என் மலர்

  தமிழ்நாடு

  தமிழகத்தில் 24-ந் தேதி 50 மெகா முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
  X

  தமிழகத்தில் 24-ந் தேதி 50 மெகா முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கோவை விமான நிலையத்தில் ஒரு ஆர்டிபிசிஆர் மையம் தயார் நிலையில் இருக்கிறது.
  • பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

  கோவை:

  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவையில் ஆய்வு மேற்கொண்டார். கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தமிழகத்தில் விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

  அந்த வகையில் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கோவை விமான நிலையத்தில் ஒரு ஆர்டிபிசிஆர் மையம் தயார் நிலையில் இருக்கிறது. அதேபோல இந்த பாதிப்புகளோடு வந்தால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கான ஒரு படுக்கையுடன் கூடிய ஒரு அறையும் தயாராக உள்ளது.

  கேரளா-தமிழகம் இடையே பொள்ளாச்சி, வாளையாறு உள்பட 13 இடங்களில் தரைமார்க்கமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து செல்வோரை சோதனை மையம் அமைத்து கண்காணித்து வருகிறோம். குறிப்பாக குழந்தைகளுக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம்.

  முகங்களிலோ அல்லது முழங்கைக்கு கீழேயோ கொப்பளங்கள் வந்தால் அவர்களை உடனடியாக பரிசோதிப்பது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

  பூஸ்டர் தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் ஒரே நாளில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. வருகிற 24-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்த உள்ளோம். அதில் அதிகமாக பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை செய்ய உள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×