search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன்- இளங்கோவன்
    X

    சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க மாட்டேன்- இளங்கோவன்

    • அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வாக்குப்பதிவின்போது தேர்தல் திருப்திகரமாக நடப்பதாக கூறினார்.
    • வாக்கு எண்ணிக்கையின்போது தோல்வி அடைந்ததும் பணநாயகம் வென்றதாக மாற்றி கூறுகிறார்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றதை தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக அவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

    இப்போது சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக கு.செல்வபெருந்தகை இருக்கிறார். அவரை மாற்ற வேண்டும் என்று ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புகார் கொடுத்தனர்.

    ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றால் அவர்தான் சட்டமன்ற குழு தலைவர் ஆவார். கட்சியின் மூத்த தலைவர். காங்கிரசில் நீண்டகால அனுபவம் பெற்றவர். எனவே, அவரைத்தான் தலைவராக்க விரும்புவார்கள் என்ற பேச்சு அடிபடுகிறது.

    இதுபற்றி அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து விட்டு வெளியே வந்தபோது இளங்கோவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த அவர் இப்போது அதற்கான தேவை ஏற்படவில்லையே. இப்போது அந்த பதவியில் இருப்பவர் நன்றாகத்தானே செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்று கூறியிருக்கிறார். எனவே, காங்கிரஸ் குழு தலைவர் பதவியை அவர் ஏற்க மாட்டார் என்று கூறப்பட்டது.

    ஆனால் இளங்கோவன் பேட்டி அளித்தபோது செல்வபெருந்தகையும் அருகில் நின்றதாகவும் அதனால்தான் அவர் அப்படி கூறினார் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு வாக்குப்பதிவின்போது தேர்தல் திருப்திகரமாக நடப்பதாக கூறினார்.

    ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது தோல்வி அடைந்ததும் பணநாயகம் வென்றதாக மாற்றி கூறுகிறார். எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் இப்படி மாற்றி கூறினார் என்றார்.

    Next Story
    ×