத்மன் கைது செய்யப்பட்டார்.

    கலாஷேத்ராவில் எழுந்துள்ள பாலியல் புகார் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி, டி.ஜி.பி. மற்றும் டாக்டர் அடங்கிய விசாரணை குழுவை கலாஷேத்ரா அறக்கட்டளை அமைத்துள்ளது.

    இந்நிலையில், பாலியல் புகார் தொடர்பாக கலாஷேத்ரா கல்லூரியில், நாளை மனித உரிமைகள் ஆணையத்தின் குழு விசாரணை நடத்த உள்ளது. ஏற்கனவே மகளிர் ஆணையம் விசாரித்து வரும் நிலையில் மனித உரிமைகள் ஆணையமும் நாளை விசாரணையை தொடங்குகிறது. ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

    Next Story
    ×