search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்: தே.மு.தி.க. முடிவு என்ன?- பிரேமலதா இன்று ஆலோசனை
    X

    ஈரோடு இடைத்தேர்தல்: தே.மு.தி.க. முடிவு என்ன?- பிரேமலதா இன்று ஆலோசனை

    • பிரேமலதா விஜயகாந்த் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
    • காங்கிரஸ் வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்குமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதா? வேண்டாமா? என்பது குறித்து தே.மு.தி.க. இன்று முடிவு செய்கிறது.

    கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் தே.மு.தி.க. நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. கடந்த சட்டமன்ற தேர்தலில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக கூட்டணியில் இருந்து வெளியேறி டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் அந்த கட்சிக்கு தோல்வியே மிஞ்சியது.

    எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கூட்டணி பற்றி முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியிலேயே தே.மு.தி.க. இடம் பெற விரும்புவதாக கூறப்படுகிறது.

    இதனை கருத்தில் கொண்டு பிரேமலதா ஆலோசித்து வருகிறார். எனவே காங்கிரஸ் வேட்பாளருக்கு தே.மு.தி.க. ஆதரவு அளிக்குமா? என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

    அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடாமல் புறக்கணித்து விட்டு யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்து விடலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பிரேமலதா இறுதி முடிவு இன்று எடுத்து அறிவிக்க உள்ளார்.

    Next Story
    ×