search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் 150 லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
    X

    கோவையில் 150 லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்

    • கோவையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், மாட்டு தீவன மானியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    வடவள்ளி:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று கோவையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலாந்துறையில் உள்ள நாதேகவுண்டன்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகே 150 லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவை மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கோவை மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் இந்த போராட்டம் நடந்தது.

    பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும், மாட்டு தீவன மானியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

    போராட்டத்துக்கு தமிழக விவசாய சங்க தொண்டாமுத்தூர் வட்டாரத் தலைவர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து அவர் கூறியதாவது:-

    விவசாயிகள் உற்பத்தி செய்யும் எந்த பொருட்களுக்கும் சரியான விலை கிடைப்பது இல்லை. பாலுக்கான கொள்முதல் விலை குறைந்த அளவே வழங்கப்படுவதால் மாடுகளை வைத்து பராமரிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. மாடு ஒன்றுக்கு ஒரு நாள் பராமரிப்பு செலவு ரூ.250 ஆகிறது. நஷ்டத்திற்கு இடையே பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் பாலகம் உற்பத்தி லாபத் தொகை, ஊக்கத்தொகை போன்றவற்றை கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.

    ஆனால் பக்கத்து மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலுக்கு 48 ரூபாய் வரை அரசு கொடுக்கிறது. தமிழக அரசால் ஏன் கொடுக்க முடிவதில்லை. எனவே அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு லிட்டருக்கு 50 ரூபாய் வரையில் விலை கொடுக்க வேண்டும்.பால் விலையை உயர்த்த வில்லை என்றால் ஒரு வாரத்தில் பச்சாபாளையத்தில் உள்ள ஆவின் பாலகத்தை முற்றுகையிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×