search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலைவலி, வாந்தி அதிகரித்தால் கவனம் தேவை...
    X

    தலைவலி, வாந்தி அதிகரித்தால் கவனம் தேவை...

    • தண்ணீருக்கு பதிலாக இளநீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.
    • உடலை முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    சென்னை:

    பருவமழை காலமான செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் வரை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். இந்த ஆண்டும் டெங்கு பரவல் அதிகரித்துள்ளது.

    சென்னையில் டெங்கு பாதித்து பலர் சிகிச்சை பெறுகிறார்கள். போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 22-ந்தேதி அயப்பாக்கத்தை சேர்ந்த பூஜா (30) என்பவர் டெங்கு பாதித்து சிகிச்சையில் சேர்ந்தார். சர்க்கரை நோயாளியாக இருந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதே போல் பூந்தமல்லியை சேர்ந்த 15 வயது சிறுவனும் டெங்கு பாதிப்பால் உயிரிழந்தார்.

    தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7 பேர் இறந்து இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெங்குவை பரப்பும் கொசுக்கள் பகல் நேரங்களில் தான் கடிக்கின்றன. எனவே உடலை முழுவதும் மறைக்கும் வகையிலான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.

    பகல் நேரங்களில் தூங்கினால் கொசு வலைகளை பயன்படுத்துவது நல்லது. கதவு, ஜன்னல்களுக்கு கொசு வலை அடித்துக் கொள்ள வேண்டும்.

    டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்கள் திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். தண்ணீருக்கு பதிலாக இளநீர், பழச்சாறு, மோர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ளலாம்.

    ஸ்டீராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளான இபு புரூபன், ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் எடுத்துக் கொள்வது ரத்தபோக்கு அபாயம் ஏற்படும்.

    வாந்தி, மூச்சுவிட சிரமம், தலைசுற்றல், மூக்கு, பல் ஈறுகளில் இருந்து ரத்தம் வழிவது தீவிர டெங்கு பாதிப்பாக இருக்கலாம். இந்த மாதிரி அறிகுறி உள்ளவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இப்படிப்பட்ட அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

    Next Story
    ×