search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    107-வது வார்டில் சேதமடைந்த கவுன்சிலர் அலுவலகத்தை சீரமைக்க வேண்டும்- மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்
    X

    107-வது வார்டில் சேதமடைந்த கவுன்சிலர் அலுவலகத்தை சீரமைக்க வேண்டும்- மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வலியுறுத்தல்

    • அனைத்து கட்சி கவுன்சிலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு பாராட்டுகளை பெற்றது.
    • ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள தேவைகளை சரி செய்து தரும்படியும் கவுன்சிலர் கிரண் ஷர்மிலி வினோத் குமார் கோரிக்கை விடுத்தார்.

    சென்னை:

    சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி 107-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கிரண் ஷர்மிலி வினோத்குமார் 107-வது வார்டு சார்ந்த கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். கூட்டத்தில் பேச தொடங்கியதும் கட்சியின் தலைவர் டாக்டர் தொல். திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். பின்னர் தனது வார்டு பிரச்சினை தொடர்பான கோரிக்கைகளை முன் வைத்து பேசினார். அவரது பெரும்பாலான கோரிக்கைகள் அங்கு இருந்த அனைத்து கட்சி கவுன்சிலர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டு பாராட்டுகளை பெற்றது.

    முக்கியமாக அவருடைய வார்டு கவுன்சிலர் அலுவலகம் பெரிதும் சேதம் அடைந்துள்ளதாகவும் அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும் அமைந்தகரையில் உள்ள எம் எச் காலனியில் உள்ள பழுதடைந்த பாலதை சரி செய்து தரும்படியும் கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், காண்ட்ராக்ட் ஒப்பந்த புள்ளிகளை கோரும் போது அதில் பங்கேற்கும் ஒப்பந்ததாரர்கள் குறைவான மதிப்பிற்கு ஒப்பந்தங்களை கோருகிறார்கள். இதில் யார் குறைவாக மதிப்பீடு செய்கிறார்களோ அவர்களுக்கு ஒப்பந்தம் கொடுக்கப்படுகிறது.

    இதனால் தரமற்ற வேலைகள் நடப்பதாகவும் இதற்கு ஒரு வரைமுறை செய்ய வேண்டும் என்றும் மேயருக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்துப் பேசிய வணக்கத்திற்குரிய மேயர், 50 லட்சம் வரை லிமிடெட் டெண்டர் கொடுக்கலாம் என்று அரசு உத்தரவு உள்ளதாகவும் அதை பின்பற்றலாம் என்றும் தெரிவித்தார். அப்போது அனைத்து கவுன்சிலர்களும் கைகளை தட்டி வரவேற்றனர். மேலும் ஆரம்ப சுகாதார மையத்தில் உள்ள தேவைகளை சரி செய்து தரும்படியும் கவுன்சிலர் கிரண் ஷர்மிலி வினோத் குமார் கோரிக்கை விடுத்தார்.

    Next Story
    ×