search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையப்பர் கோவிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
    X

    நெல்லையப்பர் கோவிலில் விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டம்- அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

    • நெல்லையப்பர் கோவிலில் இன்றும், நாளையும் கோவில் கொடை விழா நடப்பதால் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.
    • மணவாளக்குறிச்சியில் தங்கும் அமைச்சர் சேகர்பாபு, நாளை திருவட்டாறில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார்.

    நெல்லை:

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு இன்று வருகை தந்துள்ளார்.

    இதற்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 7 மணிக்கு தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவர் வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலமாக நெல்லை வண்ணார்பேட்டை அரசினர் சுற்றுலா மாளிகைக்கு வந்தடைந்தார்.

    பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள பேராட்சி செல்வியம்மன் கோவிலில் நடைபெற்றுவரும் திருப்பணிகளை அவர் ஆய்வு செய்தார். அங்கு இன்றும், நாளையும் கோவில் கொடை விழா நடப்பதால் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்தார்.

    அதனை தொடர்ந்து நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலுக்கு சென்று ஆய்வு செய்யும் அமைச்சர், அங்கு விரிவுப்படுத்தப்பட்ட அன்னதான திட்டத்தை ஆய்வு செய்தார்.

    அப்போது அவருடன் இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் கவிதா பிரியதர்ஷினி, 11-வது வார்டு கவுன்சிலர் கந்தன், தி.மு.க. நிர்வாகிகள் கணேஷ்குமார் ஆதித்தன், வக்கீல் செல்வசூடாமணி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலமாக காலை 10.30 மணிக்கு களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் கட்டப்பட்டு வரும் சிவன் சன்னதி கட்டுமான பணிகளை ஆய்வு செய்துவிட்டு சுவாமி தரிசனம் செய்தார். அங்கிருந்து குமரி மாவட்டத்திற்கு சென்று பல்வேறு கோவில்களில் ஆய்வு பணியை மேற்கொள்கிறார்.

    இரவில் மணவாளக்குறிச்சியில் தங்கும் அமைச்சர் சேகர்பாபு, நாளை திருவட்டாறில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்கிறார். அதன்பின் இரவில் திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    Next Story
    ×