என் மலர்

  தமிழ்நாடு

  தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது
  X

  தங்க நகை

  தங்கம் விலை மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த மாத இறுதியில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.
  • தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது.

  சென்னை:

  தங்கம் விலை கடந்த மாதம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

  கடந்த மாத இறுதியில் தங்கம் விலை பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. கடந்த 1-ந்தேதி ஒரு பவுன் ரூ.38,360-க்கு விற்கப்பட்டது. மறுநாள் பவுனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.38,560-க்கு விற்கப்பட்டது.

  கடந்த 4-ந்தேதி தங்கம் விலை திடீரென்று ரூ.38,920 ஆக அதிகரித்தது. 5-ந்தேதி சற்றே குறைந்து ரூ.38,760-க்கு விற்பனையானது. மறுநாளும் அதேவிலையில் நீடிக்கிறது. நேற்று பவுனுக்கு ரூ.40 அதிகரித்து ரூ.38,800 ஆக உயர்ந்தது.

  இந்த நிலையில் தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து மீண்டும் ரூ.39 ஆயிரத்தை தாண்டியது. தங்கம் இன்று பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.39,040-க்கு விற்கப்படுகிறது.

  தங்கம் விலை இதற்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி ரூ.39 ஆயிரத்தை தாண்டி ரூ.39,024-க்கு விற்பனையானது. அதன் பிறகு மார்ச் 8-ந்தேதி வரலாறு காணாத வகையில் ரூ.40,448 ஆக உயர்ந்தது.

  அதன்பிறகு சற்று விலை ஏற்ற இறக்கமாக காணப்பட்டாலும் ஏப்ரல் 18-ந் தேதி மீண்டும் ரூ.40,400-க்கு விற்பனையானது. அதன் பிறகு மே, ஜூன், ஜூலை மாதங்களில் விலை குறைந்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் தற்போது உயர்ந்து ரூ.39 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

  நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,850-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.30 அதிகரித்து ரூ.4,880-க்கு விற்கப்படுகிறது.

  இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.63-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.64.50-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.64,500-க்கு விற்பனையாகிறது.

  Next Story
  ×