search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல் காந்தி தகுதி நீக்கம்- மத்திய அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் டுவீட்
    X

    ராகுல் காந்தி தகுதி நீக்கம்- மத்திய அரசை கண்டித்து உதயநிதி ஸ்டாலின் டுவீட்

    • தமிழக விளையாட்டுத்த துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    • =எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது.

    அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    அவர் மீதான நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழக விளையாட்டுத்த துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தேர்தல் பேச்சு தொடர்பாக பாஜகவினர் தொடர்ந்த அவதூறு வழக்கில், காங்கிரஸின் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறையென தீர்ப்பு வந்ததும், அவரை எம்.பி பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ள மத்திய பாஜக அரசை வன்மையாக கண்டிக்கிறேன். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பாசிஸ்ட்டுகளை அச்சமூட்டியுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×