search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் கட்டுமான நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை
    X

    வருமான வரித்துறை

    தனியார் கட்டுமான நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை

    • தனியார் கட்டுமான நிறுவனத்தில் 3-வது நாளாக வருமான வரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.
    • வருமான வரி சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    மதுரை கோச்சடை விசாலாட்சி நகரைச் சேர்ந்தவர் ராமு. இவரது மகன்கள் முருகப்பெருமாள் மற்றும் சரவணப்பெருமாள். இவர்களுக்கு சொந்தமான ஆர்.ஆர். இன்ப்ரோ கட்டுமான நிறுவனம் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தேனி, திண்டுக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள கோசுகுறிச்சி சாலையில் இவர்களுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் நத்தம்-துவரங்குறிச்சி 4 வழிச்சாலை கட்டுமானப்பணிகள் நடந்து வருகிறது.

    இவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு நெடுஞ்சாலைத்துறை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என கூறப்படும் இவர்கள் வரி ஏய்ப்பு செய்தாகவும் புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாளாக நத்தம் அருகில் உள்ள ஆர்.ஆர். இன்ப்ரோ கண்ஸ்ட்ரக்சன்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இன்று 3-வது நாளாக வருமானவரி சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சோதனையில் முக்கியமான ஆவணங்கள் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள சின்னகரட்டுப்பட்டி, மார்க்கம்பட்டி பகுதியில் உள்ள இந்நிறுவனத்துக்கு சொந்தமான கல்குவாரி மற்றும் அலுவலகங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×